Home தேசிய செய்திகள் ரூஹுல்லா விலக பாஜகவே காரணம்: தேசிய மாநாட்டு கட்சி குற்​றச்​சாட்​டு

ரூஹுல்லா விலக பாஜகவே காரணம்: தேசிய மாநாட்டு கட்சி குற்​றச்​சாட்​டு

0

ஸ்ரீநகர் எம்​.பி. ஆகா ரூஹுல்லா மெஹ்தி கட்​சியி​லிருந்து வில​கியதற்கு பாஜக​தான் காரணம் என்று தேசிய மாநாட்டு கட்சி குற்​றம்​சாட்​டி​யுள்​ளது. ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகர் தொகு​தி​யின் தேசிய மாநாட்டு கட்சி எம்.பி.​யான ஆகா ரூஹுல்லா மெஹ்​தி, கடந்த சில தினங்​களுக்கு முன்பு கட்​சி​யில் இருந்து வில​கியதுடன், எம்​.பி. பதவியை​யும் ராஜினாமா செய்​தார்.

இந்​நிலை​யில், ஸ்ரீநகரில் உள்ள தேசிய மாநாட்​டுக் கட்​சி​யின் தலை​மையகத்​தில் அக்​கட்​சி​யின் எம்​எல்​ஏ.க்​கள் சலாம் சாகர், சஜத் ஷாஹீன் ஆகியோர் செய்​தி​யாளர்​களை சந்​தித்​தனர்.

அப்போது அவர்​கள் கூறிய​தாவது: ‘ஆபரேஷன் லோட்​டஸ்’ திட்டத்தின் மூலம் பாஜக தனது நோக்​கத்தை நிறைவேற்றிவிட்டது. மெஹ்​தி​யின் வில​கல் திட்​ட​மிட்டு செய்யப்பட்ட உத்​தி. அவரை தேசிய மாநாட்டு கட்​சியி​லிருந்து வெளியேற்று​வ​தில் பாஜக வெற்றி பெற்​றுள்​ளது.

கடந்த 80-90 ஆண்​டு​களில் இரண்​டு, மூன்று முறை நம்மை பலவீனப்​படுத்த முயன்ற சக்​தி​யுடன் அவர் (மெஹ்​தி) இப்​போது சேர்ந்​து​விட்​டார். அந்த முயற்​சிகளை முன்பு நாங்​கள் முறியடித்​தோம். ஜம்​மு-​காஷ்மீரின் சிறப்பு அந்​தஸ்தை மீட்​கும் போராட்டத்தை தேசிய மாநாட்டு கட்சி கைவிட்​டு​விட்​டது என்ற மெஹ்​தி​யின் குற்​றச்​சாட்டு ஒரு சாக்​குப்​போக்​கு. ஜம்​மு-​காஷ்மீர் மக்​களின் உரிமை​களில் நாங்​கள் ஒரு​போதும் சமரசம் செய்ய மாட்​டோம். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version