கன்னியாகுமரி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின் விஜய் வசந்த் எம். பி. முதல் முறையாக நேற்று நாகர்கோவில் வருகை தந்தார். அவருக்கு குமரி கிழக்கு மாவட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பாக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமையில் பார்வதிபுரம் பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்தோர் பங்கேற்றனர்.