Google search engine
Home 2024

Yearly Archives: 2024

ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு – 29 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இது தொடர்பாக சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “பல ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தன்னுடைய கணவர் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரியும் கடினமான முடிவை சாய்ரா எடுத்துள்ளார். அவர்களுடைய உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்வுரீதியான அழுத்தத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் மீது ஒருவர் அவர்கள் ஆழமான அன்பை வைத்திருந்தாலும், பதட்டங்களும் சிரமங்களும் தங்களுக்கு இடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்....

“இறைவனின் அரியணை கூட நடுங்கக்கூடும்…” – மனைவியை பிரிவது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம் 

உடைந்த இதயங்களின் எடையால் இறைவனின் அரியணை கூட நடுங்கக்கூடும். எனினும் இந்த சிதறலில், உடைந்த துண்டுகள் தங்களுடைய இடத்தை மீண்டும் கண்டடையாமல் போனாலும், நாங்க அர்த்தத்தை தேடுகிறோம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: “மிகப்பெரிய 30-ம் ஆண்டுக்குள் நுழைவதை எதிர்பார்த்திருந்தோம். ஆனால் எல்லா விஷயங்களும் ஒரு எதிர்பாராத முடிவை சுமந்திருக்கின்றன. உடைந்த இதயங்களின் எடையால் இறைவனின் அரியணை கூட நடுங்கக்கூடும். எனினும் இந்த சிதறலில், உடைந்த துண்டுகள் தங்களுடைய இடத்தை மீண்டும் கண்டடையாமல் போனாலும், நாங்க...

மினி பேருந்துகளில் ‘தேனிசைத் தென்றல்’ வீசும் 10 பாடல்கள் | தேவா பிறந்தநாள் சிறப்பு

தமிழ்த் திரையுலகம் அதிகம் கொண்டாட மறந்த மகத்தான இசை அமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா. இந்த ஆதங்கத்தை அண்மையில் வந்த ‘லப்பர் பந்து’ படத்தில் வரும் ஒற்றைக் காட்சி மிகச் சுலபமாக விளக்கியிருக்கும். அந்தக் காட்சியில் ‘ராசிதான் கைராசிதான்’ பாடல் வரும். அதைக் கேட்ட ஒருவர் அந்தப் பாடலை வேறொரு இசையமைப்பாளரின் பெயரைச் சொல்லி ரசிக்க, இன்னொருவர் “அது அவர் அல்ல, தேவா” என்பார். இப்படித்தான் தேவாவின் பல பாடல்களை வேறு யாருடையதாகவோ நினைத்துக் கொள்ளும் மனநிலை பலரிடம் வியாபித்திருக்கிறது. அதேபோல் இணையத்தில் தவறுதலாக...

டெல்லி கேபிடல்ஸ் அணி பணத்துக்காக என்னை தக்கவைக்கவில்லையா? – கவாஸ்கர் கருத்துக்கு ரிஷப் பந்த் மறுப்பு

2025-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதி அரேபி​யா​வின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த மாதம் 31-ம் தேதி ஐபிஎல் தொடரில் பங்கேற்​கும் அனைத்து அணிகளும் முக்​கியமான வீரர்களை தக்க​வைத்​துக் கொண்டு மற்ற வீரர்களை விடு​வித்தனர். இதில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்தை அந்த அணி நிர்வாகம் தக்கவைத்​துக் கொள்​ளாமல் விடு​வித்து இருந்​தது. இந்நிலை​யில் இந்திய கிரிக்​கெட் அணியின் ஜாம்​பவானும், வர்ணனை​யாள​ருமான சுனில் கவாஸ்கர் ஐபிஎல் ஏலம்...

ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று: கத்தார், கஜகஸ்தானுடன் இந்தியா பலப்பரீட்சை

எஃப்​ஐபிஏ ஆசிய கோப்பை கூடைப்​பந்து போட்டி வரும் 2025-ம் ஆண்டு சவுதி அரேபி​யா​வில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன. போட்​டியை நடத்​தும் சவுதி அரேபியா நேரடியாக தகுதி பெற்ற நிலை​யில் மற்ற அணிகளை தேர்வு செய்​வதற்கு தகுதி சுற்று போட்​டிகள் நடத்​தப்​பட்டு வருகின்றன. தகுதி சுற்றில் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. இவை 6 பிரி​களாக பிரிக்​கப்​பட்டு ஒவ்வொரு பிரி​விலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் இந்திய அணி ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்றுள்​ளது....

இலங்கை அணியில் லசித் எம்புல்தெனியா

இலங்கை கிரிக்​கெட் அணி இம்மாத இறுதி​யில் தென் ஆப்பிரிக்​கா​வில் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​கிறது. இந்த தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்​கப்​பட்​டது. இடது கை சுழற்​பந்து வீச்​சாளரான லசித் எம்புல்​தெனியா 2 வருடங்​களுக்​குப் பிறகு அணிக்கு திரும்பி உள்ளார். கடைசியாக லசித் எம்புல்​தெனியா கடந்த 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலி​யா​வுக்கு எதிரான டெஸ்ட் போட்​டி​யில் விளை​யாடி​யிருந்​தார். தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 27-ம் தேதி டர்பனில் தொடங்​கு​கிறது. 2-வது...

பெய்வென் ஜாங்கை வீழ்த்தினார் அனுபமா

சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி சீனாவில் உள்ள ஷென்சென் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் 50-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, 15-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் பெய்வென் ஜாங்கை எதிர்த்து விளையாடினார். 48 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அனுபமா 21-17, 8-21, 22-20 என்ற செட் கணக்கில் பெய்வென் ஜாங்கை வீழ்த்தினார்.

இந்திய அணியில் ஷபாலி நீக்கம்

இந்திய மகளிர் கிரிக்​கெட் அணி வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலி​யா​வில் சுற்றுப்​பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் விளை​யாடு​கிறது. இந்த தொடர் ஐசிசி மகளிர் சாம்​பியன்​ஷிப்​பின் ஓர் அங்கமாக உள்ளது. இந்நிலை​யில் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய மகளிர் அணி நேற்று அறிவிக்​கப்​பட்​டது. இதில் தொடக்க வீராங்​கனையான ஷபாலி வர்மா மோசமான பார்ம் காரணமாக நீக்​கப்​பட்​டுள்​ளார். 20 வயதான ஷபாலி வர்மா கடைசியாக விளை​யாடிய 6 ஆட்டங்​களில் 108 ரன்களே சேர்த்திருந்​தார். கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கை அணிக்கு...

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் பிஹார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஜப்பானுடன் நேற்று மோதியது. இதில் இந்திய இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி தரப்பில் 48-வது நிமிடத்தில் நவ்னீத் கவுர் பெனால்டி ஸ்டிரோக்கில் கோல் அடித்தார். தொடர்ந்து 56-வது நிமிடத்தில் லால்ரெம்சியாமி பீல்டு கோல் அடித்து அசத்தினார். இந்த ஆட்டத்தில் இந்திய அணி வீராங்னைகள் கோல் அடிக்க...

அணு ஆயுதங்களை பயன்படுத்த புதின் ஒப்புதல்: மேலும் தீவிரமடைகிறது ரஷ்யா – உக்ரைன் போர்

உக்ரைன் மீ​தான போரில் அணு ஆயுதங்களை பயன்​படுத்த ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளித்​துள்ளார். ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி 1,000 நாட்கள் நிறைவடைந்​துள்ள நிலை​யில், இந்த போரில் அணு ஆயுதங்​களை பயன்​படுத்துவது தொடர்பான புதிய கொள்​கை​யில் புதின் நேற்று கையெழுத்​திட்​டுள்​ளார். ரஷ்யா - உக்ரைன் இடையில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்​ரவரி மாதம் போர் தொடங்​கியது. இந்த போர் தொடங்கி நேற்​றோடு 1,000 நாட்கள் நிறைவடைந்​துள்ளது. ரஷ்யா​வின் தாக்​குதலால் உக்ரைனில் ஆயிரக்​கணக்​கானோர் உயிரிழந்​துள்ளனர். நாட்​டின் அடிப்படை உள்கட்​டமைப்பு தகர்ந்​துள்ளது. இதனிடையே, ரஷ்யா மீது தாக்​குதல்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தம்

’சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ள ‘சேயோன்’ படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில்...

‘எங்களின் சிகரம்’ – ஆர்.பி.சவுத்ரிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் புகழஞ்சலி

தயாரிப்பாளர்களின் சிகரம் என்று திரையுலகில் போற்றப்பட்ட ஆர்.பி.சவுத்ரி என தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி உயிரிழந்தார். அவருடைய மறைவு திரையுலகினரை பெரும்...

சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சியவர் ஆர்.பி.சவுத்ரி: நடிகர் சங்கம் புகழஞ்சலி

சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சியவர் ஆர்.பி.சவுத்ரி என்று தென்னிந்திய நடிகர் சங்கம் புகழஞ்சலி செலுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மரணமடைந்தார். அவருடைய மறைவு திரையுலகினரை பெரும்...