Home 2024
Yearly Archives: 2024
சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி: ரூ.58 கோடியில் பணிகளை தொடங்கிய மாநகராட்சி
சென்னை மாநகராட்சி கடப்பாக்கம் ஏரியை ரூ.58 கோடியில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது. சென்னை மாநகரப் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்கு பிறகு, மாநகர பகுதியில் ஆக்கிரமிப்பில், பராமரிப்பின்றி இருந்த ஏரிகள், குளங்கள் மீட்கப்பட்டு சுற்றுச்சூழல் பூங்காக்களாக மாற்றப்பட்டு வருகின்றன. அவ்வாறு 100-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் ஏரிகள் மீட்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக மணலி மண்டலம், 16-வது வார்டில் இடம்பெற்றுள்ள 135 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. அதற்கான பணிகளை...
தொழிலாளரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தல்
தொழிலாளர் நலத்துறையின், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இயங்கும் ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலைகளில் உயரமான பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஸ்ரீபெரும்புதூர், ஹூண்டாய் நிறுவனத்தில் நேற்று நடை பெற்றது.
கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ‘‘இந்தியாவில் உற்பத்தி துறையில் பணிபுரியும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள். அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். தொழிலாளர்கள் உயிர்விலை மதிக்க முடியாதது...
நீதி கிடைக்காமல் எந்த குடிமகனும் இருக்க கூடாது: மூத்த நீதிபதி கிருஷ்ணகுமார் கருத்து
மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கிருஷ்ணகுமாருக்கான பிரிவு உபசார விழா, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், நீதிபதி கிருஷ்ணகுமாருடன் நெருக்கமான பந்தத்தை கொண்டுள்ளதால் மரபை மீறி அவருக்கு வாழ்த்து கூறுவதாக குறிப்பிட்டு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேஆர்.
ஸ்ரீராம் பேசும்போது, "சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்த 8 ஆண்டு காலத்தில் 28,248 பிரதான வழக்குகளை கிருஷ்ணகுமார் முடித்து வைத்துள்ளது பாராட்டுக்குரியது. கடின உழைப்பு, நேர்மை,...
14 மின்சார ரயில் சேவை தற்காலிக ரத்து: கடற்கரை – தாம்பரம் இடையே பயண நேரத்தில் மாற்றம்
கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் தாம்பரம் யார்டில் பராமரிப்பு பணிகளும், சென்னை எழும்பூரில் மேம்பாட்டுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, ரயில் சேவையில் அவ்வப்போது மாற்றம் செய்யப்படுகின்றன. இந்நிலையில், ரயில்வே பராமரிப்பு நடவடிக்கைகள், இயக்கக காரணங்களுக்காக, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே தலா 14 மின்சார ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளன.
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்துக்கு காலை 6.52, 7.33, 8.43, 9.40, முற்பகல் 11.30,11.41, 12.30, 12.50, பிற்பகல் 3.15, மாலை 4.25, 5.43, 6.35, இரவு 7.57,8.25 ஆகிய...
சாம்சங் துணை நிறுவனத்துக்கு எதிராக உண்ணாவிரதம் தவிர இதர போராட்டங்கள் நடத்தலாம்: உயர் நீதிமன்றம்
சாம்சங் துணை நிறுவனத்துக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை தவிர பிற போராட்டங்களை வரும் 30-ம் தேதி நடத்திக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் துணை நிறுவனமான எஸ்எச் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 91 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு செயலாளர் முத்துக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில்...
பேச்சிப்பாறை: தற்காலிக பாதையில் சென்ற பள்ளி வாகனம் திடீர் விபத்து
பேச்சிப்பாறை அணை அருகே கோதை ஆற்றில் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்தில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவது வழக்கம். இதனால் பாலத்தை மேம்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பேச்சிப்பாறை - ஜீரோ பாயிண்ட் சாலை துண்டிக்கப்பட்டது. தற்போது அங்கு செல்வதற்கு அருகில் மாற்று பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதன் வழியாக இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று (20-ம் தேதி) மாலை கடையாலுமூடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி வாகனம் ஒன்று பேச்சிபாறை பகுதியில் மாணவர்களை இறக்கி விட்டு...
தோவாளை மாதவ நகரில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட தோவாளை வடக்கூர் மாதவநகர் 2வது தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நேற்று (நவம்பர் 20) தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பணியினை தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தாணு உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன் அறிவுறுத்தினார்.
நாகர்கோவிலில் தண்ணீர் தேங்கிய பகுதியில் மேயர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ரஹ்மத் கார்டன் பள்ளிவாசல் தெருவில் இன்று கான்கிரீட் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதை அறிந்த நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பார்வையிட்டு மாநகராட்சி அதிகாரிகளிடம் சீரமைக்க அறிவுறுத்தினார். உடன் துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டலத்தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.
கன்னன்குளம் பகுதியில் அங்கன்வாடி சீரமைப்பு பணி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 48-வது வார்டுக்குட்பட்ட கன்னன்குளம் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி கட்டடத்தை சீரமைக்கும் பணியினை மேயர் ரெ. மகேஷ் நேற்று(நவம்பர் 20) துவங்கி வைத்தார். துணை தலைவர் மேரி பிரின்ஸி லதா, மண்டலத்தலைவர் த. அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர் தபியாசா ஹாஜி பாபு, மாநகர செயலாளர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவட்டார்: பள்ளி மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடிய கலெக்டர்
தமிழக முதல்வரின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்படி திருவட்டார் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (20-ம் தேதி) குமரி கலெக்டர் அழகு மீனா ஆய்வு மேற்கொண்டார். திருவட்டார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி, மாணவ மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். சமூக வலைத்தளங்களில் தேவையானவற்றை மட்டும் பார்க்க வேண்டும்.
வெப்சைட்டில் படிப்பு சம்பந்தமாகவும் உயர்கல்வி சம்பந்தமாகவும் பார்க்க வேண்டும். படிப்பில் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும். பெற்றோருக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பள்ளி 100% தேர்ச்சி...














