Home 2024
Yearly Archives: 2024
மதுபான கொள்கை ஊழல் வழக்கு: கேஜ்ரிவால் மீதான விசாரணைக்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த நிதி மோசடி வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 12-ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது. சிபிஐ தொடர்ந்த வழக்கிலும் உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் அர்விந்த் கேஜ்ரிவால் மீது...
அதானி விவகாரம்: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்
குறிப்பிட்ட மாநிலங்களில் மின் ஒப்பந்தங்களை பெறுவதற்காக அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் கால கட்டங்களில் எதிர்க்கட்சிகளே அப்போது ஆட்சியில் இருந்ததாக பாஜகவின் தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் அமித் மாள்வியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமித் மாள்வியா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு (நவ.25) முன்பாக, அதே போல டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியை ஏற்க உள்ள நிலையில் அதானி மீதான குற்றச்சாட்டு வெளிவந்துள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது.மேலும், லஞ்ச குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ள காலத்தில் ( 2021 ஜூலை...
இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி லஞ்சம்: அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் – வழக்கின் பின்னணி என்ன?
தமிழகம், ஆந்திரா, ஒடிசா, ஜம்மு-காஷ்மீர், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கவுதம் அதானிக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
அதானி குழும நிறுவனங்களின் தலைவர் கவுதம் அதானி (62), உலக பணக்காரர் பட்டியலில் 17-வது இடத்திலும், இந்திய அளவில் 2-வது இடத்திலும் உள்ளார். இந்த நிலையில், கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி (அதானி கிரீன்...
தமிழ்ப் பல்கலை.யில் 40 பேரை பணி நியமனம் செய்தது தொடர்பாக விசாரணை குழு: ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 40 பேர் பணி நியமனம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் 13-வது துணைவேந்தராக வி.திருவள்ளுவன் 2021-ம் ஆண்டு டிச.11-ம் தேதி பொறுப்பேற்றார். இவரது பணிக்காலம் டிச. 12-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக ஆளுநரால் நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 2017-2018-ம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பாஸ்கரன் இருந்தபோது, பேராசிரியர், உதவிப் பேராசிரியர்கள் 40 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
இவர்களை தகுதிகாண் பருவம் நிறைவு...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 8,355 கனஅடியாக சரிவு
மேட்டூர் அணைக்கு நேற்று முன் தினம் விநாடிக்கு 9,269 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 8,355 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று 107.91 அடியில் இருந்து 108.32 அடியாகவும், நீர் இருப்பு 75.47 டிஎம்சியில் இருந்து 76.04 டிஎம்சியாகவும் உயர்ந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 19-ம் தேதி விநாடிக்கு 9,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் 8,500 கனஅடியாக...
கோயில் பணத்தை சூறையாடி வரும் இந்து சமய அறநிலைய துறையை கலைக்க வேண்டும்: பொன் மாணிக்கவேல் ஆவேசம்
இந்து சமய அறநிலையத் துறை கோயில் பணத்தை சூறையாடி வருகிறது. எனவே, அறநிலையத் துறையை கலைத்துவிட வேண்டும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார்.
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பொன்.மாணிக்கவேல், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அறநிலையத் துறை அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரை, மக்கள் வரிப் பணத்திலிருந்து ஆண்டுக்கு ரூ.428 கோடி ஊதியம் வழங்கப்படுகிறது. கோயில் கணக்குகளை தணிக்கை பார்க்க ரூ.228 கோடி செலவிடப்பட்டுள்ளது. தனி மனிதர் தவறு செய்தால் தண்டிக்கும் நிலையில்,...
ஜெயலலிதாவின் பணத்தை வைத்து கோடீஸ்வரர்களாக மாறிய ஆயிரம் குடும்பங்கள்: திண்டுக்கல் சீனிவாசன் கருத்து
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பணத்தை வைத்து சசிகலா, டிடிவி.தினகரன் என ஆயிரம் குடும்பங்கள் கோடீஸ்வரர்களாகிவிட்டனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
நாகை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உதவியாக வந்தவர்கள்தான் சசிகலா, டிடிவி.தினகரன் உள்ளிட்டோர். ஆனால், அவர்கள், அவர்களைச் சேர்ந்தவர்கள் என ஆயிரம் குடும்பத்தினர் ஜெயலலிதாவின் பணத்தை வைத்து கோடீஸ்வரர்களாகி விட்டார்கள். அந்தப் பணத்தை...
திருச்செந்தூர் ‘தெய்வானை’ உட்பட சில கோயில் யானைகளுக்கு வனத்துறை அனுமதி இல்லை: அமைச்சர் பொன்முடி தகவல்
திருச்செந்தூர் கோயிலின் ‘தெய்வானை’ உட்பட சில கோயில் யானைகள் வனத்துறை அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது: மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, அந்த சாலையின் நடுவே சில இடங்களில் வனத்துறை நிலங்கள் வருவதால் சாலை பணிகள் முழுமை பெறாமல் உள்ளன. அப்பகுதிகளில் வனத்துறை சார்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.
யானை, புலி உள்ளிட்ட வன உயிரினங்களை பாதுகாக்க வனத்துறை...
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு அரசு அனுமதி தரவில்லை: தமிழக இயற்கை வளங்கள் துறை விளக்கம்
மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு தமிழக அரசு சார்பில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று தமிழக இயற்கை வளங்கள் துறை தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்திய வேதாந்தா குழுமத்தை சேர்ந்தது இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம். இந்த நிறுவனம், டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்காக மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ.வல்லாளப்பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம் உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய சுமார் 5,000 ஏக்கர் நிலத்தை ஏலம் எடுத்துள்ளது.
சுரங்கங்கள்,...
லண்டனில் இருந்து நவ.28-ம் தேதி தமிழகம் திரும்பும் அண்ணாமலையின் அடுத்த திட்டங்கள் என்ன?
லண்டனில் படிப்பை முடித்துவிட்டு தமிழகம் திரும்பும் அண்ணாமலை பல்வேறு புதிய செயல்திட்டங்களை வகுத்திருப்பதாகவும், குறிப்பாக 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக அரசை வீழ்த்த புது வியூகங்களை அமைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் படிப்பை மேற்கொள்ள ஆக.28-ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, படிப்பை முடித்துவிட்டு, நவ.28-ல் சென்னை திரும்புகிறார்.
அப்போது சென்னை விமான நிலையத்தில் பாஜகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். தொடர்ந்து, நவ.29-ம் தேதி சென்னை கமலாலயத்தில் கட்சி நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார்....














