Home விளையாட்டு செய்திகள் “அடுத்த சீசனில் வலுவாக மீண்டு வருவோம்” – மும்பை கேப்டன் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை

“அடுத்த சீசனில் வலுவாக மீண்டு வருவோம்” – மும்பை கேப்டன் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை

0

 ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் இரவு ராய்ப்​பூரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி 2 விக்கெட்கள் வித்​தி​யாசத்​தில் 5 முறை சாம்​பிய​னான மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்​கடித்​தது. இந்த ஆட்​டத்​தில் 167 ரன்கள் இலக்கை துரத்​திய ஆர்​சிபி அணி ஒரு கட்​டத்​தில் 19 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்​புக்கு 152 ரன்​கள் எடுத்​திருந்​தது.

ரோமாரியோ ஷெப்​பர்​டு, ரஷிக் சலாம் தார் ஆகியோர் களத்​தில் இருந்த நிலை​யில் அணி​யின் வெற்​றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை​யாக இருந்​தது. முக்​கிய​மான இந்த ஓவரை அனுபவம் இல்​லாத ராஜ் பாவாவுக்கு கொடுத்​தார் மும்பை கேப்டன் சூர்ய குமார் யாதவ். முதல் பந்தை வைடாக வீசிய ராஜ் பாவா, அடுத்த பந்தை நோ-​பாலாக வீசி​னார். இதற்கு மாற்​றாக வீசப்​பட்ட பந்​தில் ரோமாரியோ ஷெப்​பர்டு ஒரு ரன் சேர்த்​தார்.

2-வது பந்தை ராஜ் பாவா வைடாக வீசி​னார். எனினும் ரஷிக் சலாம் தார் ஓடியபடி ஒரு ரன் சேர்த்​தார். இதற்கு மாற்​றாக வீசப்பட்ட பந்​தில் ரன் சேர்க்​கப்​பட​வில்​லை. ஆஃப் ஸ்டெம்​புக்கு வெளியே வீசப்​பட்ட 3-வது பந்தை ரோமாரியோ ஷெப்​பர்டு பேக்வேர்டு பாயின்ட் திசையை நோக்கி வலு​வாக அடித்​தார். ஆனால் அங்கு நின்ற திலக் வர்மா அற்​புத​மாக கேட்ச் செய்​தார்.

11 பந்​துகளை சந்​தித்த ரோமாரியோ ஷெப்​பர்டு 4 ரன்​களில் நடையை கட்​டி​னார். 4-வது பந்தை மீண்​டும் ராஜ் பாவா வைடாக வீசி​னார். இதற்கு மாற்​றாக வீசப்​பட்ட பந்தை புவனேஷ்வர் குமார் டீப் கவர் திசை​யில் சிக்​ஸருக்கு விளாச மும்பை அணி அதிர்ச்சியில் உறைந்​தது. இதனால் ஆட்​டம் முழு​மை​யாக ஆர்​சிபி பக்​கம் சாய்ந்​தது. கடைசி 2 பந்​துகளில் 3 ரன்​கள் தேவை என்ற நிலை​யில் 5-வது பந்​தில் புவனேஷ்வர் குமார் ஒரு ரன் சேர்த்​தார்.

கடைசி பந்தை ரஷிக் சலாம் தார் லாங் ஆன் திசை​யில் அடித்து விட்டு 2 ரன்​களை விரை​வாக ஓடி எடுக்க ஆர்​சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 167 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. புவனேஷ்வர் குமார் 7, ரஷிக் சலாம் தார் 3 ரன்​கள் சேர்த்தனர். ஆர்​சிபி அணிக்கு இது 7-வது வெற்​றி​யாக அமைந்​தது. இதன் மூலம் அந்த அணி 14 புள்​ளி​களு​டன் பட்​டியலில் முதலிடத்துக்கு முன்​னேறியது. 11 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள ஆர்​சிபி 7 வெற்​றி, 4 தோல்வி​களை பதிவு செய்​துள்​ளது.

அதேவேளை​யில் மும்பை இந்​தி​யன்ஸ் அணிக்கு இது 8-வது தோல்வி​யாக அமைந்​தது. இதன் மூலம் அந்த அணி பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறு​வதற்​கான வாய்ப்பை இழந்​தது. 11 ஆட்டங்களில் விளை​யாடி உள்ள மும்பை அணி 3 வெற்​றி, 8 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​கள் பெற்று 9-வது இடத்​தில் தொடர்கிறது. ஆர்​சிபி அணிக்கு எதி​ரான தோல்விக்கு பின்​னர் மும்பை இந்​தி​யன்ஸ் அணி​யின் கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் கூறிய​தாவது: ராஜ் பாவா கடந்த இரு ஆண்​டு​களாக நன்​றாகப் பயிற்சி எடுத்து வரு​கிறார்.

இந்த ஆண்டு அவரைப் பார்த்​த​போது முற்​றி​லும் மாறு​பட்ட ஆல்​-ர​வுண்​ட​ராகத் தெரிந்​தார். இதன் காரண​மாகவே கடைசி ஓவரை வீசும் பொறுப்பை அவரிடம் வழங்​கினோம். அவர், அணியை வெற்​றிக்கு அரு​கில் கொண்டு சென்​றார். பேட்​டிங்​கில் நாங்​கள் 10-15 ரன்​கள் குறை​வாக எடுத்​து​விட்​டோம். தவறான நேரங்​களில் விக்​கெட்​டு​களை இழந்​தோம். ஆனால் நமன் திர், திலக் வர்மா ஆகியோர் பேட்​டிங் செய்த விதம் அழகாக இருந்​தது. அவர்​கள் மன உறு​தி​யைக் காட்​டி​னார்​கள். அவர்​களை நினைத்து நாங்​கள் பெரு​மைப்​படு​கிறோம்.

விளை​யாட்​டின் மீதான காதலுக்​காக இனி வரும் போட்​டிகளில் நாங்​கள் சிறப்​பாக விளை​யாட முயற்​சிப்​போம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்​லாம் எங்​களது சிறந்த ஆட்​டத்தை வெளிப்படுத்த முயற்​சிப்​போம். புள்​ளிப்​பட்​டியலில் கடைசி இடத்தில் இருப்​பது போன்ற கடின​மான நிலைகள் எங்​களுக்​குப் பழக்​கமில்​லை. இது விழுங்​கு​வதற்கு கடின​மான ஒரு கசப்பு மாத்திரை​தான். இருந்​தா​லும், இந்த சீசன் முழு​வதும் பல்​வேறு விஷ​யங்​களை கற்​றுக்​கொண்​டுள்​ளோம். அடுத்த ஆண்​டு நாங்கள்​ இன்​னும்​ வலு​வாகத்​ திரும்​பி வரு​வோம்​.இவ்​வாறு சூர்யகுமார்​ ​யாதவ்​ கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version