Home தேசிய செய்திகள் ‘கட்டாயப்படுத்தி சுன்னத் செய்தனர்; இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என நிர்பந்தம்’ – மனைவி, மாமியார்...

‘கட்டாயப்படுத்தி சுன்னத் செய்தனர்; இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என நிர்பந்தம்’ – மனைவி, மாமியார் மீது கணவர் புகார்

0

ராஜஸ்​தானைச் சேர்ந்த ஒரு​வர், தன்னை இஸ்லாம் மதத்​துக்கு மாறும்​படி மனை​வி​யும் மாமி​யாரும் வற்​புறுத்​தி​, தனது விருப்பத்​துக்கு மாறாக சுன்னத் செய்​த​தாக குற்​றம் சாட்டியுள்ளார்.

ராஜஸ்​தானைச் சேர்ந்த அகில் குமார் சந்​தக் இந்து மதத்​தைச் சேர்ந்​தவர். இவர் இஸ்​லாம் மதத்​தைச் சேர்ந்த நூர்​ஷிகா பேகம் என்​பவரை திரு​மணம் செய்து கொண்​டார். இந்​நிலை​யில், குமாரை இஸ்​லாம் மதத்​துக்கு மாறு​மாறு அவரது மனைவி மற்​றும் மாமி​யார் கட்​டாயப்​படுத்தி அவரது விருப்​பத்​துக்கு மாறாக சுன்னத் செய்துள்ளனர்.

இதுதொடர்​பாக, குமார் அளித்த புகாரில், மாமி​யார் நூர்கதூன் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். பெங்​களூரு​வில் இருக்​கும் அவரது மனைவி நூர்​ஷிகா பேகத்​தை, விசா​ரணைக்கு ஆஜராகு​மாறு போலீ​ஸார் அழைத்துள்ளனர்.

இதுகுறித்​து, அகில் குமார் சந்​தக் கூறிய​தாவது: கடந்த 2019-ம் ஆண்டு எங்​களுக்கு திரு​மணம் ஆனது. சுமார் 3 ஆண்​டு​கள் ஒன்​றாக வாழ்ந்​தோம். ஆரம்​பத்​தில் மதம் தொடர்​பாக எங்​களுக்​குள் கருத்து வேறு​பாடு​கள் எது​வும் ஏற்பட​வில்​லை. பின்னர்் என்னை மதம்​மாற அழுத்​தம் கொடுக்கத் தொடங்​கினர்.

சுமார் 6 மாதங்​களுக்கு முன்பு எங்​களுக்​குள் ஏற்​பட்ட தகராறைத் தொடர்ந்து மனைவி தனது கிராமத்​துக்​குச் சென்​று​விட்​டார். இதையடுத்​து, குடும்​பப் பிரச்​சினையைப் பேசி தீர்த்​துக் கொள்ளலாம் எனக் கூறி எனது மாமி​யார் என்னை அழைத்​தார். அதன்​படி, ஜாலுக்​பாரி பகு​திக்கு சென்​ற​போது, அங்கு அடையாளம் தெரி​யாத 2 பேர் வாக​னத்​தில் என்னை அழைத்​துச் சென்​றனர்.

வாக​னத்​துக்​குள் போதைப்​பொருள் கலந்த ஒரு பொருள் கொடுக்கப்​பட்​டது. அதை சாப்​பிட்டு மயங்​கிய நிலை​யில், எனக்கு சுன்​னத் செய்​யப்​பட்​டது. மேலும், நான் மறுத்​த​போ​தி​லும் மாட்​டிறைச்​சி​யைச் சாப்​பிடு​மாறு கட்​டாயப்​படுத்​தினர். இதையடுத்​து, காவல் துறை​யில் புகார் அளித்​தேன்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்தார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version