Home 2024
Yearly Archives: 2024
வன்முறை பாதித்த பகுதிக்கு செல்ல முயன்ற மேற்கு வங்க பாஜக தலைவர் கைது
வன்முறை பாதித்த பெல்தங்கா பகுதிக்கு செல்ல முயன்றதாக மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தை ஒட்டி அமைந்துள்ள பெல்தங்கா பகுதியில் கடந்த சனிக்கிழமை இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் 17 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வன்முறைச் சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்காக அப்பகுதியில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று அப்பகுதிக்கு செல்ல முயன்றதாக மேற்கு வங்க மாநிலத்தின் பாஜக தலைவர் சுகந்தா மஜும்தாரை,...
ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க மணிப்பூர் காங்கிரஸ் கோரிக்கை
எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் மணிப்பூர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் பிராந்திய சுயாட்சிக்கு ஆதரவான கருத்தை கூறியிருந்தார். பிறகு அப்பதிவை நீக்கிவிட்டார்.
இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மணிப்பூர் காங்கிரஸ் தலைவர்கள் எழுதிய கடிதத்தில், “மணிப்பூர் விவகாரம் தொடர்பான ப.சிதம்பரம் பதிவின் உள்ளடக்கத்தை நாங்கள் ஒருமனதாக கண்டிக்கிறோம்” என்று கூறியுள்ளனர். மேலும் மாநிலத்தின்...
தன்னுடைய புகைப்படங்களை மனைவி பயன்படுத்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆட்சேபம்
தன்னுடைய புகைப்படங்களை மனைவியும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான அனுபா முஞ்சாரே பயன்படுத்துவதற்கு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் கங்கர் முஞ்சாரே ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் பகுதியைச் சேர்ந்தவர் கங்கர் முஞ்சாரே. இவரது மனைவி அனுபா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். பாலகாட் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதனிடையே நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய அனுபா, போஸ்டர்கள், பதாகைகளில் தனது கணவர் படத்தைப் பயன்படுத்தி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்....
வாரங்கலில் பாரத ஸ்டேட் வங்கியின் லாக்கரை உடைத்து ரூ.15 கோடி நகைகள் கொள்ளை
பாரத ஸ்டேட் வங்கிக் கிளையின் லாக்கரை உடைத்து அதில் இருந்த ரூ.15 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலம் வாரங்கல் ராயபர்த்தி பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) கிளை உள்ளது. இக்கிளைக்கு பாதுகாவலர் இல்லாததால், இங்கு கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். முன்னதாக அந்த வங்கியின் அலாரத்துக்கான வயரை துண்டித்துள்ளனர். அதன் பின்னர், வங்கியில் இருந்த ஜன்னலின் கண்ணாடியை உடைத்து, இரும்பு சட்டத்தை அகற்றினர். அதன் பின்னர் அனைவரும் அந்த ஜன்னல்...
ஆந்திராவில் அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து குடும்பங்களுக்கும் வீட்டுமனை: சந்திரபாபு நாயுடு உறுதி
ஆந்திராவில் வீட்டுமனை இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் அடுத்த 5 ஆண்டுகளில் வீட்டுமனை வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு உறுதி கூறினார்.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சி அமைத்து நேற்றுடன் 150 நாட்கள் ஆகிறது. இதையொட்டி நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: சுமார் 40 ஆண்டுகளாக மக்கள் என்னை ஆதரித்து வருகின்றனர். இதற்காக மக்களுக்கு பணியாற்றநான் கடமைப்பட்டுள்ளேன். இத்தனை வருடங்களில் பல இன்னல்கள் கடந்து வந்துள்ளேன்.
செய்யாத குற்றத்திற்கு பொய் வழக்குகள் போட்டு சிறைக்கு அனுப்பினர். 53 நாட்கள் நான் சிறைவாசம்...
மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெறும்: மகாராஷ்டிரா முதல்வர் நம்பிக்கை
வளர்ச்சி பணிகளுக்கு மக்கள் வாக்களிப்பர் என்பதால், மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெறும் என மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சட்டப் பேரவை தேர்தல் நேற்று நடைபெற்றது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தானேவில் உள்ள கோப்ரி - பச்பகாடி தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். இத்தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார். தனது வாக்கை பதிவு செய்தபின் ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில் கூறியதாவது:
வலுவான மகாராஷ்டிராவை உருவாக்க இந்த ஜனநாயக திருவிழா நமக்கு கிடைத்த வாய்ப்பு. ஒவ்வொரு...
சத்தீஸ்கர் மசூதிகளில் சொற்பொழிவுக்கு அனுமதி அவசியம்: வக்பு வாரிய உத்தரவுக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு
சத்தீஸ்கர் உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைகள் நடக்கும். அப்போது இமாம் அல்லது அப்பகுதி முத்தவல்லிகள் இஸ்லாமிய சொற்பொழிவு ஆற்றுவார்கள். அதற்கு அனுமதி அவசியம் என்று சத்தீஸ்கர் வக்பு வாரியம் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் வக்பு வாரிய தலைவர் டாக்டர் சலீம் ராஜ் வெளியிட்ட உத்தரவில், “மசூதிகளில் தொழுகைக்கு பின் சொற்பொழிவாற்ற இனி வக்பு வாரியத்தின் அனுமதி அவசியம். மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சொற்பொழிவுகளின் போது சில கருத்துகள் கோபமூட்டும் வகையில் உள்ளதாக...
Exit Poll Results: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்டில் முந்துகிறது பாஜக கூட்டணி!
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக தலைமையிலான அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிராவின் புதன்கிழமை நடந்து முடிந்த தேர்தலைப் பொறுத்தவையில், மகாயுதி கூட்டணியில் பாஜக 149, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி) 81, தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) 59 தொகுதிகளில் போட்டியிட்டன. மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ் 101, சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) 95, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) 86 தொகுதிகளிலும்...
கோயம்பேடு சந்தை செயல்படாத நேரத்திலும் வாயில்களை திறந்து வைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கோயம்பேடு சந்தை செயல்படாத நேரத்திலும் வாயில் கதவை திறந்துவைக்க வலியுறுத்தி வியாபாரிகள் நேற்று முன்தினம் இரவு சந்தை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோயம்பேடு சந்தையில் மலர், காய், கனி அங்காடிகள் தனித்தனி பிரிவாக செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. குறிப்பாக காய்கறி சந்தையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த சந்தையில் பிற்பகல் 2 மணிமுதல் இரவு 9 மணிவரை நுழைவு வாயில்கள் மூடப்படுகின்றன. அதன் பிறகு சரக்குகளை ஏற்றி வரும் லாரிகள் அனுமதிக்கப்படுகின்றன. நள்ளிரவு 12...
ராமேசுவரத்தில் ஒரேநாளில் 41 செ.மீ. மழை: 25, 26-ல் டெல்டா, தென் மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக அம்மாவட்டத்தில் பல இடங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக ராமேசுவரத்தில் 41 செமீ மழை பதிவாகியுள்ளது.
நேற்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை ராமேசுவரத்தில் 41 செமீ, தங்கச்சிமடத்தில் 32 செமீ மண்டபத்தில் 26 செமீ, பாம்பனில் 23 செமீ மழை பதிவானது. மாலை 5.30 மணி நிலவரப்படி பாம்பனில் 27 செமீ மழை பதிவானது. இதில் பிற்பகல் 1 முதல் மாலை 4 மணி வரையிலான 3 மணி...














