Home 2024
Yearly Archives: 2024
கிரைம் த்ரில்லராக உருவான ‘எனை சுடும் பனி’!
எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் சார்பில், ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரிக்கும் படம், ‘எனை சுடும் பனி’. இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் நட்ராஜ் சுந்தர்ராஜ். அவருக்கு ஜோடியாக உபாசனா ஆர்.சி நடிக்கிறார்.
கே.பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், சிங்கம்புலி, முத்துக்காளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராம் சேவா. வெங்கட் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு அருள் தேவ் இசை அமைக்கிறார்.
“ஐபிஎஸ் அதிகாரியாகும் லட்சியத்தில் இருக்கிறார் நட்ராஜ் சுந்தர்ராஜ். எதிர்பாராத விதமாக அவர் போலீஸ் விசாரணைக்குள் சிக்குகிறார். அங்கு அவருக்கு...
‘புதிய பாதை’ ஆன ‘ஏக்-கி-ரஸ்தா’
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், என்.டி.ராமராவ், நாகேஸ்வர ராவ், இந்தி நடிகர் திலீப் குமார் உட்பட அந்த கால டாப் ஹீரோக்கள் பலரை இயக்கியவர்களில் ஒருவர் தாபி சாணக்கியா. எம்.ஜி.ஆர் நடித்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘ஒளி விளக்கு’, ‘புதிய பூமி’, சிவாஜியின் ‘வாணி ராணி’ உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். (இவர் தந்தை, தாபி தர்மராவ் சாகித்ய அகாடமி விருது பெற்ற தெலுங்கு எழுத்தாளர். சில தெலுங்கு படங்களுக்குக் கதை வசனமும் பாடல்களும் எழுதியிருக்கிறார்)
தாபி சாணக்கியா, தமிழ்,...
“ரன் குவிக்க முடியாததால் விராட் கோலி மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்” – ஆஸி. முன்னாள் வீரர் மெக்ராத்
ரன் குவிக்க முடியாததால் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய அணி ஆஸ்திரேலியா வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி பெர்த் நகரில் தொடங்கவுள்ளது. இந்தத் தொடர் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிளென் மெக்ராத் கூறியதாவது: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு...
இந்தியன் ரேசிங் லீக்: கோவா ஏசஸ் அணி சாம்பியன்
இந்தியன் ரேசிங் லீக் 2024 கார்ப்பந்தயத்தில் கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ரேசிங் புரமோஷன்ஸ் நிறுவனத்தால் இந்தியன் ரேசிங் லீக் (ஐஆர்எல்) மற்றும் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் (எப்4ஐசி) கார்ப்பந்தயம் 5 சுற்றுகளாக நடத்தப்பட்டது. பந்தயத்தின் இறுதிப்பகுதியாக கடைசி 2 சுற்றுகள் கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார்ஸ் ஸ்பீடு பந்தய மைதானத்தில் நடைபெற்றன.
இதில் கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங் அணி அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தது. ஷ்ராச்சி ராஹ் ராயல் பெங்கால் டைகர்ஸ் அணி 2-வது...
இந்திய அணிக்கு ஜஸ்பிரீத் பும்ரா கேப்டன்?
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி பெர்த் நகரில் தொடங்கவுள்ளது.
கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளதால் அவர் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவில்லை. இதையடுத்து அடிலெய்டில் நடைபெறவுள்ள 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியுடன் ரோஹித் சர்மா இணைந்து கொள்வார் எனத் தெரிகிறது.
கேப்டன் ரோஹித் சர்மா இல்லாததால், அணியின் கேப்டன் பொறுப்பை பும்ரா ஏற்பார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
டைட்டானிக் மீட்பு கேப்டனுக்கு பரிசாக வழங்கப்பட்ட பாக்கெட் கடிகாரம் ரூ.16 கோடிக்கு ஏலம்
டைட்டானிக் விபத்தில் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய கேப்டன் ஆர்தர் ரோஸ்ட்ரானுக்கு பரிசாக வழங்கப்பட்ட பாக்கெட் கடிகாரம் ரூ.16 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
டைட்டானிக் நினைவுச் சின்னங்கள் ஏலம் விடப்பட்டதில் மிக அதிக தொகைக்கு வாங்கப்பட்ட கலைப்பொருள் என்ற பெருமையை இந்த பாக்கெட் கடிகாரம் பெற்றுள்ளது.
கடந்த 1912-ம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சென்று கொண்டிருந்த டைட்டானிக் கப்பல் திடீரென பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் 2,200-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில் 1,500 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்....
ஐஸ்கிரீம், ஓட்டல், விமான பயணத்துக்கு பிரச்சாரத்தில் ரூ.101 கோடி செலவிட்ட கமலா ஹாரிஸ்
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஐஸ்கிரீம், நட்சத்திர ஓட்டல், விமான பயணங்களுக்காக மட்டும் கமலா ஹாரிஸ் ரூ.101 கோடியை செலவிட்டு உள்ளார்.
கடந்த 5-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். தற்போதைய துணை அதிபரும் ஜனநாயக கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸ் தோல்வியை தழுவினார்.
அதிபர் தேர்தல் பிரச்சாரத்துக்காக ஜனநாயக கட்சி சார்பில் ரூ.6,640 கோடி செலவிடப்பட்டது. இதில் ஐஸ்கிரீம், நட்சத்திர ஓட்டல், விமான பயணங்களுக்காக மட்டும் கமலா ஹாரிஸ் ரூ.101 கோடியை...
கடந்த 3 மாதங்களாக உக்ரைன் மின் நிலையங்களை தாக்கும் ரஷ்யா
நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைவதை தடுக்க அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. அது இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியுடன், ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்கள், மின் பகிர்வு மையங்களை குறிவைத்து ரஷ்யா கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல நகரங்களில் உள்ள மின்...
பாகிஸ்தானில் காற்று மாசு உச்சம்: ஒரே மாதத்தில் 19 லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதி
பாகிஸ்தானில் காற்று மாசு தீவிரமடைந்துள்ளது. இதனால், மக்களுக்கு மூச்சுப் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் 19 லட்சம் பேர் மூச்சுப் பிரச்சினை காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கூட்டம் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது.
காற்று மாசுபாட்டால் குழந்தைகளும், வயதானவர்களும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிற நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல், வாகனப் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு...
நைஜீரியாவில் பிரதமர் மோடிக்கு உயரிய விருது
பிரதமர் மோடிக்கு நைஜீரிய நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது
நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு 5 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றார்.கடந்த 17 ஆண்டுகளில் நைஜீரியாவுக்கு இந்திய பிரதமர் செல்வது இதுவே முதல்முறை. நைஜீரிய தலைநகர் அபுஜாவுக்கு நேற்று சென்ற மோடியை, அந்நாட்டின் அமைச்சர் நேசாம் எசன்வோ விகே வரவேற்றார்.
இந்தியாவும், நைஜீரியாவும் பல துறைகளில் இணைந்து செயல்பட வேண்டும் என 2007-ல் முடிவு செய்யப்பட்டது. அந்த நட்புறவை மேம்படுத்தும் பேச்சு வார்த்தையில் பிரதமர் மோடி ஈடுபட்டார். பொருளாதாரம்,...











