Home 2024
Yearly Archives: 2024
கரு.பழனியப்பன் Vs சீனு ராமசாமி – ‘பாராட்டுவதில் எனக்கும் மகிழ்ச்சி, ஆனா..?’
கரு.பழனியப்பன் தனது கல்லூரிக் கால நண்பரும் சக இயக்குநருமான சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தை முன்வைத்து அவருக்கான கடிதம் ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். தியேட்டர்களில் எடுபடாத இந்தப் படத்தை அண்மையில் ஓடிடி-யில் பார்த்துவிட்டு திரைத் துறைப் பிரபலங்கள் பாராட்டி எழுதி வருகின்றனர்.
இதனைச் சுட்டிக்காட்டியிருக்கும் கரு. பழனியப்பன், ‘உங்களை பலரும் பாராட்டுவதில் எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால், ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ போல, குறைகளோடு கூடிய படைப்பை கோபுரத்தின் மேல் வைத்து ஒருவர் பாராட்டுவது என்பது அவருடைய பண்பைக் காட்டுகிறது. அதை நமக்குரியது என நினைத்து...
பிரபல மலையாள நடிகர் மேகநாதன் காலமானார்
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நுரையீரல் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல மலையாள நடிகர் மேகநாதன் இன்று காலமானார். அவருக்கு வயது 60.
தேசிய விருது பெற்ற மூத்த மலையாள நடிகர் பாலன் கே நாயரின் மகன் மேகநாதன். இவர் கடந்த 1983-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘அஸ்திரம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது வில்லன் கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக ‘பஞ்சாக்னி’, ‘செங்கோல்’, ‘மலப்புரம்’, ‘ஆக்ஷன் பிஜூ’,...
IND vs AUS | பெர்த்தில் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்: தாக்குப்பிடிக்குமா இந்திய அணி?
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட்கிரிக்கெட் போட்டி பெர்த் நகரில் இன்று தொடங்குகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடாததால் இந்திய அணியானது வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா தலைமையில் களமிறங்குகிறது.
ஆஸ்திரேலிய மண்ணில் 2018-19 மற்றும் 2020-21-ம் ஆண்டுகளில் நடைபெற்ற டெஸ்ட்...
‘இவர் மீது ஒரு கண் வையுங்கள்’ – ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியை புகழும் மோர்கெல்!
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை (நவ.22) பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் தொடங்கவுள்ள நிலையில் இளம் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி குறித்து இந்திய பவுலிங் பயிற்சியாளர் மோர்னி மோர்கெல் பெரிதும் நம்பிக்கை வைத்து அவரது திறமைகளை விதந்தோதியுள்ளார்.
குறிப்பாக இந்த பார்டர் கவாஸ்கர் டிராபியில் நிதிஷ் குமார் ரெட்டியை கூர்ந்து கவனியுங்கள் என்று மோர்கெல் கூறுகிறார் என்றால் விஷயம் இல்லாமல் இப்படி அவர் கூற வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.
ஆப்டஸ் ஸ்டேடியம் வலையில் நேற்றும்...
கனவை உயிர்ப்பிக்க உழைத்து வாகை சூடிய ‘களிமண் தரை ராஜா’ ரபேல் நடால் வெற்றிக் கதை!
டென்னிஸ் விளையாட்டுக் களத்தில் இரண்டு தசாப்தங்கள் ஆதிக்கம் செலுத்தியவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஜாம்பவான் ரபேல் நடால். தொழில்முறை டென்னிஸ் விளையாட்டுக்கு அவர் ‘குட்பை’ சொல்லி இருந்தாலும் களத்தில் விட்டுச் சென்றுள்ள நினைவுகளை ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாது.
இந்த நூற்றாண்டின் சிறந்த டென்னிஸ் வீரர்களின் பட்டியலில் ரோஜர் பெடரர், ரபேல் நடால், நோவக் ஜோகோவிச் ஆகிய மூவரும் இருப்பார்கள். அவர்கள் மூவரையும் டென்னிஸ் உலக மும்மூர்த்திகள் என்றும் சொல்லலாம். மூவரும் டென்னிஸ் களத்தில் சம காலத்தில் ஒருவருக்கு ஒருவர் போட்டியாளர்களாக சமர் புரிந்தவர்கள்....
பெருவை வீழ்த்தியது அர்ஜெண்டினா!
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.
இதற்கான தகுதி சுற்று பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் தென் அமெரிக்கா நாடுகள் இடையிலான தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா, பெரு அணியுடன் நேற்று மோதியது. பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த கோலை 55-வது நிமிடத்தில் லவுதரோ மார்டினெஸ் அடித்தார். இதற்கு மெஸ்ஸி உதவியிருந்தார்.
இந்த வெற்றியின்...
கயானா, டோமினிகா, பார்படோஸ் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உயரிய விருது
பிரதமர் நரேந்திர மோடிக்கு கயானா, டோமினிகா, பார்படோஸ் நாடுகளின் உயரிய விருதுகள் நேற்று வழங்கப்பட்டன.
கரீபியன் பகுதி தீவுகளில் ஒன்றான கயானாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அரசு முறை பயணமாக சென்றார். அந்த நாட்டின் மக்கள் தொகை 8.14 லட்சம் ஆகும். இதில் தமிழர்கள் உட்பட இந்திய வம்சாவளியினர் 3.20 லட்சம் பேர் உள்ளனர். அதாவது கயானாவின் மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர். ஆவர். அந்த நாட்டின் தற்போதைய அதிபர் முகமது இர்ஃபான் அலி இந்திய...
இலங்கையில் இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை: அதிபர் அனுர குமார திசாநாயக்க உறுதி
பத்தாவது இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியது. முதல்நாள் கூட்டத்தில் பேசிய அதிபர் அனுர குமார திசாநாயக்க, “இலங்கையில் இனிமேல் இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை" என்று தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 21-ம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று, புதிய அதிபராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து கடந்த 14-ம் தேதி இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 225 இடங்களில் என்பிபி கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி...
உங்கள் நாட்டுக்கு திரும்பி செல்லுங்கள்: காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு நியூசிலாந்து மக்கள் எச்சரிக்கை
உங்கள் நாட்டுக்கு திரும்பி செல்லுங்கள் என்று காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு நியூசிலாந்து மக்கள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பஞ்சாப் மாநிலத்தை தனியாக பிரித்து காலிஸ்தான் என்ற பெயரில் புதிய நாட்டை உருவாக்க வேண்டும் என்று காலிஸ்தான் தீவிரவாதிகள் கோரி வருகின்றனர். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் திரைமறைவில் செயல்படும் காலிஸ்தான் தீவிரவாதிகள், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு சதிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு 'சீக்கியருக்கான நீதி' (எஸ்எப்ஜே) என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்புக்கு கடந்த...
ஜாமீன் கிடைத்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் கைது
ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், போராட்ட வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் இப்போதைக்கு விடுதலையாக வாய்ப்பில்லை என தெரிகிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் வழக்கு உட்பட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தான் தலைவர்களுக்கு வெளிநாட்டு தலைவர்கள் அளிக்கும் பரிசு எல்லாம் அரசு கருவூலத்துக்கு சென்று விடும். அவ்வாறு வழங்கப்பட்ட விலை உயர்ந்த ஆபரணம் ஒன்றை,...














