
கேரளாவில் இருந்து குலசேகரம் நோக்கி வந்த 4 பேர் கூகுள் மேப்பை நம்பி காரை ஓட்டினர். கூகுள் மேப் காட்டிய வழியை நம்பி மேல்புறம் செம்மங்கலை பகுதியில் பைக்குகள் மட்டும் செல்லக்கூடிய மிகக் குறுகலான பாதையில் கார் புகுந்தது.
அப்போது இருபக்க சுவர்களுக்கு இடையில் சிக்கிய கார் தொடர்ந்து செல்ல முடியாமல் திணறியது. காரில் இருந்து இறங்கவும் முடியாமல் முன்னேயும் பின்னேயும் போக முடியாமல் 4 பேரும் தவித்தனர். இதை கவனித்து அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் காரை தள்ளி அவர்களுக்கு உதவினார். இரண்டு சுவர்களுக்கு இடையில் சிக்கியதில் காரில் இரு பக்கமும் தகடுகள் கிழிந்து பலத்த சேதமடைந்தது.
தொடர்ந்து கூகுள் மேப் ஒர்க் ஷாப்பை காட்ட கார் அங்கு நோக்கி நகர்ந்தது.
மனுஷன் பொய் சொல்லுவான்..! மிஷின் பொய் சொல்லாது..!! என்பதை நம்ப கூடாது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு.













