பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்குமா சிஎஸ்கே? – இன்று குஜராத் டைட்டன்ஸுடன் மோதல்

0
28

ஐபிஎல் தொடரில் இன்று குஜ​ராத் டைட்​டன்​ஸ், சென்னை சூப்​பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி​கள் மோதவுள்​ளன. குஜராத் மாநிலம் அகம​தா​பாத் மைதானத்​தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்​டம் நடைபெறவுள்​ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் அணி 13 ஆட்​டங்​களில் விளையாடி 8 வெற்​றி, 5 தோல்வி​களு​டன் 16 புள்​ளி​கள் பெற்று பட்டியலில் 2-வது இடத்​தைப் பிடித்து பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்னேறி விட்​டது. இருந்​த​போதும், கடைசி ஆட்​டத்​தில் வெற்றி பெற்​றால் புள்​ளி​கள் பட்​டியலில் முதலிடத்​தைப் பிடிக்​கும் முனைப்​பில் குஜ​ராத் அணி விளை​யாடக்​கூடும்.

பேட்​டிங்​கில் குஜ​ராத் அணி மிக​வும் வலு​வாக காணப்​படு​கிறது. அந்த அணி​யின் சாய் சுதர்​ஷன் தொடர்ச்​சி​யாக சீரான ஆட்டத்தை வெளிப்​படுத்தி வரு​கிறார். அதே​போல் கேப்​டன் ஷுப்மன் கில் அதிரடி​யாக விளையாடி வரு​கிறார். கொல்கத்தாவுடனான கடைசி லீக் ஆட்​டத்​தில் கூட ஷுப்​மன் கில் 49 பந்​துகளில் 85 ரன்​களை விளாசி​னார். மேலும் ஜாஸ் பட்​லர், ராகுல் டெவாட்​டி​யா, வாஷிங்​டன் சுந்​தர், ஜேசன் ஹோல்​டர் ஆகியோர் அதிரடி​யாக விளை​யாடும்​போது அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு பிர​காச​மாக உள்​ளது.

மேலும் உள்​ளூர் மைதானத்​தில் ரசிகர்​களின் உற்​சாகத்​துக்கு இடையே குஜ​ராத் அணி வீரர்​கள் அதிக செயல்​திறனை வெளிப்​படுத்​து​வார்கள் என்று நம்​பலாம். அது​போலவே பந்​து​வீச்​சிலும், முகமது சிராஜ், காகிசோ ரபா​டா, ஜேசன் ஹோல்​டர், ரஷித் கான், சாய் கிஷோர் ஆகியோர் அபார​மாக பந்​து​வீசி வரு​கின்​றனர். எனவே, இந்த பந்​து​வீச்​சுக் கூட்​டணி சிஎஸ்கே பேட்​டிங் வரிசைக்கு அதிக அழுத்​தத்​தைத் தரக்கூடும். அதே​நேரத்​தில், இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்​றால்​தான் பிளே ஆஃப் சுற்று வாய்ப்​பைத் தக்க வைக்க முடி​யும் என்ற இக்​கட்​டான நிலை உள்​ளது. சிஎஸ்கே அணி இதுவரை 12 புள்​ளி​களுடன் 6-வது இடத்தில் உள்​ளது.

இந்​தப் போட்டி​யில் வெற்றி பெற்​றால் சிஎஸ்கே அணி, 14 புள்ளிகளு​டன் ராஜஸ்​தானுடன் இணைந்​திருக்​கும். மற்ற அணிகளின் வெற்​றி, தோல்​வியைப் பொறுத்தே சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறுமா என்​பது தெரி​யும்.எனவே, இன்றைய ஆட்​டத்​தில் சிஎஸ்கே வீரர்​கள் தங்​களது முழுத் திறனையும் வெளிப்​படுத்​து​வார்​கள்.

பேட்​டிங்​கில் சஞ்சு சாம்​சன், ருது​ராஜ் கெய்க்​வாட், உர்​வில் படேல், கார்த்​திக் சர்​மா, டெவால்ட் பிரே​விஸ், ஷிவம் துபே, பிர​சாந்த் வீர் ஆகியோர் தங்​களது உயர்​மட்ட செயல்​திறனை வெளிப்​படுத்த வேண்​டிய நிலை​யில் உள்​ளனர். அதே​போல் பந்​து​வீச்​சில் முகேஷ் சவுத்​ரி, ஸ்பென்​ஸர் ஜான்​சன், அன்​ஷுல் காம்​போஜ், நூர் அகமது, அகீல் ஹொசைன் ஆகியோர் சிறப்​பாக பந்​து​வீசி குஜ​ராத் அணியைக் கட்​டுக்​குள் வைத்​திருந்​தால் மட்​டுமே வெற்​றி வசப்படும்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here