உரிமையியல் வழக்குகளில் தமிழக அரசுக்காக ஆஜராகி வாதிட ஏதுவாக 17 அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு தரப்பில் உரிமையியல் வழக்குகளில் ஆஜராகி வாதிடும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தற்காலிக அடிப்படையில் 17 பேரை அரசு வழக்கறிஞர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் பரிந்துரையின்பேரில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அரசு வழக்கறிஞர்களாக ஆர்.கவுரி, ஜி. தன மாத்ரி, முகமது பயாஸ் அலி, எம்.சிவவர்த்தனன், எம்.குருபிரசாத், அமிர்த பூங்கொடி தினகரன், கே.சதீஷ், கே.சுரேந்தர், டோமினிக் எஸ்.டேவி்ட், ஆர்.சக்கரவர்த்தி ஆகியோர் மாநில அரசு ப்ளீடர்கள் என்ற அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு வழக்கறிஞர்களாக பி.சரவணன், எம்.பி.செந்தில், ஆர். பார்த்திபன், ஐ.பினய்காஷ், எஸ்.சிவசுப்ரமணியன், எஸ்.சிவதிலகர், கே.பொற்கொடி ஆகியோர் அரசு ப்ளீடர்கள் என்ற அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசு வழக்கறிஞர்கள் நியமன விதிகளின்படி நிரந்தர அரசு வழக்கறிஞர்கள் முறையாக நியமிக்கப்படும் வரை இவர்கள் அரசு சார்பில் ஆஜராகி வாதிடுவர் என தமிழக அரசின் பொதுத்துறை முதன்மைச் செயலர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் உத்தரவிட்டுள்ளார்.















