Home 2024
Yearly Archives: 2024
நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்குங்கள்: நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை
துஷார் சர்மா என்பவர் எக்ஸ் தளத்தில் நிர்மலா சீதாராமனை டேக் செய்து, “நாட்டுக்காக உங்களது பங்களிப்புகளை, முயற்சிகளை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். உங்கள் மீது எங்களுக்கு மிகுந்த மதிப்புள்ளது. நடுத்தர மக்களுக்கு கொஞ்சம் நிவாரணம் வழங்க பரிசீலிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதில் உள்ள சவால்களை நான் புரிந்துகொள்கிறேன். எனினும், இது இதயப்பூர்வமான ஒரு வேண்டுகோள்” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் புரிதலுக்கும் நன்றி. உங்கள் அக்கறையை நான் உணர்ந்து பாராட்டுகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, மக்களுக்கு...
பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றபோது இறந்தவர் உயிருடன் திரும்பியதால் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரோடா பகுதியைச் சேர்ந்தவர் 43 வயதான பிரிஜேஷ் சுதார். மனநல பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த அக்டோபர் 27-ம் தேதி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து, அவரது குடும்பத்தார் நவம்பர் 10-ம் தேதி போலீஸில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், இரண்டு வாரங்களுக்குப் பிறகு சபர்மதி பாலத்துக்கு அருகில் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதன் தோற்றம் பிரிஜேஷ் உடல் போன்று காணப்பட்டதால் இறந்தவர் அவர்தான் என கருதி அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகளை நடத்தினர்.
பின்னர் மறுநாளான வெள்ளிக்கிழமை, இறந்த...
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் 26,000 இளைஞர்கள் பங்கேற்பு
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் 26,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் 5 ஆண்டு இடைவெளிக்குப்பின்பு ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் கடந்த 8-ம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. 307 வீரர்கள், 45 கிளார்க் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் 26,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு உடல் தகுதி தேர்வு, எழுத்து தேர்வு, மருத்துவ பரிசோதனை என பல கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டன.
இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர்...
உத்தர பிரதேச அரசு மருத்துவமனை தீ விபத்து சதி அல்ல என்று விசாரணைக் குழு தகவல்
உத்தர பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமிபாய் கல்லூரியின் பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 11 குழந்தைகள் உயிரிழந்தனர். 16 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்நிகழ்வுக்கான காரணத்தை கண்டறிய ஜான்சி கமிஷனர் விபுல் துபே மற்றும் டிஐஜி ரேஞ்ச் கலாநிதி நதானி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் விசாரணையில், “இது திட்டமிட்ட நடத்தப்பட்ட சம்பவம்...
65 ஆண்டு பழமையான எம்.பி. தகுதி நீக்க சட்டத்துக்கு பதிலாக விரைவில் புதிய சட்டம்
65 ஆண்டுகள் பழமையான எம்.பி. தகுதி நீக்க சட்டத்தை ரத்து செய்து, அதற்கு பதிலாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய சட்ட அமைச்சகத்தின் சட்டமியற்றும் துறையால் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப இந்த புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
16-வது மக்களவையின்போது கல்ராஜ் மிஸ்ரா தலைமையிலான லாப அலுவலகங்களுக்கான கூட்டுக் குழுவின் (ஜேசிஓபி) பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வரைவு நாடாளுமன்றம் (தகுதி நீக்கம் தடுப்பு) மசோதா 2024 தயாரிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டம், தற்போதைய நாடாளுமன்ற (தகுதி நீக்கம் தடுப்பு) சட்டம் 1959-ன் பிரிவு...
தொழில்நுட்ப மாற்றத்துக்கு ஏற்ப சிந்தனை: தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிவுரை
மத்திய-மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் வரவு, செலவுக் கணக்குகளை தணிக்கை செய்ய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட அதிகார அமைப்பு தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் (சிஏஜி) ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16-ம் தேதி தணிக்கை தினம் கொண்டாடப்படுகிறது. நேற்று டெல்லியுள்ள சிஏஜி அலுவலகத்தில் தணிக்கை தினம் கொண்டாடப்பட்டது. அப்போது இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் கிரிஷ் சந்திர முர்மு பேசுகையில், தணிக்கைத் துறையினர் நவீன தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மேம்படுத்திக் கொண்டு புதிய கோணத்தில் சிந்திக்க வேண்டும்...
துப்பாக்கி பழுதானதால் உயிர் தப்பிய திரிணமூல் கவுன்சிலர்
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் கொல்கத்தா மாநகராட்சியின் 108-வது வார்டுகவுன் சிலராக சுசாந்தா கோஷ் பதவி வகிக்கிறார்.
இவர் நேற்றுமுன்தினம் வீட்டுமுன் இருந்தபோது ஸ்கூட் டரில் வந்த 2 பேரில் ஒருவர் சுசாந்தா கோஷை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். ஆனால் குண்டு வெளியேறவில்லை. துப்பாக்கி பழுதாகியிருந்ததை உணர்ந்த நபர் தான் வந்த ஸ்கூட்டரில் ஏறி தப்ப முயன்றார். அவரை, சுசாந்தா கோஷ் பிடித்து போலீஸில் ஒப்படைத்தார். ஸ்கூட்டரில் இருந்த நபர் தப்பிவிட்டார்.
முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை: உ.பி.யில் பாஜக எம்.பி. சதீஷ் கவுதம் பேச்சால் சர்ச்சை
“இந்துக்களால்தான் எம்.பி.யானேன். முஸ்லிம்கள் வாக்குகள் தேவையில்லை” என்று உத்தர பிரதேச இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக எம்.பி. சதீஷ் கவுதம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி.யில் 2027-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முந்தைய அரை இறுதிப்போட்டியாக இங்கு 9 சட்டப்பேரவை தொகுதி களுக்கு 20-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் 9 தொகுதிகளையும் கைப்பற்ற ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்காக இருதரப்பும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இண்டியா கூட்டணியில்...
மணிப்பூரில் பாஜக கூட்டணி அரசில் இருந்து என்பிபி விலகல்
மணிப்பூரில் பாஜக கூட்டணி அரசில் இருந்து தேசிய மக்கள் கட்சி (என்பிபி) விலகி உள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி, குகிசமுதாயங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்து 237 பேர் உயிரிழந்தனர். 60,000-க்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்தனர். 11,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மணிப்பூரில் அமைதி திரும்பி வந்த நிலையில் கடந்த 11-ம் தேதி ஜிரிபாம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் குகி சமுதாயத்தை சேர்ந்த 11 தீவிரவாதிகள் சுட்டுக்...
பாஜகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: ஜார்க்கண்டில் கல்பனா சோரன் தீவிர பிரச்சாரம்
ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவைக்கான 2-ம் கட்டத் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம் தியோகர் மாவட்டம் மதுப்பூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் கலந்துகொண்டு ஜேஎம்எம் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: ஜேஎம்எம் அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களைப் பார்த்து பாஜகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. ஜேஎம்எம் அரசின் சர்வஜன் பென்ஷன் திட்டம், மைன்யா சம்மான் திட்டம் ஆகியவை மக்களிடையே பிரபலமான திட்டங்களாக உள்ளன. மைன்யா...













