Google search engine
Home 2024

Yearly Archives: 2024

கிண்டி அரசு மருத்துவமனையில் திடீர் மின்தடையால் நோயாளிகள் அவதி

சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட மின் தடையால் நோயாளிகள் பாதிக்கப் பட்டனர். சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக 300 முதல் 500 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் மின்சாரம் எடுத்துச்செல்லும் கேபிள்களில் நேற்று இரவு 8.30 மணி அளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு, மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால், நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தமிழக சுகாதாரத்துறை செயலர் சுப்ரியா சாகு அங்கு விரைந்து சென்று...

குமரி: பொது மக்களுக்கு சிலம்ப விளையாட்டு விழிப்புணர்வு

கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் AVD மேல்நிலைப்பள்ளியில் பொது மக்களுக்கு சிலம்ப விளையாட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SISA BOOK உலக சாதனைக்கு முயற்சி செய்து வெற்றியும் அடைந்தனர். சிலம்பம் 65 நிமிடம் தொடர்ந்து நிற்காமல் சிலம்பம் சுற்றினர் மாணவர்களை காண வந்திருந்த பொதுமக்களுக்கும் பெற்றோர்களும் வியப்பில் இருந்தனர். இதனை தலைமை ஏற்று புதூர் N.ஸ்ரீராம் ஆசான் சிலம்பப் பள்ளியின் குரு ஸ்ரீ.ஜெயகண்ணன் M.A தலைமை ஏற்று நடத்தி வந்தார். நிகழ்ச்சிக்கு டாக்டர்.சிலம்பு சுரேஷ் முன்னிலை வகித்து தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உற்சாகமூட்டினார்.  மேலும் SISA World...

குமரி: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு…

மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு. வாண வேடிக்கை மற்றும் பக்தர்களின் கோஷத்துடன் நடை திறக்கப்பட்டது. இந்த நிகழ்வைக் காண 30,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். வழக்கமாக மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் நிலையில், இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருப்பதால் முன்கூட்டியே மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான மண்டல பூஜை டிச.26ம் தேதியும், மகரவிளக்கு பூஜை ஜன.14ம் தேதியும் நடைபெறுகிறது.

புதுக்கடை: கோவில் கொள்ளை இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

புதுக்கடை அருகே பார்த்திப்புரத்தில் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி கோவில் உள்ளது. மிகப் பழமைவாய்ந்த இந்த கோவிலில் உள்ள ஐம்பொன் சிலை, மற்றும் வெள்ளிக் கவசங்கள் நேற்றுமுன்தினம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. மத்திய தொல்லியல் துறை மற்றும் தமிழக அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் இருதுறை இழுபறியால் முறையாக பூஜைகள் உள்ளிட்ட எதுவும் நடைபெறவில்லை என்ற புகார் உள்ளது. மேலும் கோவிலில் காவலர்கள் இல்லை என்ற புகாரும் உள்ளது.  இந்த நிலையில் இந்தக் கொள்ளை சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த நிலையில்...

மண்டைக்காடு: கடன் தொல்லையால் பெண் தூக்கிட்டு தற்கொலை

மண்டைக்காடு அருகே அழகன்பாறையை சேர்ந்தவர் வின்சென்ட் மனைவி ஆன்றலின் சுஜா (47). வீட்டருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். சுய உதவிக்குழுக்களில் பணம் கடன் பெற்று அதனை திருப்பிச் செலுத்த வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வின்சென்ட் வேலைக்குச் சென்று விட்டார். மகன் கல்லூரிச் சென்று, மாலையில் வரும்போது வீடு உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து மகன் உள்ளே சென்று பார்க்கும்போது சுஜா மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்...

குமரி: மழையால் ரம்மியமாக காட்சியளிக்கும் பேச்சிப்பாறை அணை

குமரியில் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை அணையும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு பெரும்பாலான நாட்களிலும் 35 அடிக்கு அதிகமான தண்ணீர் இருந்து வந்தது. தற்போது நிரம்பிய நிலையில் எல்லா பக்கங்களிலும் நீர் சூழ்ந்து கடல்போல் காட்சியளிக்கிறது, காற்றின் வேகத்தில் கடலில் அலை எழும்புவது போன்று அலை எழும்புகிறது. எல்லா பகுதிகளிலும் நீர் சூழ்ந்து காணப்படுவதால் நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள மலைகுன்றுகள் தீவுகளாக காட்சியளிக்கிறது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் திரும்பிய பக்கங்கள் எல்லாம்...

மார்த்தாண்டம்: தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோவை இழுத்து போராட்டம்

குமரி மாவட்டம் திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை பகுதி களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில் பழுதடைந்து பாதுகாப்பின்றி காணப்படுகிறது. இதனால் பல்வேறு விபத்துகள் நடப்பதாக புகார்கள் உள்ளன. குறிப்பாக மார்த்தாண்டம் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள சாலை பல இடங்களில் பழுதடைந்து மிகவும் மோசமாக உள்ளது. படுகுழிகளுடன் காணப்படும் இந்த சாலையில் விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.  அந்த பகுதி சாலை சீரமைக்க கேட்டு பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று...

நித்திரவிளை: ஊர் எல்லை பிரச்சனை; 20 பேர் மீது வழக்கு

நித்திரவிளை அருகே பூத்துறை மீனவ கிராமத்தினருக்கும் இரையுமன்துறை கிராமத்தினருக்கும் பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் கடல் அலை தடுப்பு சுவருக்கு பெரிய கல் கொண்டு செல்வது தொடர்பாக அடிக்கடி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இரு கிராமத்தை பிரிக்கும் வகையில் நடப்பட்டிருந்த எல்லைக்கல்லை காணவில்லை என்று பூத்துறை மீனவ கிராம மக்கள் கூட்டம் கூட்டிய நிலையில், நேற்று (15-ம் தேதி) பிற்பகல் பூத்துறை பங்கு நிர்வாகத்தினர் ஏற்கனவே கல் நின்றதாக கூறப்பட்ட பகுதியில் ஒரு எல்லை கல்லை கொண்டு...

பார்த்திபபுரம்: இந்து முன்னணியினர் 230 பேர் மீது வழக்கு

புதுக்கடை அருகே பார்த்திப்புரத்தில் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி கோவில் உள்ளது. மிகப் பழமைவாய்ந்த இந்த கோவிலில் உள்ள ஐம்பொன் சிலை, மற்றும் வெள்ளிக் கவசங்கள் கடந்த 13-ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. கோவிலில் கொள்ளையடித்த நபர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முஞ்சிறை ஒன்றிய இந்து முன்னணி சார்பில் நேற்று மாலை பார்த்திப்புரம் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஒன்றிய தலைவர் செல்வநாயகம் தலைமை வகித்தார். குமரி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ் உட்பட...

மிஸ் யூ: பிடிக்காத பெண்ணை காதலிக்கும் ஹீரோ!

‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ படங்களை இயக்கிய என்.ராஜசேகர் அடுத்து இயக்கும் படம், ‘மிஸ் யூ’. இதில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். ஆஷிகா ரங்கநாத், ஜேபி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், மாறன் என பலர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். 7 மைல்ஸ் பர் செகண்ட் நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கிறார். வரும் 29-ம் தேதி இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. படம் பற்றி இயக்குநர் என்.ராஜசேகர் கூறும்போது, “இது காதல் கதையை கொண்ட...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தமிழ்நாடு தேர்தல் 2026: நாகர்கோவில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

நாகர்கோவில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள நாகர்கோவில், தமிழக சட்டமன்றத்தின் 230வது தொகுதியாகும். நாகர்கோவில் மாநகராட்சி முழுமையாக இத்தொகுதியில் அடங்கும். வடிவீசுவரம், வடசேரி நீண்டகரை - ஏ, நீண்டகரை - பி, வேம்பனூர்...

கருணாஸ், நிமிஷா சஜயனின் ‘என்ன விலை’

கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்​பில் உரு​வாகி​யுள்ள படம் ‘என்ன விலை’. சஜீவ் பழூர் இயக்​கி​யுள்ள இதில் ஒய்​.ஜி. மகேந்​திரா, பூர்​ணிமா பாக்​ய​ராஜ், மோகன் ராம், லொள்ளு சபா சுவாமி​நாதன், கவி​தாலயா கிருஷ்ணன், தீபா...

பாண்​டி​ராஜ் இயக்​கத்தில் ஜெயராம், ஊர்​வசி

‘தலை​வன் தலை​வி’ படத்​தின் வெற்​றிக்​குப் பிறகு இயக்​குநர் ‘பசங்க’ பாண்​டி​ராஜ் இயக்​கும் படத்​துக்கு ‘பரிமளா அண்ட் கோ’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். ஜெய​ராம், ஊர்​வசி, சந்​தோஷ் சோபன், சஞ்​சனா கிருஷ்ண​மூர்த்​தி, சாண்​டி, அனந்​திகா சனில்​கு​மார்...