“மாணவர் போராட்டத்தில் பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதி அளித்தது யார்?” – ராகுல் காந்தி

0
16

“டெல்லி ஜந்​தர் மந்​தரில் போராட்​டத்​தில் ஈடு​பட்ட மாணவர்​களுக்கு எதி​ராக பெல்​லட் துப்​பாக்​கி​களை பயன்​படுத்த அனு​மதி அளித்​தது யார்” என மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்​ளார்.

மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, மத்​திய உள்துறை அமைச்​சர் அமித் ஷாவுக்கு எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறியிருப்​ப​தாவது: “டெல்லி ஜந்​தர் மந்​தரில் அமை​தி​யான முறையில் போராட்​டம் நடத்​திய மாணவர்​கள் மீது நடத்​தப்​பட்ட மிரு​கத்​தன​மான தாக்​குதலுக்கு மத்​திய அரசு பொறுப்​பேற்க வேண்​டும். மேலும் போராட்​டத்​தில் ஈடு​பட்ட மாணவர் மீது உயிர்க்கொல்​லி​யான பெல்​லட் துப்​பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் பாதிக்​கப்​பட்ட 19 வயது மாணவர் ஒரு​வர் கடுமை​யான வலியை அனுப​வித்து வரு​கிறார். பெல்​லட் குண்டு தாக்​கிய​தால் அவர் தனது பார்​வையை இழக்​கக் கூடும் என மருத்​து​வர்​கள் கூறியுள்​ளனர். டெல்​லி​யில் பாது​காப்​புப் பணிக்​காக நிறுத்தப்பட்டுள்ள படைகள் இறு​தி​யில் உங்​களது கட்​டுப்​பாட்​டின் கீழ்​தான் இயங்​கு​கின்​றன.

எனவே உள்​துறை அமைச்​ச​ராக, மாணவர்​கள் மீது பெல்​லட் துப்பாக்கி உள்​ளிட்ட கொடிய பலத்​தைப் பயன்​படுத்த நீங்​கள் அனு​மதி அளித்​தீர்​களா? இல்​லை​யென்​றால் அனு​மதி அளித்​தது யார்? சாதாரண உடை அணிந்​தவர்​கள் மாணவர்​களை லத்தியால் தாக்​கிய​வர்​கள் காவலர்​களா அல்​லது தன்​னார்​வத் தொண்​டர்​களா? அவர்​களைக் களமிறக்க அனு​ம​தித்​தது யார்? இவ்​வாறு அவர்​ கேள்​வி எழுப்​பி​யுள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here