Google search engine
Home 2024

Yearly Archives: 2024

திருவட்டார்: சேதமடைந்த பாலம் தற்காலிக சீரமைப்பு

திருவட்டார் அருகே அயந்தி என்ற பகுதியில் கோதையார் இடதுகரை சானலின் குறுக்கே பொதுமக்கள் நடந்து செல்வதற்காக ஒரு இரும்பு பாலம் ஒன்று உள்ளது. இந்த இரும்பு பாலம் சேதமடைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இந்த பாலத்தில் நடந்து வந்த வயதான மூதாட்டி பாலத்தில் சேதமடைந்த தகடின் ஓட்டையில் கால் முழுவதும் உள்ளே சென்றது. அதுபோல் 17-11-2024 அன்று இந்த பாலத்தில் நடந்து சென்ற 5 வயது சிறுவன் இந்த ஓட்டையின் உள்ளே கால் சென்று உடல் முழுவதும் உள்ளே சென்று தொங்கிய நிலையில்...

“தடையில்லா சான்றிதழ் வழங்கியோருக்கு நன்றி!” – நயன்தாரா நெகிழ்ச்சி 

தன்னுடைய ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள காட்சிகளுக்கு, கேட்டதும் தடையில்லா சான்றிதழ் வழங்கிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படம்‌ வெளியாகி இருக்கிறது. பல்வேறு மகிழ்வான தருணங்கள்‌ அடங்கிய எனது திரைப்‌ பயணத்தில்‌, நாம்‌ இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள்‌ மிகவும்‌ இன்றியமையாதது. அதனால்‌, அந்த படங்கள்‌ குறித்த நினைவுகளும்‌, ஆவணப்படத்தில்‌ இடம்பெற வேண்டும்‌ என உங்களை அணுகியபோது, எந்தவித தயக்கமோ, தாமதமோ இல்லாமல்‌ தடையில்லா சான்றிதழ்‌ வழங்கிய அந்த...

கணவரை பிரிவதாக பிரபல ‘பேஸ் கிட்டாரிஸ்ட்’ மோஹினி தே அறிவிப்பு!

ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவைச் சேர்ந்த பிரபல பேஸ் கிட்டாரிஸ்ட் மோஹினி தே தனது கணவர் மார்க் ஹார்ட்சச் (Mark Hartsuch)-ஐ பிரிவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “அன்பான நண்பர்கள், குடும்பத்தினர், ரசிகர்கள், ஃபாலோயர்ஸ்களுக்கு நானும் மார்க்கும் பிரிந்துவிட்டோம் என்பதை கனத்த இதயத்துடன் அறிவிக்கிறோம். இது நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த பரஸ்பர முடிவு. நாங்கள் சிறந்த நண்பர்களாக இருப்போம். இருவருக்கும் வாழ்க்கையில் வெவ்வேறு பாதைகள் இருக்கும், பரஸ்பர ஒப்புதலுடன் பிரிந்து செல்வதே சிறந்த வழி என முடிவு...

குழந்தைகளின் உலகத்தை சொல்லும் ‘பாராசூட்’!

நடிகர் கிருஷ்ணா தயாரித்து, நடித்துள்ள வெப் தொடர், ‘பாராசூட்'. ஹாட் ஸ்டார் தளத்தில் வரும் 29-ம் தேதி வெளியாகும் இந்த தொடரில், கிஷோர், கனி, காளி வெங்கட், சரண்யா ரவிச்சந்திரன், பாவா செல்லதுரை உட்பட பலர் நடித்துள்ளனர். இரண்டு இளம் சிறார்களின் உலகைப் பற்றியதாக உருவாகியுள்ளது இந்த வெப் தொடர். குழந்தைகளின் மீது அன்பு வைத்திருக்கும் பெற்றோர்கள், அவர்கள் நன்றாக வளர வேண்டு மென கண்டிப்பு காட்டுகிறார்கள். இருவரும் பெற்றோருக்குத் தெரியாமல், பாராசூட் எனும் மொபட் பைக்கை எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். அப்போது என்ன நடக்கிறது...

‘கதையே இல்லாமல் கமல் படத்தை எடுத்தேன்’- இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தகவல்

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் க்ரைம் திரில்லர் படம் ‘லாரா’. மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம்.கே. ஃபிலிம் ஒர்க்ஸ் சார்பில் கார்த்திகேசன் தயாரித்துள்ளார். அசோக்குமார், அனு ஸ்ரேயா ராஜன், மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி, தயாரிப்பாளர் கார்த்திகேசன் என பலர் நடித்துள்ளனர். ஆர்.ஜே.ரவீன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ரகு ஸ்ரவன் குமார் இசை அமைத்துள்ளார். இதன் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “ஒரு படத்துக்கு நல்ல கதை வேண்டும் என்கிறார்கள். அது...

பெருவை வீழ்த்தியது அர்ஜெண்டினா!

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதற்கான தகுதி சுற்று பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் தென் அமெரிக்கா நாடுகள் இடையிலான தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா, பெரு அணியுடன் நேற்று மோதியது. பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த கோலை 55-வது நிமிடத்தில் லவுதரோ மார்டினெஸ் அடித்தார். இதற்கு மெஸ்ஸி உதவியிருந்தார். இந்த வெற்றியின்...

இந்தியாவில் விளையாடும் மெஸ்ஸி: அர்ஜெண்டினா அணி அடுத்த ஆண்டு கேரளா வருகை!

அடுத்த ஆண்டு அர்ஜெண்டினா கால்பந்து அணி கேரளாவில் நடைபெறும் சர்வதேசப் போட்டியில் விளையாடுகிறது என்றும், இதில் நட்சத்திர வீரர் மெஸ்ஸியும் பங்கேற்பார் என்றும் கேரள மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் அப்துரஹிமான் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இந்தப் போட்டியை மாநில அரசு பொறுப்பேற்று நடத்தும் என அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “உலகின் நம்பர் 1 கால்பந்தாட்ட அணியான அர்ஜெண்டினா, கேரளாவில் விளையாட உள்ளது. இதில் மெஸ்ஸியும் விளையாட உள்ளார். இந்த உயர்மட்ட கால்பந்து போட்டியை நடத்துவதற்கான அனைத்து நிதி...

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: சீனாவை வீழ்த்தி இந்தியா 3-வது முறையாக சாம்பியன்!

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் பிஹார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனாவுடன் இன்று மோதியது. இதில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது. இந்திய அணி சார்பில் 31-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை தீபிகா கோலாக மாற்றினார். இந்த தொடரில் அவர், அடித்த 11-வது கோலாக இது அமைந்தது. மகளிர் ஆசிய...

“ஒரு நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்” – டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி!

தொழில்முறை டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரஃபேல் நடால். டேவிஸ் கோப்பை தொடரின் காலிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரரிடம் தோல்வியடைந்த நிலையில் கலங்கிய கண்களுடன் நடால் விடைபெற்றார். இந்த டேவிஸ் கோப்பை தொடருடன் தான் ஓய்வு பெறுவதை கடந்த மாதமே நடால் அறிவித்துவிட்டதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. நெதர்லாந்து அணியின் போடிக் வான் டி-யை எதிர்த்து களமிறங்கிய நடால், ஆரம்பத்தில் முன்னேறினாலும், முதல் செட்டில் 4-6 என்ற கணக்கிலும் இரண்டாவது செட்டில் 4-6 என்ற கணக்கிலும் தோல்வி அடைந்தார். இது...

AUS vs IND முதல் டெஸ்ட்: பெர்த் போட்டியில் ஆடும் லெவனில் படிக்கல், ஜுரெல்?

பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் பந்துகள் எகிறும் பெர்த் ஆப்டஸ் மைதான ஆடுகளத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் நாளை மறுநாள் (நவ.22) ஆடுகின்றன. இந்த போட்டிக்கான இந்திய லெவன் என்னவென்பது அனைவருக்கும் ஆர்வத்தைக் கிளப்பக் கூடிய ஒன்று. ஏனெனில், இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா இல்லாததால் கே.எல்.ராகுல் மீண்டும் தொடக்க வீரர் இடத்துக்கு முன்னேற்றப்படுகிறார். ராகுல், ஜெய்ஸ்வால் தொடங்க அடுத்த 3-ம் நிலையில் ஆடும் ஷுப்மன் கில்லும் காயம் காரணமாக இல்லாததால் தேவ்தத் படிக்கல் அந்த இடத்தில் இறங்குவார்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி: தடையை மீறிய 9 கனிமவள லாரிகள் பறிமுதல்

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வள லாரிகள் செல்வதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. தடை விதித்துள்ளனர். புதுக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 4 வழி சாலை பகுதியில் இன்று 7-ம்...

கன்னியாகுமரி: இரு தினங்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை

கன்னியாகுமரி  உட்பட தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் (மே 7, 8) இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்னி வெயில் கடந்த 4ஆம்...

சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தம்

’சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ள ‘சேயோன்’ படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில்...