Home 2024
Yearly Archives: 2024
மத்திய அமைச்சர் குமாரசாமி, மாநில அமைச்சர் ஜமீர் இடையே உருவ கேலி மோதல்
கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடந்த சென்னபட்டணா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யோகேஷ்வரை ஆதரித்து அம்மாநில அமைச்சர் ஜமீர் அகமது கான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், மத்திய அமைச்சர் குமாரசாமியை ‘கருப்பன்' என விமர்சித்தார்.
இதற்கு பாஜகவினரும் மஜதவினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஜமீர் அகமது கான் மன்னிப்பு கோரினார். மேலும் குமாரசாமி தன்னை, ‘‘குள்ளன்'' என உருவக்கேலி செய்ததாக குற்றம்சாட்டினார். இதனால் காங்கிரஸார் குமாரசாமியை கடுமையாக விமர்சித்தனர்.
இதுகுறித்து குமாரசாமி கூறுகையில், ‘‘ஜமீர் அகமது கானை நான் ஒருபோதும் அவ்வாறு திட்டி யதில்லை....
ஜார்க்கண்டில் போட்டியிடும் சமாஜ்வாதி வேட்பாளருக்கு ரூ.400 கோடி சொத்து
ஜார்க்கண்டில் நடைபெறவுள்ள 2-ம் கட்ட தேர்தலில் ஏராளமான கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர். இதில் அதிக சொத்துகளை கொண்டவராக சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அகில் அக்தர் உள்ளார். இவர், பகுர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். இவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனக்கு ரூ.400 கோடிக்கும் அதிகமாக சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இவரை அடுத்து, தன்வார் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நிரஞ்ஜன் ராம் ரூ.137 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். தன்வார் தொகுதி வேட்பாளர் ஆசாத் சமாஜ் கட்சியைச் (கான்ஷி ராம்) மிகமத் தனிஷ் ரூ.32...
ஜார்க்கண்டில் கார் டயரில் மறைத்து ரூ.50 லட்சம் கடத்தல்: வருமான வரி அதிகாரிகள் பறிமுதல்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 81 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடத்தப்படுகிறது. நவம்பர் 13-ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது. 2-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20-ல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஓட்டுக்கு பணப்படுவாடா செய்யப்படுவதைத் தடுக்க தேர்தல் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கிரிஹத் மாவட்டத்தில் ஜார்க்கண்ட் - பிஹார் எல்லையில் வருமான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த வாகனம் ஒன்றை சோதனை செய்ததில்,...
ஒரு ரூபாய் செலவுக்கு ரூ.2.5 வருவாய்: இஸ்ரோ தகவல்
கர்நாடக மாநிலத்தில் மாணவ, மாணவியரிடம் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறிய தாவது: இஸ்ரோவின் நிதி தேவைக்காக அரசை மட்டுமே நாங்கள் சார்ந்திருக்கவில்லை. வணிக வாய்ப்புகளை நாங்களே உருவாக்குகிறோம். அதன் மூலம் வருவாய் ஈட்டுகிறோம். இஸ்ரோவுக்காக செலவிடும் தொகை 2.54 மடங்காக திரும்ப கிடைக்கிறது. அதாவது ஒரு ரூபாய் செலவு செய்தால் ரூ.2.54 வருவாய் கிடைக்கிறது. 2023-ம் ஆண்டில் இஸ்ரோ வருவாய் 6.3 பில்லியன் டால ராக உயர்ந்து உள்ளது. நடப்பு 2024-ம் ஆண்டில் இஸ்ரோவின் வருவாய் 8.4 பில்லியன்...
பழங்குடியினரின் தியாகத்தால் வளர்ந்த மாநிலம் ஜார்க்கண்ட்: உதய தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து
பழங்குடியினரின் தியாகத்தால் வளர்ந்த மாநிலம் ஜார்க்கண்ட் என அதன் உதய நாளில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநிலத்தில் இருந்து கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி உதயமானது ஜார்க் கண்ட். அப்பகுதியைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்த தினமான நவம் பர் 15-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக பழங்குடியினரை திரட்டி போராடி 25 வயதில் சிறை சென்று இறந்த வர் பிர்சா முண்டா.
ஜார்க்கண்ட் உதய தினத்தை முன்னிட்டு எக்ஸ் தளத்தில்...
பாலியல் வழக்கில் பாஜக எம்எல்ஏவுக்கு உடந்தையாக இருந்த பெங்களூரு போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
பெங்களூருவை சேர்ந்த பாஜக எம்எல்ஏ முனிரத்னா நாயுடு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கு உடந்தை யாக இருந்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் உள்ள ராஜராஜேஷ்வரி நகர் பாஜக எம்எல்ஏவும் திரைப்பட தயாரிப் பாளருமான முனிரத்னா நாயுடு மீது 42 வயதான பெண் சமூக ஆர்வலர் பாலியல் புகார் தெரிவித்தார்.
முனிரத்னா நாயுடுவும் அவரது நண்பர்கள் கிரண் குமார், விஜய்குமார் உள்ளிட்ட 7 பேர் தன்னை தனியார் விடுதிக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக முறையிட்டார். இந்த புகாரின்பேரில் ராமநகரா...
ஊடுருவல்காரர்களுக்கு மலிவு விலையில் காஸ்: காங்கிரஸ் தலைவரின் பேச்சால் சர்ச்சை
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலையொட்டி பொக்காரோ மாவட்டம் சந்திரபுரா என்ற இடத்தில் இண்டியா கூட்டணி சார்பில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் அகமது மீர் பேசினார். அவர் பேசுகையில், “ஜார்க்கண்டில் எங்கள் கட்சி ஆட்சி அமைத்தால், டிசம்பர் 1-ம் தேதி முதல், காஸ் சிலிண்டரின் விலை, ரூ.450 ஆக குறைக்கப்படும். இந்துக்கள், முஸ்லிம்கள், எஸ்.சி., எஸ்.டி., ஊடுருவல்காரர்கள் என அனைவருக்கும் எந்தவித பாகுபாடுமின்றி வழங்கப்படும்’’ என்றார்.
குலாம் அகமது மீரின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. இதுதொடர்பாக மகாராஷ்டிராவின் பன்வெல்லில்...
திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.2 கோடியில் தங்க ஆரம் காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 11 டன் நகைகள் சொந்தமாக உள்ளன. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவரான மறைந்த ஆதிகேசவுலு நாயுடுவின் பேத்தியான சைதன்யா நேற்று 4 தங்க ஆரங்களை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடுவிடம் காணிக்கையாக வழங்கினர். 24 காரட் தங்கத்தில் செய்யப்பட்ட இந்த ஆரங்களில் வைரம், வைடூரியம், பச்சை, நீலக்கற்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.2 கோடி.
கழுதை பண்ணை மூலம் ரூ.100 கோடி மோசடி: சென்னை நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் கோரிக்கை
கழுதைப் பண்ணை வைத்தால் பெரும்லாபம் அடையலாம் என ஏமாற்றி ஹைதராபாத்தில் சுமார் ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக சென்னையை சேர்ந்த போலி கழுதைப் பண்ணை நிர்வாகிகள் மீது புகார் எழுந்துள்ளது.
சமீப காலமாக கழுதைப் பால் உடல் நலத்துக்கு மிகவும் நல்லதுஎன மக்கள் நம்ப தொடங்கி உள்ளனர். இதனால் கழுதைப்பாலுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதை குடிப்பதின் மூலம் உடம்பில் நோய்எதிர்ப்பு சக்தி பெருகும் என மக்கள்நம்புகின்றனர். ஆனால், இதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பது விவாதத்துக்கு உரியது. ஆனால், இதைப் பயன்படுத்தி சென்னையை...
`டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்திருப்பதாக மிரட்டி டெல்லியில் ஓய்வுபெற்ற இன்ஜினீயரிடம் ரூ.10 கோடி அபகரிப்பு
டெல்லி ரோகினி பகுதியில் 72 வயது முதியவர் வசிக்கிறார். தனியார் நிறுவனத்தில் இன்ஜினீயராக பணியாற்றிய அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். அண்மையில் அவரது செல்போனில் ஓர் அழைப்பு வந்துள்ளது. வீடியோ காலில் பேசிய மர்மநபர், “தைவானில் இருந்து உங்களுக்கு பார்சல் வந்துள்ளது. அந்த பார்சலில் போதைப்பொருள் இருக்கிறது. மும்பை விமான நிலையத்தில் போதை பொருள் பார்சல் சிக்கி உள்ளது.
போதைபொருள் கடத்தல்வழக்கில் உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்கிறோம்" என்று மிரட்டினார். மர்ம நபரின் மிரட்டலால் அச்சமடைந்த முதியவர், “நான் எந்த குற்றமும்...













