Google search engine
Home 2024

Yearly Archives: 2024

விவசாயிகளுக்கு எந்த நன்மையும் செய்யாத திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

விவசாயிகளுக்கு திமுக அரசு எந்த நன்மையும் செய்யவில்லை, என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம் சாட்டினார். சேலம் மாவட்டம் மேச்சேரியை அடுத்த எம்.காளிப்பட்டியில், மேட்டூர் அணை உபரி நீரைக் கொண்டு 100 ஏரிகள் நிரப்பும் திட்டத்தை கொண்டு கொடுத்ததற்காக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமிக்கு, காவிரி உபரி நீர் நடவடிக்கை குழு, அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து ஆயக்கட்டு விவசாயிகள் சங்கத்தின் பாராட்டு விழா நேற்று நடந்தது. இதில், முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமிக்கு டிராக்டர், ஆடு பரிசாக...

விருதுநகர் மாவட்டத்தில் ‘மணக்கும் மல்லிகை’ சாகுபடி: சென்ட் ஆலை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

விருதுநகர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கரில் மதுரை மல்லிகை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்ட் ஆலை அமைத்து மல்லிகைக்கு அதிக விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, கோவிலாங்குளம், கட்டங்குடி, காரியாபட்டி, திருச்சுழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் மதுரை மல்லிகைப் பூ சாகுபடி செய்யப்படுகிறது. இவை, அருப்புக்கோட்டை, மதுரை சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மாவட்டத்தில் கொத்துச்செடி மல்லிகை மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் தோட்டக்கலைத் துறை மூலம் மல்லிகை...

வெள்ளிச்சந்தை: வாழை தோட்டத்தில் பிணமாக கிடந்த விவசாயி

குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் ராஜரத்தினம் (69). தோட்டத்தில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தார். இவர் கடந்த 14ஆம் தேதி தோட்டத்திற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார்.  பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் மகன் சிவராஜன் (38) என்பவர் தந்தையை பல்வேறு இடங்களில் தேடி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (15-ம் தேதி) வாழைத்தோட்டத்திற்கு அருகே மரம் வெட்ட சென்ற ஜெகதீஷ் என்பவர் ராஜரத்தினம் தலையில் காயத்துடன் இறந்து கிடப்பதை கண்டு இது தொடர்பாக உறவினர்களுக்கு தகவல்...

புதுக்கடை: கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

புதுக்கடை அருகே மேலங்கலம் பகுதி வட்டவிளையை சேர்ந்தவர் நாடான்கண்ணு மகன் கோபி ராஜன் (54). கூலித் தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தனியாக வசித்து வந்தார். உடல் நிலை பாதிப்பு காரணமாக மன வருத்தத்தில் இருந்தார்.நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டிற்கு செல்லவில்லை. நேற்று (16-ம் தேதி) காலையில் அந்த பகுதி நெடுமானி குளக்கரை பகுதியில் உள்ள பயணிகள் நிழலகத்தில் விஷம் குடித்து இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது தொடர்பாக அவர் சகோதரி கலா என்பவர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார்...

நித்திரவிளை: டெம்போவில் கடத்திய மண்ணெண்ணெய்  பறிமுதல்

குமரியில் பைபர் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் உள்ளது.  இந்த நிலையில் நேற்று (15-ம் தேதி) இரவு சுமார் 10 மணி அளவில் இனயம் பகுதியில் இருந்து கேரளா நோக்கி மினி டெம்போவில் மண்ணெண்ணெய் கடத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மங்காடு ஆற்றுப்பகுதியில் நித்திரவிளை போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது வந்த டெம்போவை நிறுத்துமாறு சைகை காட்டியபோது நிறுத்தாமல் சென்றுள்ளது. சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று பொன்னப்பநகர் என்ற...

இரையுமன்துறை: எல்லை பிரச்சனை – கலெக்டர் நேரில் ஆய்வு

இரையுமன்துறை அருகே பூத்துறை மீனவர் கிராமத்திற்கும் ஊர் எல்லை உறுதிப்படுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் தூண்டில் வளைவு பணிக்கு பாறாங்கல் கொண்டு செல்லவும் ஊர் மக்கள் தடை செய்திருந்தனர்.  இரு சம்பவங்கள் குறித்து கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் தலைமையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டருக்கு புகார் செய்யப்பட்டது. நேற்று (16-ம் தேதி) மாவட்ட கலெக்டர் அழகு மீனா சம்பவ இடத்தை வந்து பார்வையிட்டார். அப்போது பூத்துறை மீனவ கிராமத்தின் வழியாக தூண்டில் நுழைவு பணிக்கு பாறாங்கல் கொண்டு செல்லும் சாலையில்...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை இழந்தது பாகிஸ்தான்

சிட்னியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேத்யூ ஷார்ட் 32, ஆரோன் ஹார்டி 28, கிளென் மேக்ஸ்வெல் 21, ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் 20 ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 3.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை குவித்திருந்தது. ஆனால் அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்ததால் ரன் குவிப்பில் தேக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹரிஸ்...

தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஒடிசா சாம்பியன்

ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் சென்னை எழும்பூரில்உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வந்தது. 31 அணிகள் கலந்துகொண்ட இந்த தொடரின் இறுதிப் போட்டியில்நேற்று ஒடிசா - ஹரியானா அணிகள் மோதின.இதில் ஒடிசா 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி சார்பில் லக்ரா ஷில்லானந்த் ஹாட்ரிக் கோல் (48, 57 மற்றும் 60-வது நிமிடங்கள்) அடித்து அசத்தினார். ரஜத் ஆகாஷ் திர்கே (11-வது நிமிடம்), லக்ரா பிரதாப் (39-வது நிமிடம்) ஆகியோர்...

அரை இறுதியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி

மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் பிஹார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது 4-வது லீக் ஆட்டத்தில், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் சென்ற சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் சங்கீதா குமாரி 32-வது நிமிடத்திலும், சலீமா 37-வது நிமிடத்திலும் பீல்டு கோல் அடித்தனர். 60-வது நிமிடத்தில் தீபிகா, பெனால்டி கார்னரில் கோல் அடித்தார். இந்திய அணிக்கு இது 4-வது வெற்றியாக...

இலங்கையின் புதிய பிரதமரை திங்கள்கிழமை அதிபர் திசாநாயக்க நியமிப்பார்: என்பிபி

இலங்கையின் புதிய பிரதமரை அதிபர் அனுர குமார திசாநாயக்க வரும் திங்கள்கிழமை நியமிப்பார் என்று அவரது தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி அறிவித்துள்ளது. இலங்கை பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றதை அடுத்து, பிரதமர் மற்றும் புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது. இதில் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தில்வின் சில்வா, "புதிய அமைச்சரவையை நாங்கள் திங்கட்கிழமை (நவம்பர் 18, 2024) நியமிக்கவுள்ளோம். இந்த அமைச்சரவை அதிகபட்சம் 25...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தமிழ்நாடு தேர்தல் 2026: நாகர்கோவில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

நாகர்கோவில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள நாகர்கோவில், தமிழக சட்டமன்றத்தின் 230வது தொகுதியாகும். நாகர்கோவில் மாநகராட்சி முழுமையாக இத்தொகுதியில் அடங்கும். வடிவீசுவரம், வடசேரி நீண்டகரை - ஏ, நீண்டகரை - பி, வேம்பனூர்...

கருணாஸ், நிமிஷா சஜயனின் ‘என்ன விலை’

கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்​பில் உரு​வாகி​யுள்ள படம் ‘என்ன விலை’. சஜீவ் பழூர் இயக்​கி​யுள்ள இதில் ஒய்​.ஜி. மகேந்​திரா, பூர்​ணிமா பாக்​ய​ராஜ், மோகன் ராம், லொள்ளு சபா சுவாமி​நாதன், கவி​தாலயா கிருஷ்ணன், தீபா...

பாண்​டி​ராஜ் இயக்​கத்தில் ஜெயராம், ஊர்​வசி

‘தலை​வன் தலை​வி’ படத்​தின் வெற்​றிக்​குப் பிறகு இயக்​குநர் ‘பசங்க’ பாண்​டி​ராஜ் இயக்​கும் படத்​துக்கு ‘பரிமளா அண்ட் கோ’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். ஜெய​ராம், ஊர்​வசி, சந்​தோஷ் சோபன், சஞ்​சனா கிருஷ்ண​மூர்த்​தி, சாண்​டி, அனந்​திகா சனில்​கு​மார்...