Home தேசிய செய்திகள் மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் 2026: பாஜக 140+ இடங்களில் முன்னிலை!

மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் 2026: பாஜக 140+ இடங்களில் முன்னிலை!

0

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி பாஜக 144 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. திரிணமூல் காங்கிரஸ் 106 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

காலை 10 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 144 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி 105 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மற்றவர்கள் 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறார்கள்.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல்கட்டத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதியும் இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 29ம் தேதியும் நடைபெற்றன. இரண்டாம் கட்டத் தேரத்லில் வாக்குப்பதிவு நடைபெற்ற தொகுதிகளில், ஃபால்டா தொகுதிக்கு வரும் 21ம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் 293 தொகுதிகளில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.

மேற்கு வங்​கத்​தில் முதல்​வர் மம்தா தலை​மையி​லான திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் ஆட்சி நடை​பெற்று வரு​கிறது. தொடர்ந்து 15 ஆண்​டு​களாக மம்தா பானர்​ஜி முதல்​வ​ராக உள்​ளார். திரிண​மூல் காங்​கிரஸுக்கு பாஜக கடும் சவாலை அளித்து வரு​கிறது. 148 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version