‘கூலி’ முதல் ஷெட்யூலில் ரஜினி, சத்யராஜ், ஸ்ருதி

0
56

ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’, அக். 10-ம் தேதி ரிலீஸாகிறது. இதில் அமிதாப்பச்சன், மஞ்சுவாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா, ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இதை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது.
அனிருத் இசை அமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்த மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதில் சத்யராஜ், ரஜினியின் நண்பராக நடிக்கிறார். ஸ்ருதிஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் முதல் ஷெட்யூலில் ரஜினிகாந்த், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படுகின்றன.