வாராணசி, மதுரா வழக்கிலும் போஜ்சாலா தீர்ப்பின் தாக்கம்?

0
21

ம.பி.​யின் தார் நகரில் உள்ள போஜ்​சாலாவில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் சரஸ்வதி தேவி கோயில்தான் என்று உயர் நீதி​மன்​றம் தீர்ப்பளித்​துள்​ளது. ம.பி. உயர் நீதி​மன்​றத்​தின் இந்த தீர்ப்பை தாங்​கள் ஏற்​க​வில்லை. உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீடு செய்​யப் போவ​தாக​வும் முஸ்​லிம் தரப்​பினர் அறிவித்துள்​ளனர்.

இந்நிலையில், அயோத்தி விவ​காரத்​துக்கு பிறகு, பிற வழக்குகளிலும் இதே​போன்ற முடிவு​கள்எடுக்​கப்​படுமா என்ற கேள்​வி எழுந்துள்ளது. தற்​போது நாட்​டில் மசூ​தி- கோ​யில் சர்ச்சை தொடர்​பாக 10 வழக்​கு​கள் நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்ளன. இவற்​றில் அடுத்த ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தலை சந்​திக்​கும் உ.பி.​யில் அதி​கபட்​ச​மாக 6 வழக்​கு​கள் உள்​ளன. இதைத் தொடர்ந்​து, ம.பி., டெல்​லி, ராஜஸ்​தான், கர்​நாடகா ஆகிய மாநிலங்​களில் தலா ஒரு வழக்கு உள்​ளது. தற்​போது வெளி​யான போஜ்​சாலா தீர்ப்​பு, இந்​தி​யா​வின் எதிர்​காலம் மீது எத்​தகைய தாக்கத்தை ஏற்​படுத்​தும் என்ற கேள்​வியை எழுப்பி உள்​ளது.

ஏனெனில் அயோத்தி பாபர் மசூ​தி-​ ராமர் கோயில் வழக்​கால் நாடு முழு​வதும் பல கலவரங்​கள் ஏற்​பட்டு உயிர்​களும் பலியாயின. இதையடுத்து காங்​கிரஸ் ஆட்​சி​யின் போது பிரதமராக இருந்த நரசிம்​ம​ராவ் ஆட்சியில், ‘மத வழி​பாட்டு தலங்கள் பாது​காப்​புச் சட்​டம் 1991’ இயற்​றப்​பட்​டது.

இதன்​படி, நாடு சுதந்​திரம் அடைந்த நாளில் வழி​பாட்​டுத் ​தலங்​கள் எந்த நிலை​யில் இருந்​தனவோ அவற்​றில் எந்த மாற்​ற​மும் செய்ய முடி​யாது எனவும் அவற்​றின் மீது வழக்​கும் தொடுக்க முடி​யாது என்​றும் கூறப்​பட்​டது. ராமர் கோயில் மீதான வழக்​கின் தீர்ப்பு 2019-ல் வெளி​யா​வதற்கு முன்​பாகவே மத வழி​பாட்​டுத் தலங்​கள் பாது​காப்​புச் சட்​டத்தை ரத்து செய்ய உச்ச நீதி​மன்​றத்​தில் ஒரு மனு அளிக்​கப்​பட்​டது. இந்த வழக்கு இன்​னும் விசா​ரணைக்கு வராமல் நிலு​வை​யில் உள்​ளது.

எனினும், ராமர் கோயில் தீர்ப்​புக்கு பின் நிலைமை மெல்ல மாறி வரு​கிறது. பல ஆண்​டு​களாக நிலு​வை​யில் இருந்த வாராணசி கியான்​வாபி மசூதி வழக்கு மற்​றும் மதுரா ஷாயி ஈத்கா மசூதி வழக்கு உயிர் பெற்​றன. மேலும், நாடு முழு​வதும் சுமார் 1,800 மசூதி​களும் இஸ்​லாமியக் கட்​டு​மானங்​களும் பண்​டைய கோயில்களை இடித்த பின்​னரே கட்​டப்​பட்​ட​தாக புகார்​ உள்ளது. இதில் உ.பி.​யில் அதி​கபட்​ச​மாக 299 புகார்​கள் உள்​ளன. இது​போல் கர்​நாட​கா, குஜ​ராத், ராஜஸ்​தான், ம.பி.​யில் புகார்​கள் உள்​ளன.

மத வழி​பாட்​டுத் தலங்​கள் பாதுகாப்பு சட்​டம் 1991-ல் இயற்றப்பட்ட​போது அயோத்தி வழக்​குக்கு மட்​டும் விதி ​விலக்கு அளிக்​கப்​பட்​டது. மற்ற அனைத்து மத வழி​பாட்​டுத் தலங்​களின் நிலைமை 1947 ஆகஸ்ட் 15ம் தேதி நில​வரப்​படியே தொடர வேண்டும் என்று அச்​சட்​டம் வலி​யுறுத்​தி​யது. இதன் மூலம், பண்டைய கோயில்​கள் தங்​களுக்​குச் சொந்​த​மானவை என்று கோரு​வதற்​கான உரிமையை இந்து தரப்பு இழந்​தது.

அச்​சட்​டத்​தில் அயோத்தி வழக்​கைப் போலவே காசி, மதுரா வழக்கு​களை​யும் விதி​விலக்​கு​கள் பட்​டியலில் சேர்க்க வேண்​டும் என்ற பாஜக​வின் கோரிக்கை ஏற்​கப்​பட​வில்​லை. இச்​சட்​டத்தை நிறைவேற்​று​வதற்​கான வாக்​கெடுப்பு நாடாளு​மன்​றத்​தில் நடந்தபோது பாஜக உறுப்​பினர்​கள் வெளிநடப்பு செய்​தனர். அன்று அச்​சட்​டத்தை எதிர்த்த பாஜக, இன்று காசி, மதுரா போன்ற வழக்​கு​களுக்​காக அச்​சட்​டத்​தை ரத்​து செய்​யு​மா என்​ற கேள்விக்கும்​ இது​வரை எந்​த பதி​லும்​ வெளி​யாகவில்​லை.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here