உலக செஸ் சாம்பியன்ஷிப்: 8-வது சுற்றும் டிராவில் முடிவடைந்தது

0
276

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பின்னர் நடைபெற்ற அடுத்த 3 சுற்றுகளும் டிராவில் முடிவடைந்தன.

7-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெறும் சூழ்நிலையில் இருந்த போதிலும் அதனை சரியான பயன்படுத்திக் கொள்ளததால் டிராவில் முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று 8-வது சுற்றில் டிங் லிரென், குகேஷ் மோதினார்கள். லிரென் வெள்ளை காய்களுடனும், குகேஷ் கருப்பு காய்களுடன் களமிறங்கினர். 51-வது நகர்த்தலின் போது ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. ஒட்டுமொத்தமாக இது 6-வது டிராவாக அமைந்தது.

இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது. 8 சுற்றுகளின் முடிவில் டிங் லிரென், குகேஷ் ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இன்னும் 6 சுற்றுகளே உள்ளன. இதனால் அடுத்த இரு சுற்றுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முதலில் 7.5 புள்ளிகளை எந்த வீரர் அடைகிறாரோ? அவர், உலக சாம்பியன் பட்டத்தை வெல்வார். இன்று பிற்கல் 2.30 மணிக்கு 9-வது சுற்று ஆட்டம் நடைபெறுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here