Home 2024
Yearly Archives: 2024
ராணுவம், கடற்படை, விமானப்படை அருணாச்சல பிரதேசத்தில் கூட்டுப் பயிற்சி
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகள் இணைந்து கூட்டுப் பயிற்சியை நடத்தின.
இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் அதுல் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகள் இணைந்து அருணாச்சல பிரதேசத்தின் ஷி-யோமி மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 4 நாள் கூட்டுப் பயிற்சியை வெகு சிறப்பான முறையில் நடத்தின.
இந்தப் பயிற்சிக்கு பூர்வி பிரஹார் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. உளவுத்துறை தகவல் சேகரிப்பு, கண்காணிப்பு, விரைவாக...
பெண்கள் குறித்து இழிவான கருத்து: மன்னிப்பு கோரினார் பஞ்சாப் காங். எம்.பி. சன்னி
பஞ்சாப் மாநிலம் கிதர்பஹா சட்டப்பேரவைத் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இரு தினங்களுக்கு முன்பு இந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் முதல்வரும் ஜலந்தர் மக்களவை தொகுதி எம்.பி.யுமான சரண்ஜித் சிங் சன்னி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, பெண்கள் மற்றும் இரு சமுதாயத்தினர் குறித்து இழிவாக கருத்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, மகளிர் அமைப்பினரும் ஆம் ஆத்மி, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் சன்னிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த விவகாரம் குறித்து 24 மணி...
பாலக்காடு தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
கேரள மாநிலம் பாலக்காடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இதுகுறித்து தேர்தல் அதிகாரி சித்ரா நேற்று கூறியதாவது: போலி வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் செய்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில், விசாரணை நடத்தப்பட்டு, அத்தகைய நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இவர்களின் பட்டியலை வாக்குச் சாவடி தலைமை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளோம். பட்டியலில் உள்ளவர்கள் வாக்களிக்க முன்வந்தால், அவர்களை வாக்களிக்க அனுமதிப்பதற்கு முன் அவர்களின் புகைப்படம் மற்றும் எழுத்துப்பூர்வ சாட்சியத்தை தலைமை அதிகாரி பெறுவார்.
அவர்கள் வாக்களித்தால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 31-வது பிரிவின்...
கர்நாடகாவில் சட்ட விரோதமாக தங்கிய வங்கதேசத்தை சேர்ந்த 6 பேர் கைது
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தர்மேந்திர குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சித்ரதுர்காவில் உள்ள ஹொலேகெரே சாலையில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று அங்கு சோதனை நடத்தியதில் ஷேக் சைஃபர் ரோஹ்மான் (33), முகமது சுமன் ஹூசேன் அலி (34), அன்வர் மஜ்ருல் (24), அஜில் ஷேக் (25), முகமது சாகிப் (31), ஃபகத் சனோவர் (35) ஆகிய 6 பேர் போலி பாஸ்போர்ட், விசா மூலம் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வங்க...
மகாராஷ்டிர தேர்தலில் தாராவி அரசியல்: ஆசியாவின் பெரிய குடிசைப் பகுதியின் பின்னணியில் தமிழர்கள்
ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் மூன்றாவது பெரிய குடிசைப் பகுதியாக மும்பையின் தாராவி உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் உருவான இதன் வரலாற்று பின்னணியில் இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. இதில் ஒன்றாக, 1896-ல் உலகம் முழுவதிலும் பல உயிர்களை பறித்த பிளேக் நோய் தமிழகத்திலும் பரவியது. இதில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் மக்கள் இடம்பெயரத் தொடங்கினர். தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட தமிழர் குடும்பங்கள் மும்பை புறநகரில் வந்து தங்கியுள்ளன. அப்போது தாரா தேவி கோயில் அங்கிருந்ததால் ‘தாரா தேவி பகுதி’ என்று பிறகு...
தெலங்கானாவில் 4 வயது சிறுமி மாரடைப்பால் மரணம்
தெலங்கானாவில் 4 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்டம், எம்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்த வினோத்- லாவண்யா தம்பதியின் ஒரே மகள் பிரஹர்ஷிகா (4). இந்நிலையில் லாவண்யா நேற்று முன்தினம் க்ரூப்-3 அரசுப் பணிக்கான தேர்வு எழுதச் சென்றார். அப்போது, சிறுமி பிரஹர்ஷிகா தனது தாத்தா, பாட்டியுடன் வீட்டில் இருந்தார். லாவண்யா தேர்வு எழுதிவிட்டு மதியம் 1 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த பிரஹர்ஷிகா தாயை பார்த்து விட்டு மகிழ்ச்சியுடன்...
ஜார்க்கண்ட் பேரவைக்கு இன்று 2-ம் கட்ட தேர்தல்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று 2-ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 13-ம் தேதி முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக இன்று 38 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் மொத்தம் 1.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 528 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
15 தொகுதிகளில் இடைத்தேர்தல்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே...
மகாராஷ்டிராவில் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல்: 288 தொகுதிகளில் 4,136 வேட்பாளர்கள் போட்டி
மகாராஷ்டிராவின் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
மகாயுதி கூட்டணியில் பாஜக 149, ஷிண்டே அணி 81, அஜித் பவார் அணி 59 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மகா...
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் இஸ்ரோ செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்: குக்கிராமங்களுக்கும் இணைய வசதி கிடைக்கும்
அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் இஸ்ரோவின் ஜிசாட் என்-2 செயற்கைக்கோள் நேற்று விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில்நிலை நிறுத்தி உள்ளது. உள்நாடு மட்டுமின்றி சுமார் 34 நாடுகளின் 424 செயற்கைக்கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி உள்ளது.
இந்த சூழலில் இந்தியாவின் தகவல் தொடர்புக்காக இஸ்ரோ சார்பில் ஜிசாட் என்-2 என்ற செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டது. இது 4,700 கிலோ எடை கொண்டதாகும். இந்த செயற்கைக் கோளை இஸ்ரோவின் எல்விஎம்3 ராக்கெட் மூலம்...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்; 24-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அழைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக வரும் 24-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்துக்கட்சி கூட்டம் வரும் 24-ம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதான குழு அறையில் நடைபெறும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25-ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ம்...














