Home 2024
Yearly Archives: 2024
ஆடிஷன் என்ற பெயரில் பாலியல் துன்புறுத்தல்: நடிகை காவ்யா தாபர் புகார்
தமிழில், மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ், பிச்சைக்காரன் 2 படங்களில் நடித்தவர் காவ்யா தாபர். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், சினிமாவுக்கு வரும் முன் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டதாக புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவ்யா தாபர் கூறும்போது, “சினிமாவுக்கு வரும் முன் விளம்பர படங்களில் நடித்து வந்தேன். அப்போது இயக்குநர் ஒருவர், ஆடிஷனுக்காக அவர் அலுவலகத்துக்கு அழைத்திருந்தார். சென்றேன். அவர் என்னிடம் பாலியல் சலுகையை எதிர்பார்த்தார். 4 வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் சொன்னார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். பிறகு அந்த வாய்ப்புகளை நிராகரித்துவிட்டு வந்துவிட்டேன்....
இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார் – திரையுலகம் அதிர்ச்சி
‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘சத்திய சோதனை’ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார். அவருக்கு வயது 41. அவரது மறைவு திரையுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கடந்த 2017-ல் வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படம் தான் சுரேஷ் சங்கையா இயக்கிய முதல் படம். புதுமண தம்பதியர்கள் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த ஆடு ஒன்றை பலி கொடுக்க சென்று இருப்பார்கள். அங்கு என்ன நடந்தது என்பதுதான் கதை. விமர்சன ரீதியாக இந்தப் படம் கவனம் பெற்றது.
தொடர்ந்து கடந்த 2023-ல்...
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி! – சஞ்சு, திலக் வர்மா அசத்தல்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் டர்பனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கெபர்காவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் பதிலடி கொடுத்த தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில்...
பிசிசிஐ எதிர்ப்பு எதிரொலி: சாம்பியன்ஸ் டிராபி கோப்பை சுற்றுப்பயணத்தை நிறுத்தி வைத்தது ஐசிசி
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைக்கு பிசிசிஐ கடும் ஆட்சேபனை தெரிவித்ததைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சாம்பியன்ஸ் டிராபி சுற்றுப்பயணத்தை ஐசிசி நிறுத்தி வைத்தது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 2025-ம் ஆண்டு பிரப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொடரில் பங்கேற்க இந்திய அணியை அனுப்ப முடியாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்களை துபாயில் நடத்த வேண்டும் என ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்தது. ஆனால்...
14-வது தேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டியில் ஒடிசா – ஹரியானா இன்று பலப்பரீட்சை
ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் மணிப்பூர் - ஒடிசா மோதின.
இதில் ஒடிசா 4-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. ஒடிசா அணி தரப்பில் நிலம் சஞ்ஜீப் (13-வது நிமிடம்), லக்ரா ஷில்லானந்த் (20-வது நிமிடம்), குஜூர் பிரசாத் (52-வது நிமிடம்), சந்தீப் ஷிராம்கோ (52-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் ஹரியானா...
தங்களது 2-வது குழந்தையை வரவேற்றுள்ளனர் ரோஹித் – ரித்திகா தம்பதி!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரித்திகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தம்பதியின் இரண்டாவது குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் டிராபி கிரிக்கெட் தொடருக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. தன் மனைவி ரித்திகாவின் பேறு காலம் நெருங்கிய காரணத்தால் ரோஹித் இந்தியாவில் உள்ளார். இந்த நிலையில் அவர்களுக்கு நேற்று (நவ.15) ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து ரோஹித் தரப்பில் இன்னும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
கடந்த 2015 டிசம்பரில் ரோஹித் மற்றும்...
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் திசாநாயக்க கூட்டணி அமோக வெற்றி – சாத்தியமானது எப்படி?
இலங்கை நாடாளுமன்ற தேர் தலில், அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை என்பிபி கூட்டணி பெற்றுள்ளது.
இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று, புதிய அதிபராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 24-ம் தேதி இலங்கை...
ட்ரம்ப் பதவிக்கு வருவதால் உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்: ஜெலென்ஸ்கி
டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபர் பதவிக்கு வருவதால் உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரேனிய ஊடகமான Suspilne க்கு அளித்த பேட்டியில், “டொனால்டு ட்ரம்ப் அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் விரைவில் முடிவுக்கு வரும். இப்போது வெள்ளை மாளிகையை வழிநடத்தும் புதிய அணியின் கொள்கைகளே இதற்குக் காரணமாக இருக்கும். நிச்சயம் இது நடக்கும். ஏனெனில், இது அவர்களின் அணுகுமுறை, அவர்களின் குடிமக்களுக்கு அவர்கள் அளித்த வாக்குறுதி.” என...
மஸ்க்கால் போர்க்களமான ‘எக்ஸ்’ தளம்!
பிரபலமாக இருந்த ‘ட்விட்டர்’ நிறுவனத்தைக் கையகப்படுத்தி ’எக்ஸ்’ எனப் பெயர் மாற்றியது முதல் ஏட்டிக்குப் போட்டியாகப் பல விஷயங்களைச் செய்து வருகிறார் தொழிலதிபர் எலான் மஸ்க். 2022-ல் ‘எக்ஸ்’ தளத்தின் சிஇஓவாகப் பதவியேற்ற வேகத்தில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது, ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, பயனர்களிடம் சந்தா வசூலிக்க ஆரம்பித்தது என தனது இஷ்டப்படி மாற்றங்களைச் செய்து வருகிறார் மஸ்க்.
இதனால் பலரது ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானலும் அவர் தனது நடவடிக்கைகளை நிறுத்துவதாக இல்லை. இதனால் உலகளவில் அதிருப்தியடைந்த பயனர்கள், கூட்டமாக ‘எக்ஸ்’ தளத்தைவிட்டு வெளியேறினர்....
நியூயார்க் | ஐ.நா-வுக்கான ஈரான் தூதருடன் எலான் மஸ்க் ரகசிய சந்திப்பு: பின்னணி என்ன?
மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வரும் சூழலில், நியூயார்க்கில் ஐ.நாவுக்கான ஈரான் தூதரை, ட்ரம்ப் அரசின் செயல்திறன் நிறுவனத்தின் இணை இயக்குநரான எலான் மஸ்க் ரகசியமாக சந்தித்துள்ளதாகவும், அமெரிக்கா- ஈரான் இடையிலான பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக மகுடம் சூட உள்ளார். இச்சூழலில், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் எப்போது வேண்டுமானாலும் முழுவீச்சில் மூளும் என்பதால்,...













