ஓமன் அருகே வர்த்தக கப்பல் மீதான தாக்குதலில் 11 இந்தியர்கள் காயம்

0
11

ஓமன் அருகே பனாமா நாட்​டுக் கொடி​யுடன் சென்ற வர்த்​தகக் கப்​பல் மீது நடத்​தப்​பட்ட தாக்​குதலில், இந்தியர்கள் 11 பேர் காயம் அடைந்​தனர். இத்​தாக்​குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரி​வித்​துள்​ளது.

‘எம்டி ஆன் பீஸ்’ என்ற கப்​பல் கடந்த திங்​களன்று ஓமன் கடற்கரைக்கு அருகே ஹார்​முஸ் நீரிணை வழி​யாகச் சென்று கொண்​டிருந்​த​போது, ஏவு​கணை அல்​லது வெடிகுண்டு போன்ற எறிபொருளால் தாக்​கப்​பட்​டது. இதுகுறித்​து, மத்​திய வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் ரந்​திர் ஜெய்​ஸ்​வால் கூறிய​தாவது:

ஓமன் கடற்​கரை​யில் ஹார்​முஸ் நீரிணை வழி​யாக சென்று கொண்​டிருந்த பனாமா கொடி​யுடன் கூடிய ‘எம்டி ஆன் பீஸ்’ வர்த்தகக் கப்​பல் மீதான தாக்​குதலைக் கண்​டிக்​கிறோம்.

கப்​பலில் இருந்த 19 பணி​யாளர்​களில் 17 பேர் இந்​தி​யர்​கள்். இதில், 11 இந்​தி​யர்​கள் உள்பட 12 பேர் காயமடைந்​துள்​ளனர். ஓமன் அதி​காரி​களின் உதவி​யுடன் அவர்​கள் மீட்​கப்​பட்​டு, கசாப் நகரில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். மதிப்​புமிக்க உதவி வழங்கிய ஓமன் அதி​காரி​களுக்கு நன்றி தெரிவிக்​கிறோம்.

இப்​பகு​தி​யில் கப்​பல்​கள் மீது தொடர்ந்து நடை​பெற்று வரும் தாக்​குதல்​கள் இந்​தி​யா​வுக்கு மிகுந்த கவலை அளிப்​ப​தாக உள்​ளது. பிராந்​தி​யத்​தில் அமைதி மற்​றும் நிலைத்​தன்​மையை உறுதி செய்யும் வகை​யில் இது​போன்ற தாக்​குதல்​களை உடனடி​யாக நிறுத்த வேண்​டும் என்று மீண்​டும் வலி​யுறுத்​துகிறோம்.

இப்​பகு​தி​யில் வர்த்​தகக் கப்​பல்​கள், பணி​யாளர்​கள் மற்​றும் பொது​மக்​களின் உள்​கட்​டமைப்​பு​களை குறி​வைத்து நடத்​தப்​படும் தாக்​குதல்​கள் முடிவுக்கு வர வேண்​டும். சர்​வ​தேச கடல்​வழிகளில் கப்​பல் போக்​கு​வரத்​தும், வர்த்தக நடவடிக்​கைகளும் விரை​வில் மீண்​டும் தடை​யின்றி நடை​பெற வேண்​டும். இவ்​வாறு ரந்​திர் ஜெய்​ஸ்​வால்​ தெரி​வித்​தார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here