Google search engine
Home 2024

Yearly Archives: 2024

“சர்வதேச நீதிமன்றத்தின் பிடிவாரன்ட் யூத வெறுப்பின் விளைவு” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

தன் மீதான குற்றச்சாட்டுகளும், அதற்காக சர்வதேச நீதிமன்றம் விதித்துள்ள பிடிவாரன்ட்டும் யூத வெறுப்பின் விளைவு என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் மீது போர்க்குற்ற புகார்கள் முன்வைக்கப்பட்டு சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில்தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. அவர் மட்டுமல்லாது இஸ்ரேல் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்...

வக்பு மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின்​ பதவிக்காலத்தை நீட்டிக்க கோரிக்கை

வக்பு திருத்த மசோதா மீதான நாடாளு​மன்ற கூட்டுக்​குழு​வின் (ஜேபிசி) ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்​றது. அப்போது இதுதான் கடைசி கூட்டம் என்று ஜேபிசி தலைவரும் பாஜக உறுப்​பினருமான ஜெகதாம்​பிகா பால் தெரி​வித்​தார். இதற்கு இக்குழு​வில் இடம்​பெற்றுள்ள எதிர்க்​கட்சி உறுப்​பினர்கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து போராட்​டத்​தில் ஈடுபட்​டனர். அப்போது ஜேபிசி பதவிக்​காலத்தை நீட்​டிக்க வேண்​டும் என வலியுறுத்​தினர்.

ரூ.86 கோடி மதிப்பிலான போதைப்பொருள் மிசோரம் மாநிலத்தில் பறிமுதல்

மிசோரம் மாநிலத்தில் ரூ.86 கோடி மதிப்பிலான ஹெராயின் மற்றும் தடை செய்யப்பட்ட மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மிசோரம் மாநிலத்தின் சம்பாய் மாவட்டத்தில் இந்திய – மியான்மர் எல்லையில் சந்தேகத்திற்கிடமாக நபர்கள் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்தது. இதன்பேரில் மாநில போலீஸாரும் அசாம் ரைபில்ஸ் படையினரும் ஒரு கிராமத்தில் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது கடத்தல்காரர்கள் தப்பிவிட்டனர். எனினும் அவர்கள் கொண்டுவந்த பார்சல் சிக்கியது. இதில் 28.52 கிலோ மெத்தாம்பேட்டமைன் மாத்திரைகள் இருந்தன. ரூ.85.56 கோடி மதிப்பிலான இந்த மாத்திரைகளை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். இதுபோல் சம்பாய்...

தீவிரவாதிகள் ஊடுருவல் வழக்கு தொடர்பாக ஜம்முவில் 9 இடங்களில் என்ஐஏ சோதனை

தீவிரவாதிகள் ஊடுருவல் வழக்குகள் தொடர்பாக ஜம்மு பிராந்தியத்தில் 9 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, அவற்றை என்ஐஏ விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக ஜம்மு பிராந்தியத்தில் ரியாசி, உதம்பூர், ராம்பன், தோடா, கிஸ்துவார் உள்ளிட்ட 9 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த நடவடிக்கையில் என்ஐஏ அதிகாரிகளுக்கு மாநில காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் உதவினர். தீவிரவாதிகள்...

பேருந்து கவிழ்ந்த விபத்து: ஜார்க்கண்ட்டில் 7 பேர் உயிரிழப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் நேற்று பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 பயணிகள் உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் இருந்து ஒரு பேருந்து பிஹார் தலைநகர் பாட்னா நோக்கி நேற்று முன்தினம் புறப்பட்டது. இதில் சுமார் 50 பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டம் கோர்ஹர் பகுதியில் ஒரு வளைவில் திரும்பும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 பயணிகள் உயிரிழந்தனர். சுமார் 10 பேர் காயம் அடைந்தனர். இதுபோல் உ.பி.யில் நேற்று நிகழ்ந்த மற்றொரு சாலை விபத்தில்...

பிப்ரவரியில் ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் டிக்கெட் வெளியீடு: 25-ல் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைன் டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்டது. திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கு ஆன்லைன் டிக்கெட் நேற்று காலை 10 மணிக்கு வெளியானது. நாளை 23-ம் தேதி காலை 10 மணிக்கு அங்கப்பிரதட்சண சேவைக்கும், 11 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை சேவைக்கும், பிற்பகல் 3 மணிக்கு மூத்த குடிமகன்கள், மாற்றுத்திறனாளி பக்தர்களுக்குமான ஆன்லைன் டிக்கெட்டுகளும் வெளியாக உள்ளன. 25-ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு...

நாட்டிலேயே முதல்முறையாக 24 மணி நேர ஆன்லைன் நீதிமன்றம்: கேரளாவில் செயல்பாட்டுக்கு வந்தது

நாள் முழுவதும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம், கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றத்தை கேரள உயர்நீதிமன்றம், கொல்லம் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கி வைத்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.காவை, ராஜேஷ் பிண்டால் ஆகியோர் கேரள உயர்நீதிமன்றத்தின் இதர டிஜிட்டல் சேவைகளை தொடங்கிவைத்தனர். இந்த ஆன்லைன் நீதிமன்றம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த நீதிமன்றத்தை 24 மணி நேரமும் பயன்படுத்தலாம். வழக்குப்பதிவு, வழக்கு அனுமதி, ஆஜராவது, விசாரணை...

தெலங்கானாவில் விபத்தில் சிக்கி காயமடைந்தவரை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த பொதுமக்கள்

​தெலங்​கானா​ மாநிலம் வாரங்கல் ராம்​பல்​லியை சேர்ந்​தவர் ஏலேந்தர் (35). இவர் கினரா எனும் இடத்​தில் சொந்​தமாக வீடுகட்டி வருகிறார். இவர் புதன்​கிழமை மாலை புதிதாக கட்டப்​பட்டு வரும் தனது வீட்டை காண பைக்​கில் சென்று கொண்​டிருந்​தார். அப்போது, இவருக்கு பின்​னால் வேகமாக வந்த லாரி மோதி​யதில் ஏலேந்தர் தூக்கி எறியப்​பட்​டார். இதனை பார்த்து பொது​மக்கள் கூச்​சலிடவே, லாரி ஓட்டுநர் லாரியை பின்​னால் எடுத்​தார். இதனால், லாரி​யின் சக்கரம், சாலை​யில் விழுந்த ஏலேந்​தரின் இரு கால்​களின் மீது ஏறி இறங்​கியது. உயிருக்கு போராடி​ய ஏலேந்தர், மருத்​துவ​மனை​யில்...

முதல்வர் இல்லத்தை புதுப்பித்த விவகாரத்தில் கேஜ்ரிவாலை கண்டித்து பாஜகவினர் போராட்டம்

டெல்லி முதல்வராக பதவி வகித்த அர்விந்த் கேஜ்ரிவால், பிளாக்ஸ்டாப் சாலையில் 6-ம் இலக்கத்தில் உள்ள அரசு பங்களாவில் தங்கி இருந்தார். அப்போது, இந்த பங்களாவை பல கோடி செலவில் புதுப்பித்ததாகவும் இதில் முறைகேடு நடந்ததாகவும் புகார் எழுந்தது. மேலும் அதில் பல்வேறு சொகுசு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். இந்நிலையில், முதல்வரின் அரசு இல்லத்தை புதுப்பித்தபோது ஆடம்பர பொருட்கள் வாங்கப்பட்டதைக் கண்டித்து பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அர்விந்த் கேஜ்ரிவால் இப்போது குடியிருக்கும் பிரோஸ் ஷா சாலையில் உள்ள...

இந்தியாவின் அரிய மொழிகளின் முதல் மொழிபெயர்ப்பு நூல் திருக்குறள்: மத்திய அரசின் சிஐசிடி வெளியிடுகிறது

இந்திய அரசி​யலமைப்பு சட்டத்​தின் 8-வது அட்டவணை பட்டியலில் 22 மொழிகள் இடம்​பெற்றுள்ளன. அவற்றுடன் நாடு முழு​வதும் பல மொழிகள் பேசப்​படு​கின்றன. அவற்றில் பலவற்றுக்கு எழுத்துகள் கிடை​யாது. இதுபோன்ற அரிய மொழிகளை பேசுபவர்​களும் படிக்​கும் வகையில் திரு​வள்​ளுவரின் திருக்​குறள் வெளி​யாகிறது. இந்த தகவலை, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் மத்திய கல்வித் துறை அமைச்சக அதிகாரிகள் தெரி​வித்​துள்ளனர். சென்னை​யில் உள்ள செம்​மொழி தமிழாய்வு மத்திய நிறு​வனம் (சிஐசிடி) திருக்​குறளை மொழிபெயர்த்து வருகிறது. இதன் சார்​பில் நீலகிரி மாவட்ட பழங்​குடிகளின் 6 மொழிகளி​லும் திருக்​குறள் வெளி​யாகிறது. அவற்றில்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி: தடையை மீறிய 9 கனிமவள லாரிகள் பறிமுதல்

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வள லாரிகள் செல்வதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. தடை விதித்துள்ளனர். புதுக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 4 வழி சாலை பகுதியில் இன்று 7-ம்...

கன்னியாகுமரி: இரு தினங்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை

கன்னியாகுமரி  உட்பட தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் (மே 7, 8) இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்னி வெயில் கடந்த 4ஆம்...

சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தம்

’சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ள ‘சேயோன்’ படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில்...