Google search engine
Home 2024

Yearly Archives: 2024

கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் ரத்து: கடும் சிரமத்தை சந்தித்த பொதுமக்கள்

கடற்கரை - தாம்பரம் இடையே நேற்று காலை முதல் மாலை வரை மின்சார ரயில் ரத்தால், பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இதற்கு மாற்றாக, இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக, அவ்வப்போது மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. அந்த வகையில், தாம்பரம் பணிமனையில் நேற்று பராமரிப்பு பணி நடைபெற்றது. இதனால், சென்னை கடற்கரை - தாம்பரம் வரை மின்சார ரயில்கள் காலை...

எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ மகன் திருமண விழா: அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

விசிக துணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏவின் மகன் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினார். தென்சென்னை தெற்கு மாவட்ட திமுக இலக்கிய அணி புரவலர் சைதை எம்.எஸ்.மணி - எஸ்.கன்னிகா பேரனும், விசிக துணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எம்ஏவின் மகனுமான மருத்துவர் பா.கவுதம் - மருத்துவர் இரா.கீர்த்தி திருமண விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடைபெற்றது. முன்னதாக, நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர்...

அரசு பேருந்துகளில் பொங்கலுக்கான முன்பதிவு தொடக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விரைவு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: வரும் ஜன. 14-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனவே, மாணவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட தரப்பினர் விடுமுறையை கருத்தில் கொண்டு ஜன.10-ம் தேதி முதலே புறப்படத் தயாராவர். அரசு பேருந்துகளை பொறுத்தவரை வழக்கமாக ஒரு மாதத்துக்கு முன்பு தான் இருக்கையை முன்பதிவு செய்ய முடியும். தற்போது 2 மாதங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்யும் வகையில் நடைமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி,...

கிராம அளவில் கட்சியை மறுசீரமைக்க காங்கிரஸில் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்

0
கிராம அளவிலான காங்கிரஸை மறுசீரமைக்க மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து தமிழ்நாடு காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு செயலாளர் செ.ராம்மோகன் வெளியிட்ட அறிக்கை: பொதுமக்களுக்கும், காங்கிரஸுக்கும் உள்ள இடைவெளியை குறைத்து, காங்கிரஸின் சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளின் தேவைகளை இன்றைய இளைய தலைமுறையினருக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக கட்சியின் அடிப்படை கட்டமைப்பை கிராம வார்டுகள் முதல் அனைத்து நிலைகளிலும் மறுசீரமைக்கப்படவுள்ளது. எதிர்காலத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்ற லட்சியத்தை அடைய நமது இயக்கத்தை வலுப்படுத்துவது அவசியம். செல்வப்பெருந்தகையின் நோக்கத்தை நிறைவேற்ற, கிராம...

சூரியசக்தி மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மின் வாரியம் அழைப்பு

பொதுமக்களின் வசதிக்காக, வீடுகளில் சூரியசக்தி மின் உற்பத்திக்கான மேற்கூரைகள் அமைக்கும் நிறுவனங்களை பதிவு செய்யுமாறு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் வீடு, நிறுவனங்கள் போன்றவற்றில் சூரியசக்தி மின் உற்பத்திக்கான மேற்கூரைகள் அமைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மத்திய அரசு சூரியசக்தி இலவச மின்திட்டத்தின் கீழ் வீடுகளில் ஒரு கிலோ வாட் திறனில் சூரியசக்தி மேற்கூரைகள் அமைக்க ரூ.30 ஆயிரமும், 2 கிலோவாட்டுக்கு ரூ.60 ஆயிரமும் மானியம் வழங்குகிறது. அதற்கு மேல் அமைக்கப்படும் ஒவ்வொரு கிலோவாட்டுக்கும் ரூ.18 ஆயிரம் மானியம் வழங்குகிறது. இந்த மானியம் காரணமாக...

10 ஆண்டுகளுக்கு பிறகு ரயில்வே அங்கீகார தேர்தல்: ஊழியர்களின் ஆதரவை பெற தொழிற்சங்கங்கள் இடையே கடும் போட்டி

ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில், தொழிற்சங்கங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஊழியர்களின் ஆதரவை பெற தொழிற்சங்க நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்வேயில் முதல் முறையாக 2007-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தையில் பங்கேற்க முடியும். 2013-ல் நடைபெற்ற தேர்தலில், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு.) 43 சதவீத வாக்குகளை பெற்று அங்கீகார தொழிற்சங்கமாக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. கரோனா பாதிப்பு...

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசையில் தனியார் மருத்துவர்கள் அதிக இடம்

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் அதிக அளவில் இடம் பெற்று தனியார் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆண்டுதோறும் காலி பணியிடங்களை முறையாக நிரப்பாததால் அரசு மருத்துவர்கள் பின்தங்கியுள்ளனர். தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு கடந்த செப்டம்பர் 20-ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. தகுதியான மாணவர்களின் தரவரிசை பட்டியல்கள் https://tnmedicalselection.net/ என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் மொத்தம் 7,971 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் முதல்...

4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிதி ஆணைய குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

மத்திய அரசின் 16-வது நிதி ஆணைய குழுவினர் சென்னை வந்த நிலையில், அவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். மேலும் முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் குழுவினர் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கிறது. மத்திய அரசு 16-வது நிதி ஆணையத்தை அரவிந்த் பனகாரியா தலைமையில் அமைத்துள்ளது. ஆணையத்தின் உறுப்பினர்களாக அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சவுமியா காந்தி கோஷ் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், இந்த குழுவினர் நேற்று சென்னை வந்தனர். நவ.20-ம் தேதி வரை தமிழகத்தில்...

தமிழகத்தில் மருத்துவமனைகள் இருக்கு… போதிய மருத்துவர்கள் இல்லை!

மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகள் தள்ளாட்டத்தில் உள்ளன. இதனால், உரிய நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்காமல் சாமானியர்கள் சாபம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் அரசு மருத்​துவக் கல்லூரி மருத்​துவ​மனைகள், மாவட்ட தலைமை மருத்​துவ​மனைகள், வட்டார மருத்​துவ​மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 11 ஆயிரம் அரசு மருத்​துவ​மனைகள் உள்ளன. ஆனால், தினமும் லட்சக்​கணக்கான மக்களுக்கு வைத்தியம் பார்க்கும் இந்த மருத்​துவ​மனை​களில் சுமார் 20 ஆயிரம் மருத்​துவர் பணியிடங்கள் மட்டுமே உள்ளது. அதிலும், சுமார் 4 ஆயிரம் பேர் பற்றாக்​குறை. செவிலியர்​களும் போதிய எண்ணிக்கையில்...

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் வெளியேற்றம் விநாடிக்கு 2,000 கனஅடியாக குறைப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும். அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 7,084 கன அடியாக நீர்வரத்து, நேற்று 9,154 கன அடியாக அதிகரித்தது. டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக, டெல்டா பாசனத்துக்கு நீர்திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 5,000 கனஅடியில் இருந்து 2,000 கனஅடியாக நேற்று...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தமிழ்நாடு தேர்தல் 2026: நாகர்கோவில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

நாகர்கோவில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள நாகர்கோவில், தமிழக சட்டமன்றத்தின் 230வது தொகுதியாகும். நாகர்கோவில் மாநகராட்சி முழுமையாக இத்தொகுதியில் அடங்கும். வடிவீசுவரம், வடசேரி நீண்டகரை - ஏ, நீண்டகரை - பி, வேம்பனூர்...

கருணாஸ், நிமிஷா சஜயனின் ‘என்ன விலை’

கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்​பில் உரு​வாகி​யுள்ள படம் ‘என்ன விலை’. சஜீவ் பழூர் இயக்​கி​யுள்ள இதில் ஒய்​.ஜி. மகேந்​திரா, பூர்​ணிமா பாக்​ய​ராஜ், மோகன் ராம், லொள்ளு சபா சுவாமி​நாதன், கவி​தாலயா கிருஷ்ணன், தீபா...

பாண்​டி​ராஜ் இயக்​கத்தில் ஜெயராம், ஊர்​வசி

‘தலை​வன் தலை​வி’ படத்​தின் வெற்​றிக்​குப் பிறகு இயக்​குநர் ‘பசங்க’ பாண்​டி​ராஜ் இயக்​கும் படத்​துக்கு ‘பரிமளா அண்ட் கோ’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். ஜெய​ராம், ஊர்​வசி, சந்​தோஷ் சோபன், சஞ்​சனா கிருஷ்ண​மூர்த்​தி, சாண்​டி, அனந்​திகா சனில்​கு​மார்...