குளச்சல் பள்ளிமுக்கு கடலோர பாதுகாப்பு குழும சோதனைச்சாவடியில் பணியில் இருந்த ஏட்டு ஆல்பர்ட், மதுபோதையில் இருந்ததாகக் கூறி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்டஸ் பாபு அவரை கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஜஸ்டஸ் பாபுவை ஆல்பர்ட் கீழே தள்ளியதில் அவர் காயமடைந்தார்.
குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜஸ்டஸ் பாபு வீடு திரும்பினார். ஆல்பர்ட்டும் காயமடைந்த நிலையில் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஏட்டு ஆல்பர்ட் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.














