உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: 2-வது சுற்றில் உன்னதி ஹூடா

0
25

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கணையான உன்னதி ஹூடா 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

உலக பாட்​மிண்​டன் சாம்​பியன்​ஷிப் டெல்​லி​யில் நடை​பெற்று வரு​கிறது. மகளிர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் இந்​தி​யா​வின் உன்​னதி ஹூடா 22-20, 21-16 என்ற செட் கணக்​கில் மியான்​மரின் தெட் தார் துசாரை வீழ்த்​தி​னார். இந்த ஆட்​டம் 40 நிமிடங்​களில் முடிவடைந்​தது. 2-வது சுற்​றில் உன்​னதி ஹூடா, போட்​டித் தரவரிசை​யில் 13-வது இடத்​தில் உள்ள கனடா​வின் மிட்​செலி லி-​யுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறார்.

மகளிர் இரட்​டையர் பிரிவு 2-வது சுற்​றில் இந்​தி​யா​வின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி, போட்​டித் தரவரிசை​யில் 16-வது இடத்​தில் உள்ள அமெரிக்​கா​வின் லாரன் லாம், அலிசன் குயின் லீ ஜோடியை எதிர்த்து விளை​யாடியது. இதில் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-15, 21-12 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறு​திக்கு முந்​தைய சுற்​றுக்கு முன்​னேறியது.

அதேவேளை​யில் மற்​றொரு ஆட்​டத்​தில் இந்​தி​​யா​வின் கவிப்​பிரியா செல்​வம், சிம்​ரன் சிங்கி ஜோடி 7-21, 14-21 என்ற செட் கணக்​கில் பல்​கேரி​யா​வின் கேப்​ரியலா ஸ்டோ​வா, ஸ்டெஃ​பானி ஸ்டோவா ஜோடி​யிடம் தோல்வி அடைந்​தது.

கலப்பு இரட்​டையர் பிரிவு முதல் சுற்​றில் இந்​தி​யா​வின் ரோகன் கபூர், ருத்விகா ஷிவானி காடே ஜோடி 22-20, 19-21, 17-21 என்ற செட் கணக்​கில் கனடா​வின் ஜோனாதன் பிங் சான் லாய், கிரிஸ்​டல் லாய் ஜோடி​யிடம் தோல்வி அடைந்​தது. மற்​றொரு ஆட்​டத்​தில் அஷித் சூர்​யா, அம்​ருதா பிர​முதேஷ் ஜோடி 21-16. 29-30, 22-24 என்ற செட் கணக்​கில் போ​ராடி துருக்​கி​யின் எம்ரே சோன்​மேஸ், யாஸ்​மென் பெக்​டாஸ்​ ஜோடி​யிடம்​ வீழ்​ந்​தது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here