Home 2024
Yearly Archives: 2024
அமெரிக்காவில் அரசு வேலை குறைக்கப்படும்: ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய நிர்வாகி விவேக் ராமசாமி தகவல்
அமெரிக்காவில் அரசு வேலை பெருமளவில் குறைக்கப்படும் என, ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய நிர்வாகி விவேக் ராமசாமி கூறியுள்ளார்.
அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். அவரது பிரச்சார குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்கள் எல்லாம் முக்கிய பதவிகளில் பணியமர்த்தப்படவுள்ளனர். அமெரிக்க அரசு நிர்வாகத்தை மேம்படுத்த அரசு திறன் துறை உருவாக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இத்துறைக்கு பிரபல தொழிலதிபர்கள் எலான் மஸ்க், இந்திய அமெரிக்கர் விவேக் ராமசாமி ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்...
பிஹாரில் உயிரிழந்தவர்களின் உரிம துப்பாக்கி அரசிடம் ஒப்படைக்கப்படுவதில்லை: சட்டவிரோத நடவடிக்கைக்கு விற்பதாக புகார்
வட மாநிலங்களில் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளவர்கள், மற்றும் கவுரவத்துக்காக பலர் அரசிடம் அனுமதி பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர். ஒருவேளை துப்பாக்கிச் சூடு நடந்தால், எந்தச் சூழ்நிலையில் துப்பாக்கிச் சூடு நடந்தது. எத்தனை குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்று அவர்கள் அரசுக்கு கணக்கு காட்ட வேண்டும்.
துப்பாக்கிக்கான உரிமங்களை ஆட்சியர்கள் அளிக்கின்றனர். உரிமம் பெற்றவர்கள் இறந்து விட்டால் அதை அவர்களது வாரிசுகளில் ஒருவருக்கு மாற்றிக் கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. அல்லது அவரது வாரிசுகள் துப்பாக்கியை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். பழைய துப்பாக்கிக்கான ஒரு தொகையை அவர்களது வாரிசுகளுக்கு...
உ.பி. மருத்துவமனை தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் – நடந்தது என்ன?
உத்தர பிரதேசத்தின் ஜான்சி நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. காயமடைந்த 16 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்குள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் (என்ஐசியு) நேற்று முன்தினம் இரவு 10.45 மணி அளவில் திடீரென தீ...
தமிழகத்துக்கு 4 நாள் பயணமாக மத்திய நிதி ஆணைய குழுவினர் இன்று வருகை
மத்திய நிதி ஆணைய குழுவினர் 4 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகின்றனர். சென்னையில் முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் அவர்கள் நாளை ஆலோசனை நடத்துகின்றனர்.
மத்திய 16-வது நிதி ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழு இன்று தமிழகம் வருகிறது. இந்த குழுவில் ஆணைய உறுப்பினர்கள் அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சவுமியா காந்தி கோஷ், ஆணைய செயலர் ரித்விக் பாண்டே,இணை செயலர் ராகுல் ஜெயின் உள்ளிட்ட 12 பேர் சிறப்பு விமானத்தில் இன்று பிற்பகல்...
பஞ்சாபில் புதிய மாடல் சட்டம் ஒழுங்கு: டெல்லி முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் உறுதி
பஞ்சாப் காவல் துறையில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அர்விந்த் கேஜ்ரிவால் கூறியதாவது: பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு ஆட்சி அமைப்பதற்கு முன், சட்டம் ஒழுங்கு நிலை பரிதாபமாக இருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் மக்கள் ஆதரவுடன் பஞ்சாப் காவல் துறையில் மாற்றத்தை கொண்டு வந்தோம். பஞ்சாப் காவல் துறையில் இன்னும்...
டீசல் மீது கூடுதல் வரி திட்டத்தை கைவிட ஓபிஎஸ் வலியுறுத்தல்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4-ம் குறைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கை எண்.504-ல் குறிப்பிடப்பட்டு உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 தான் குறைத்தது. டீசல் விலையை குறைக்க வேயில்லை.
இந்தச் சூழ்நிலையில், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களால் ஏற்படும் செலவை ஈடுகட்ட டீசலுக்கு, மத்திய அரசின் பாணியில் கூடுதல்வரி விதிப்பது குறித்து...
சென்னைக்கு அருகே உலகத்தரத்தில் சர்வதேச விளையாட்டு நகரம்: அமைச்சர் உதயநிதி ஆலோசனை
‘விளையாட்டுத் துறையில் தமிழகத்தை முதல் மாநிலமாக்க சர்வதேச விளையாட்டு நகரம் உதவும்’ என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் சென்னைக்கு அருகே உலகத் தரத்திலான ‘சர்வதேச விளையாட்டு நகரம்’ அமைப்பதற்கான பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை முகாம் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். விளையாட்டுத்துறை செயலர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில், சர்வதேச விளையாட்டு நகரத்தை...
உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மீதான பார்வையில் பெரிய மாற்றம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்
இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வையில் கடந்த 10 ஆண்டுகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
திருவள்ளுவர், கபீர்தாஸ், யோகி வேமனா ஆகிய மூவரது ஒப்பீடு குறித்த சர்வதேச கருத்தரங்கம், ஆளுநர் மாளிகை சார்பில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: திருவள்ளுவர், கபீர்தாஸ், யோகி வேமனா ஆகிய 3 பேரும் வெவ்வேறு இடங்களில் பிறந்தவர்கள். ஆனால், அவர்கள் வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்தினர். இந்திய இலக்கியங்கள் எந்த மொழியில் இருந்தாலும், ஒற்றுமையை நன்கு வலியுறுத்துவதை காணலாம்....
நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் கைதானது எப்படி? – இன்று சென்னை அழைத்து வரப்படுகிறார்
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் போலீஸார் கைது செய்தனர்.
இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு பேசும்போது, தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு தெலுங்கு பேசும் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து கஸ்தூரி பேட்டி அளித்தார். அதேநேரத்தில் கஸ்தூரி மீது...
சென்னை – அடையார் மண்டலத்தில் நாளை குடிநீர் விநியோகம் பாதிக்கும்
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் அடையார் இந்திரா நகர் 2-வது அவென்யூவில் குடிநீர் பிரதான குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (நவ.18) இரவு 7 முதல் 19ம் தேதி காலை 5 மணி வரை பள்ளிபட்டு குடிநீர் பகிர்மான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்த செய்யப்படும்.
அதனால், அடையார் மண்டலத்துக்கு உட்பட்ட சில இடங்களில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி, அடையார் மண்டலம் 169-வது வார்டில் சைதாப்பேட்டை...













