Home தேசிய செய்திகள் விருப்ப ஓய்வு திட்டம் ‘மெட்டா’ அறிவிப்பு

விருப்ப ஓய்வு திட்டம் ‘மெட்டா’ அறிவிப்பு

0

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​ப வரவு காரணமாக, மைக்​ரோ​சாப்ட், கூகுள் நிறு​வனங்​கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்தன.

இதைத் தொடர்ந்​து, பேஸ்​புக், இன்​ஸ்​டாகி​ராமின் தாய் நிறு​வன​மான மெட்​டா​வும் பிரான்​ஸில் பணிபுரி​யும் தனது ஊழியர்​களுக்கு விருப்ப ஓய்வு வழங்க முன்​வந்​துள்​ளது. அங்கு சுமார் 300 ஊழியர்கள் பணிபுரி​கின்​றனர். இவர்​களில் சுமார் 100 பேர் இந்​தத் திட்​டத்​தால் பாதிக்​கப்பட வாய்ப்​புள்​ளது.

இதன்​படி, ஒவ்​வொரு ஆண்​டும் பணிபுரிந்த காலத்​துக்கு 2.15 மாதச் சம்​பளம் இழப்​பீட்​டுத் தொகை​யாக விருப்ப ஓய்​வில் செல்லும் ஊழியர்​களுக்கு வழங்​கப்​படும். மேலும், 10 மாத காலத்துக்கு ஊதி​யத்​துடன் கூடிய பணி​யிட மாற்ற விடுப்​பும் வழங்​கப்​படும். இந்​தக் காலத்​தில் ஊழியர்​களுக்கு அவர்​களின் மொத்த சம்​பளத்​தில் 80 சதவீதம் வழங்​கப்​படும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version