அருண்ராஜா காமராஜ் படத்தில் இருந்து விஷ்ணு விஷால் விலகியது ஏன்?

0
34

‘கட்டா குஸ்தி 2’ படத்​தின் வெற்​றிக்​குப் பிறகு அருண்ராஜா காமராஜ் இயக்​கும் படத்​தில் விஷ்ணு விஷால் நடிக்க இருந்​தார்.

இப்​படம் பட்​ஜெட் பிரச்​சினை காரண​மாகக் கைவிடப்​பட்​ட​தாகச் செய்​தி​கள் வெளி​யாகி வந்​தன. இந்​நிலை​யில் அதை நடிகர் விஷ்ணு விஷால் உறு​திப்​படுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “இந்​தப் படத்துக்​காகக் கடந்த 10 மாதங்​களாகத் தீவிர​மாகத் தயா​ராகி வந்தேன். சமீபத்​தில் படத்​தின் இயக்​குநருடன் படைப்பு ரீதி​யான கருத்து வேறு​பாடு​கள் மற்​றும் பட்​ஜெட் தொடர்​பான சிக்​கல் ஏற்பட்டது.

தற்​போது திரைத்​துறை எதிர்​கொண்டு வரும் மிகப்​பெரிய சவால்களில் பட்​ஜெட் பிரச்​சினை​யும் ஒன்​று. இந்​தப் படத்​தைச் சாத்​தி​ய​மாக்க என்​னால் முடிந்த அனைத்து முயற்​சிகளை​யும் மேற்​கொண்​டேன்.

எவ்​வளவு முயற்சி செய்​தும் இந்​தப் படத்தை இனி தொடர வேண்டாம் என்று முடிவு செய்​துள்​ளோம். இது எனக்​கும் அருண்ராஜா காம​ராஜுக்​கும் எளி​தான முடிவு அல்ல என்​ப​தைப் புரிந்​து​கொள்​கிறேன்.

இருந்​தா​லும், இந்​தப் படத்​திலிருந்து இரு​வரும் விலக வேண்​டிய சூழ்​நிலை ஏற்​பட்​டுள்​ளது. அவருடைய எதிர்​கால முயற்​சிகள் அனைத்​தும் சிறப்​பாக அமைய வாழ்த்​துகளைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

இதுதொடர்​பான சட்ட நடவடிக்​கைகள் மற்​றும் நடை​முறை​கள், அதற்​குரிய காலத்​தில் நடை​பெற்று முடிவுக்கு வரும். தற்​போது, எனது கவனம் எனது அடுத்த வெளி​யீ​டான ‘இரண்டு வானம்’ படம் மீதும், எனது சகோ​தரரின் ‘யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்​லோ’ படத்​தின் மீதும் உள்​ளது.

அதே நேரத்​தில், மிக​வும் சுவாரஸ்​ய​மான மற்​றும் தனித்​துவமான​ ஒரு விஷ​யத்​தி​லும் பணி​யாற்றி வரு​கிறேன். அதற்​கான அதிகாரப்பூர்வ அறி​விப்பு விரை​வில் வெளி​யாகும்” என்று தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here