கொடைக்கானலில் நிலச்சரிவுக்கு காரணம் என்ன? – மத்திய புவியியல் ஆய்வு மைய குழு ஆய்வு

0
25

கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மத்திய புவியியல் ஆய்வு மையக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. குறிப்பாக, பெருமாள்மலை – அடுக்கம் – பெரியகுளம் மலைப்பாதையில் வெள்ளத்தில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

மலைக்கிராமங்கள் தனித்தீவு போல தனித்து விடப்பட்டன. தற்போது மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கொடைக்கானல், அடுக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மண் சரிவு ஏற்பட்டதன் காரணம், தேவையான தடுப்பு நடவடிக்கைகள், நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகள் குறித்து மத்திய புவியியல் ஆய்வு மையக் குழுவினர், கொடைக்கானல் வருவாய்த் துறையினருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் தமிழக பேரிடர் மேலாண்மைக் குழு கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆய்வு நடத்தியது. அதில், கொடைக்கானல் அருகேயுள்ள குருசரடி, சவரிக்காடு, கோம்பைக்காடு உள்ளிட்ட 15 இடங்களில் நிலச்சரிவு அபாயம் இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here