Home 2024
Yearly Archives: 2024
க.ப.அறவாணன், கவிஞர் கா.வேழவேந்தன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் 9 பேர் நூல்கள் நாட்டுடைமை: வாரிசுகளுக்கு உரிமை தொகை
க.ப.அறவாணன், கவிஞர் கா.வேழ்வேந்தன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் 9 பேரின் நூல் களை நாட்டுடைமையாக்கி. அவர்களின் வாரிசுகளுக்கு நூல் உரிமைத் தொகையான ரூ.90 லட்சத்தை தமிழ் வளர்ச் சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங் கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச் சியில், தமிழறிஞர்கள் ஆறு. அழகப்பன் மற்றும் ராமலிங்கம் என்ற எழில் முதல்வன் ஆகியோருக்கு சிறப்பு நேர்வாக வாழுங்காலத்தில் மருத்துவ சிகிச்சைக்காகவும், மேலும், சோ.சத்தி யசீலன், மா.ரா.அரசு, பாவலர் ச.பாலசுந்தரம், க.ப.அறவாணன்.
க.த.திருநாவுக்கரசு. இரா.குமர வேலன், கவிஞர்...
குளச்சல்: மீனவர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் காசோலை
குமரி மாவட்டம் கோடிமுனை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் ஜீடின் என்பவர் 13.11.2024 அன்று மாலை கடலில் மீன்பிடித் தொழிலுக்காகச் சென்றிருந்த நிலையில் மின்னல் தாக்கி மாயமானார். 14.11.2024 அன்று அவரது படகு மட்டும் தனியாக கடலில் மிதந்துள்ளது.
அவரது மனைவி மரியாசாந்தி என்பவரால் குளச்சல் கடலோர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 15.11.2024 காலை உடல் சடலமாக மீட்டெடுக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடலில் மீன்பிடித் தொழிலுக்குச்...
குமரி: தேசிய நெடுஞ்சாலைக்கு 14 கோடி டென்டர் – எம்பி தகவல்
குமரி மாவட்டம் பள்ளிவிளை பகுதியில் காமராஜர் படிப்பகத்தில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சொந்த செலவில் 12 லட்சம் ரூபாய் கொடுத்து காமராஜர் வெங்கல சிலை அமைக்கப்பட்டது, அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக விஜய்வசந்த் கலந்து கொண்டு, செய்தியாளர்களிடம் கூறும்போது, குமரி மாவட்டத் தேசிய நெடுஞ்சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இந்த சாலைகளை சீரமைக்க ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை சந்தித்து வலியுறுத்தி, ரூபாய் 14 கோடி ஒதுக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்க நிலையில் உள்ளன. கூடிய...
தக்கலை: வைகுண்டசாமி பாதயாத்திரை – குமரி எம்பி பங்கேற்பு
சாமித்தோப்பு அய்யாவை குண்டசாமி பாதயாத்திரை ஆண்டுதோறும் சாமிதோப்பில் இருந்து திருவனந்தபுரம் வரை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு பாதயாத்திரை சனிக்கிழமை சாமிதோப்பு அன்புவனம் முத்திரிக் கிணற்றில் இருந்து பாலபிரஜாபதி அடிகளார் தலைமையில் யாத்திரை தொடங்கியது. நேற்று (17-ம் தேதி) தக்கலை பரைகோடு பகுதியில் உள்ள அய்யா பதியில் இரண்டாம் நாளான யாத்திரை நிறைவு செய்த போது கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்,
வருகை தந்த விஜய் வசந்த் அவர்களை பூஜிதகுரு பாலபிரஜாபதி அடிகளார் தலைப்பாகை அணிவித்து...
மார்த்தாண்டம்: கார்-பைக் மோதல்.. ஒருவர் உயிரிழப்பு
ஆறுகாணி பகுதியை சேர்ந்த உண்ணி, பத்துகாணி பகுதியை சேர்ந்த சஜி, பேணு பகுதியை சேர்ந்த விஜயகுமார் ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் இன்று (17-ம் தேதி) மதியம் குழித்துறை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வட்டவிளை பகுதியில் சென்றபோது எதிரே இரண்டு லாரிகள் வந்து கொண்டிருந்தன. இந்த லாரிகளை முந்தி சொகுசு கார் ஒன்று அதிவேகத்தில் வந்துள்ளது. எதிர்பாராத விதமாக இவர்கள் 3 பேரும் சென்ற இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதியது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு...
அருமனை: வீட்டை உடைத்து நகை பணம் திருட்டு
அருமனை அருகே இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (65) கேரளாவில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் (நவ.,16) இரவு ராஜேந்திரன் வீட்டில் இல்லாத நேரத்தில் மனைவி சியாமளா மகள் உள்ளிட்டோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது பின்புறஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ. 9 ஆயிரம் திருடிச் சென்றனர். அதே நாள் பகலில் மார்த்தாண்டத்தில் நகை அடமானம் வைத்து சுமார் 3 லட்சம் ரூபாய் பெற்றனர். நகை அடமானம் வைத்ததை அறிந்த...
குழித்துறை: ரயில்வே கேட் கீப்பரை தாக்கியவர் கைது
குழித்துறை அருகே நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையில் குருமத்தூர் என்னும் இடத்தில் ரயில்வே கேட்டுள்ளது. கடந்த வாரம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பிளட்சன் (36) என்பவர் கேட் கீப்பராக பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த மூன்று பேர் பிளட்சனை சரமாரியாக தாக்கி, பொருட்களை உடைத்து, ரயில்வே பாதையில் இருந்த சிக்னலையும் உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது தொடர்பாக ரயில்வே போலீஸ், களியக்காவிளை போலீசர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. ரயில்வே இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் தலைமையில் போலீசார் விசாரித்து...
தேங்காபட்டணம்: மீன் பிடி துறைமுகம் – கலெக்டர் பார்வை
தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் துறைமுகம் சேதமடைந்தது.
இதையடுத்து குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா சேதப் பகுதிகளை ஆய்வு செய்ததோடு, புதிய ஜெட்டிக்குச் செல்லும் பகுதியில் பாலம் கட்டுமான பணி நீதிமன்ற வழக்கில் உள்ளதால் புகார் கொடுத்த நபரை அழைத்துப் பேசவும், புதிய ஜெட்டிக்குச் செல்லும் பாதை பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுக ஏலக்கூடாரத்தினை ஆய்வு மேற்கொண்ட போது, ஏலக்கூடாரத்தின் உடைந்த தரைப்பகுதியினை சரிசெய்து, கழிவுநீர் ஓடையில் கிரில் போடவேண்டும் என்றும், கழிவறையினை...
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்?
நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். ‘தெறி’ ரீமேக்கான ‘பேபி ஜான்’ படம் மூலம் இந்தியில் அறிமுகமாக இருக்கிறார். தமிழில் அவர் நடிப்பில் ‘ரிவால்வர் ரீட்டா’ வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது உறவினர் ஒருவருடன் அவருக்கு டிசம்பர் மாதம் கோவாவில் திருமணம் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தகவலை கீர்த்தி சுரேஷ் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. அவர் திருமணம் குறித்து இதற்கு முன்பும் சில முறை செய்திகள் பரவின. அதை அவர் தந்தை...
16 மொழிகளில் உருவாகும் விமல் படம்!
நடிகர் விமலின் 35-வது படத்துக்கு ‘பெல்லடோனா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சூப்பர் நேச்சுரல் ஹாரர் படமாக உருவாகும் இந்தப் படத்தை யூபோரியா பிலிக்ஸ் தயாரிக்கிறார்.
சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கும் இந்தப் படத்தில் தேஜஸ்வினி சர்மா கதாநாயகியாகவும் இன்னொரு நாயகியாக மணிப்பூரை சேர்ந்த மேக்சினா பவ்னமும் நடிக்கின்றனர். வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஏசி ஜான் பீட்டர் இசையமைக்கிறார்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் சந்தோஷ் பாபு முத்துசாமி கூறும்போது, “இந்த படம் விமலுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும். வழக்கமான ஹாரர் படமாக...













