Home 2024
Yearly Archives: 2024
பாலஸ்தீன ஆதரவாளர்கள் எதிர்ப்பால் ஆஸ்திரேலியா வணிக வளாகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ரத்து
பாலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டம் காரணமாக ஆஸ்திரேலியாவின் வணிக வளாகங்களில் வழக்கமாக நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது, ஆஸ்திரேலிய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மெல்போர்ன் நகரத்தின் முக்கிய வீதியாக திகழும் போர்க் ஸ்ட்ரீட் வணிக வளாகத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இது, குழந்தைகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்வாக இருக்கும். இந்தநிலையில், அங்குள்ள இடதுசாரி சிந்தனையாளர்கள், இஸ்லாமியவாதிகள் மற்றும் போர் எதிர்ப்பு ஆர்வலர் ஆமி செட்டால் ஆகியோர், இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருவதை கண்டிக்கும்...
இந்தியா- கயானா இடையேயான உறவை மேம்படுத்துவோம்: பிரதமர் மோடி நம்பிக்கை
இந்தியா, கயானா இடையேயான உறவை மேம்படுத்துவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய 3 நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்கு அரசுமுறை பயணமாக சென்றார். இதைத் தொடர்ந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு நைஜீரியா சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.
நைஜீரியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரேசில் சென்ற பிரதமர் மோடி, ரியோ டி...
அணு ஆயுதங்களை பயன்படுத்த புதின் ஒப்புதல்: மேலும் தீவிரமடைகிறது ரஷ்யா – உக்ரைன் போர்
உக்ரைன் மீதான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி 1,000 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பான புதிய கொள்கையில் புதின் நேற்று கையெழுத்திட்டுள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கியது. இந்த போர் தொடங்கி நேற்றோடு 1,000 நாட்கள் நிறைவடைந்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் அடிப்படை உள்கட்டமைப்பு தகர்ந்துள்ளது.
இதனிடையே, ரஷ்யா மீது தாக்குதல்...
இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா அளித்த கூட்டறிக்கை – அங்கீகரித்த ஜி20 நாடுகள்
டிஜிட்டல் பொது கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, நிர்வாகத்திற்கான தரவுகள் தொடர்பாக இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய 3 நாடுகள் வழங்கிய கூட்டு அறிக்கைக்கு ஜி20 உச்சிமாநாட்டில் வரவேற்பு கிடைத்துள்ளது. ஜி20 அமைப்பில் உள்ள பல்வேறு நாடுகள், விருந்தினர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இந்த அறிக்கையை அங்கீகரித்துள்ளன.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: உலகளாவிய வளர்ச்சி 3 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக உள்ளது. இது இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் 4 சதவீதமாக இருந்தது. பெருந்தொற்றுக்குப் பின்னர் இது குறைந்தது. அதே நேரத்தில்,...
ரஷ்யாவின் வான்வழி தாக்குதல் எச்சரிக்கை: உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மூடல்
ரஷ்ய - உக்ரைன் போர் மேலும் தீவிரமடையும் என்ற அச்சத்துக்கு மத்தியில், ரஷ்யா குறிப்பிடத்தகுந்த வான்வழித் தாக்குதல் நடத்தலாம் என்ற எச்சரிக்கையால், உக்ரைனின் கீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் தூதரக விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மிகுந்த எச்சரிக்கையுடன் தூதரகம் மூடப்படுகிறது. தூதரக ஊழியர்கள் தங்குமிடமித்தில் இருக்க அறிவுத்தப்படுகிறார்கள். வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை கேட்டால் கீவ் நகரில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல ஆயத்தமாக இருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன்...
ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீதான விசாரணைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை
கடந்த 2006-ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி கோரியது. இதில் ப.சிதம்பரம் விதிகளுக்கு புறம்பாக அனுமதி வழங்கியதாகவும் இதன் மூலம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் பலன் அடைந்ததாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிடோருக்கு எதிராக சிபிஐயும் அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்தன. இது தொடர்பான விசாரணை நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த...
உ.பி.யில் சாக்கு பையில் இளம் பெண் சடலம்: பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்ததால் கொலை என குற்றச்சாட்டு
உத்தர பிரதேசத்தில் நேற்று இடைத் தேர்தல் நடைபெற்ற கர்ஹல் தொகுதியில், இளம் பெண் ஒருவரின் உடல் சாக்கு பையில் கிடந்தது. பாஜக.வுக்கு ஆதரவு தெரிவித்ததால் சமாஜ் வாடி கட்சியைச் சேர்ந்த உள்ளூர் நபர் இந்த கொலையை செய்துள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் கதேஹரி, கர்ஹல், மிராபூர், காஜியாபாத் உட்பட 9 சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் கர்ஹல் தொகுதியில் இளம் பெண் உடல் சாக்கு பையில் நேற்று கிடந்தது. அவர் அப் பகுதியைச் சேர்ந்த 23...
‘இன்னர் லைன் பர்மிட்’ வழக்கு: மணிப்பூர் அரசு பதில் அளிக்க அவகாசம் வழங்கியது உச்ச நீதிமன்றம்
மணிப்பூரில் அமலில் இருக்கும் 'இன்னர் லைன் பெர்மிட்' (ஐஎல்பி) முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அம்மாநில அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் 8 வார கால அவகாசம் அளித்துள்ளது.
அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து ஐஎல்பி அமலில் இருக்கும் நான்காவது மாநிலம் மணிப்பூர் ஆகும். இந்த மாநிலங்களுக்கு செல்ல நாட்டின் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் உட்பட வெளியாட்கள் அனுமதி பெற வேண்டும்.
இந்நிலையில் ஐஎல்பி முறைக்கு எதிராக 'அம்ரா பங்காலி' என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தது....
உ.பி இடைத்தேர்தலில் விதிமுறைகளை மீறிய போலீஸார் பணியிடை நீக்கம்
உத்தர பிரதேசத்தில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. ஒரு வாக்குச் சாவடியில் வாக்காளர்களின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையை பரிசோதிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் சிலரை வாக்களிக்க விடாமல் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சமூக வலைதளத்தில் புகார் செய்திருந்தார்.
இந்தப் புகாரை மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் பரிசீலித்தனர். புகார் உண்மை என தெரியவந்ததால், தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி, விதிகளை மீறிய போலீஸாரை பணியிடை நீக்கம்...
50 சதவீத அரசு பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற டெல்லி அரசு உத்தரவு
காற்று மாசின் அளவு அபாய கட்டத்தை தாண்டியுள்ளதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்தே பணிபுரியும்படி டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
வாகன போக்குவரத்து, கட்டுமான நடவடிக்கை, பயிர்கழிவுகளை எரிப்பது போன்றவற்றின் காரணமாக கடந்த சில மாதங்களாக தலைநகர் டெல்லியில் காற்று மாசின் அளவு அபாய நிலையில் காணப்படுகிறது. இதனால், அங்குள்ள மக்கள் மூச்சுவிடுவதற்கே சிரமப்படும் நிலை காணப்படுகிறது. இந்த நிலையில், மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வாகன பயன்பாட்டை குறைக்க அரசு பணியில் உள்ள...














