Home விளையாட்டு செய்திகள் பிளே-ஆஃப் சுற்றுக்கான அழுத்தம் அதிகரிப்பு: குஜராத் – ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை

பிளே-ஆஃப் சுற்றுக்கான அழுத்தம் அதிகரிப்பு: குஜராத் – ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை

0

ஐபிஎல் தொடரின் லீக் சுற்று இறு​திக்​கட்​டத்தை எட்டி உள்​ளது. அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்தில் இன்று நடை​பெறும் ஆட்​டத்​தில் புள்​ளி​கள் பட்டியலில் 2-வது இடத்​தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 3-வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது.

இரு அணி​களுமே தலா 14 புள்​ளி​களை பெற்​றுள்​ளன. எனினும் நிகர ரன் ரேட் அடிப்​படை​யில் ஹைத​ரா​பாத் அணி 2-வது இடத்தில் உள்​ளது.ஷுப்​மன் கில் தலை​மையி​லான குஜ​ராத் டைட்டன்ஸ் அணி தொடர்ச்​சி​யாக 4 வெற்​றிகளை குவித்​ததன் மூலம் தற்​போது புள்​ளி​கள் பட்​டியலில் வலு​வான நிலை​யில் உள்ளது. கடைசி​யாக அந்த அணி ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்​டத்​தில் 77 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்டிருந்தது.

பாட் கம்​மின்ஸ் தலை​மையி​லான சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி தனது கடைசி ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் அணியை 33 ரன்கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யிருந்​தது. அந்த ஆட்​டத்​தில் ஹைத​ரா​பாத் அணி 235 ரன்​களை குவித்​திருந்​தது. சரி​யான நேரத்​தில் பார்​முக்கு திரும்​பி​யுள்ள ஹைத​ரா​பாத் அணி, தற்​போது புள்​ளி​கள் பட்​டியலில் வலு​வான நிலை​யில் இருந்​தா​லும், அலட்​சி​ய​மாக இருக்க முடி​யாது. ஏனெனில், பிளே-ஆஃப் சுற்றுக்கான போட்டி மிக​வும் கடுமை​யாக இருப்​ப​தால், சிறிய தவறு கூட அவர்​களுக்​குப் பெரிய பாதிப்பை ஏற்​படுத்​தக்​கூடும்.

குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யின் மிகப்​பெரிய பலமே அந்த அணியின் சமநிலை​தான். குறிப்​பாக கேப்​டன் ஷுப்​மன் கில், சாய் சுதர்​சன் ஆகியோரைச் சுற்​றியே அந்த அணி​யின் பேட்​டிங் அமைந்​துள்​ளது. இவர்​கள் இரு​வரும் பவர்​-பிளே ஓவர்​களைச் புத்​தி​சாலித்​தன​மாக எதிர்​கொண்​டு, அணிக்கு வலு​வான தொடக்கத்தை அளித்து வரு​கின்​றனர். ஜாஸ் பட்​லர், வாஷிங்​டன் சுந்​தர் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்​களும் அணிக்கு பலம் சேர்த்து வரு​கின்​றனர்.

முகமது சிராஜ், காகிசோ ரபாடா ஆகியோரின் வேகம் மற்​றும் விக்​கெட் வீழ்த்​தும் திறன், மிடில் ஓவர்​களில் ரஷித் கானின் துல்லியம் மற்​றும் ஆட்​டத்​தின் போக்​கையே மாற்​றக்​கூடிய பந்​து​வீச்சு ஆகியவை அணி​யின் பலத்தை அதி​கரித்​துள்​ளது. அதிரடியான பேட்​டிங் வரிசையைக் கொண்ட அணி​யாக சன்ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் திகழ்​கிறது. நடப்பு சீசனில் ஹைதராபாத் அணி 8 முறை 200 ரன்​களுக்கு மேல் குவித்து மிரட்டி உள்​ளது.

அதி​கபட்​ச​மாக மும்பை அணிக்கு எதி​ராக 249 ரன்​களை விளாசியிருந்​தது. அந்த அணி​யின் முன்​வரிசை வீரர்​களான அபிஷேக் சர்​மா, டிரா​விஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்​ரிச் கிளாசன் ஆகியோர் தங்​களது இடை​வி​டாத அதிரடி ஆட்​டத்​தின் மூலம் எதிரணி​களுக்​குப் பெரும் அழுத்​தத்​தைத் கொடுத்து வருகின்​றனர். இந்த கூட்​டணி குஜ​ராத் அணி​யின் பந்​து​வீச்சாளர்களுக்கு அழுத்​தம் கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும்.

பந்​து​வீச்சை பொறுத்​தவரை​யில் இஷான் மலிங்கா நடப்பு சீசனில் தொடர்ச்​சி​யாக சிறந்த செயல் திறனை வெளிப்​படுத்தி வருகிறார். நடப்பு தொடரில் 16 விக்​கெட்​கள் வீழ்த்​தி​யுள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல் திறன் வெளிப்படக்கூடும். பாட் கம்​மின்​ஸ், ஷிவாங்க் குமார், ஷகிப் ஹுசைன்​ ஆகியோ​ரும்​ பலம்​ சேர்​த்​து வருகின்​றனர்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version