பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் ( விவசாயம்) ஜென்கின் பிரபாகர் தலைமை வகித்தார். வில்லுக்குறி பேரூராட்சி தலைவி விஜயலட்சுமி வாழ்த்துரையாற்றினார். வாணி, வேளாண்மை துணை இயக்குனர் மாநிலத் திட்டம் , சில்வெஸ்டர் சொர்ணலதா உதவி ஆய்வாளர் பட்டு வளர்ச்சி துறை ஆகியோர் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை விளக்கிக் கூறினர். விதை சான்று துறை உதவி இயக்குனர் ஷீபா உயிர்மச் சான்று பெற்றிட பங்கேற்பு சான்றளிப்பு முறையில் இணைவது தொடர்பாக எடுத்துரைத்தார்.
இயற்கை விவசாயிகள் உன்னி கிருஷ்ணன் மற்றும் லூயிசன் ஆகியோர் தாங்கள் கடைபிடிக்கும் இயற்கை சாகுபடி முறைகள் பற்றியும் இயற்கை விவசாயத்தில் அதிக லாபம் பெற்றெடுத்த வழிமுறைகள் பற்றியும் இதர விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.
பாரம்பரிய நெல் ரகங்கள், இயற்கை வயல் சூழல் ஆய்வு, இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு முறைகள், மண் வள அட்டை முக்கியத்துவம், அங்கக சான்று பெற்ற பொருள்கள், பாரம்பரிய தோட்டக்கலை ரகங்கள், மதிப்பு கூட்டப்பட்ட விளை பொருட்கள் குறித்து வளர்க்கமளிக்கப்பட்டன.
இக்கருத்தரங்கில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.