Home தேசிய செய்திகள் ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானின் 11 விமானப் படை தளங்களை அழித்தோம்: முதலாம் ஆண்டு நிறைவு நாளில்...

ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானின் 11 விமானப் படை தளங்களை அழித்தோம்: முதலாம் ஆண்டு நிறைவு நாளில் விமானப் படை தகவல்

0

 ‘‘ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின் போது, பாகிஸ்தானின் 13 போர் விமானங்​கள், 11 விமானப்படை தளங்களை இந்​தி​யப் படைகள் அழித்​தது’’ என்று விமானப்படை தெரி​வித்​துள்​ளது. காஷ்மீரின் பஹல்​காமில் சுற்​றுலா பயணி​கள் மீது பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் கடந்த ஆண்டு நடத்​திய தாக்குதலில் 26 பேர் உயி​ரிழந்​தனர். இதற்கு பதிலடி​யாக இந்​திய ராணுவம் கடந்​தாண்டு மே மாதம் 7-ம் தேதி ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கையை தொடங்​கியது. இதன் முதலாம் ஆண்டு தினம் நேற்று நினைவு கூரப்​பட்​டது.

இதுகுறித்து விமானப்​படை துணைத் தளபதி ஏர் மார்​ஷல் அவதேஷ் குமார் பாரதி அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: கடந்த ஆண்டு மே 7-ம் தேதி மேற்​கொண்ட ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை​யின்போது பாக். எல்​லை​யில் உள்ள 9 தீவிர​வாத முகாம்​களை அழித்​தோம். பாகிஸ்​தானின் 11 விமானப்​படை தளங்​கள், 13 போர் விமானங்​களும் அழிக்​கப்​பட்​டன.

இதில் ரேடார் விமானம் ஒன்று 300 கி.மீ தூரத்​துக்​கும் அப்​பால் வந்​த​போதே தகர்க்​கப்​பட்​டது. இதற்​கான ஆதா​ரங்​களை அனை​வரும் பார்க்​கலாம். ஆனால், பாகிஸ்​தான் தரப்​பில் இந்​தியா மீது குறிப்​பிடத்​தக்க பாதிப்பை ஏற்​படுத்த முடிய​வில்​லை. ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை​யின்போது பாகிஸ்​தான் கூறியதெல்​லாம் தவறான தகவல். இந்​திய ராணுவ கட்​டமைப்பு ஏது​வும் சேதமடைய​வில்​லை. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

ராணுவ துணைத் தளபதி லெப்​டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் நேற்று கூறிய​தாவது: தற்​சார்பு இந்​தியா என்​பது வெறும் முழக்கம் மட்​டுமல்ல, அது உண்​மை​யாகவே இந்​தி​யா​வின் ஆற்றல் பல மடங்கு சக்தி வாய்ந்​தது என்​பதை நிருபித்​தது. இந்தியா​வின் ஆயுதங்​களில் கடாக், ஐஎஸ்ஆர் ட்ரோன்கள் உட்பட 65 சதவீதத்​துக்​கும் அதி​க​மானவை இப்​போது உள்​நாட்​டிலேயே தயாரிக்கப்படுகின்​றன.

ஆபரேஷன் சிந்​தூர் ஒரு நீண்ட காலப் போராக மாறாமல், குறுகிய காலத்​துக்​குள் அதன் இலக்​கு​கள் துல்​லிய​மாக எட்​டப்​பட்ட ஒரு கச்​சித​மான நடவடிக்​கை. ஆபரேஷன் சிந்​தூர் முடிவு அல்ல, ஒரு தொடக்​கம். நாட்​டின் இறை​யாண்மை மற்​றும் பாது​காப்பை இந்​தியா உறு​தி​யுடன் பாது​காக்​கும். நாம் குறுகிய காலத்​தில் இலக்​கு​களைப் பலமாகத் தாக்​கினோம். இதனால்​தான் பாகிஸ்​தான் தாக்​குதலை நிறுத்​தக் கோரிய போது, நாம் போரை நிறுத்த முடிவு செய்​தோம்.

துல்​லிய​மான இலக்​கு​களைத் தாக்க தேவை​யான சரி​யான தகவல்​களை உளவுத் துறை வழங்​கியது. சைபர் பிரிவு தகவல் ஆதிக்​கத்​தைப் பராமரித்​தது. சர்​வ​தேச சூழலை​யும், உள்​நாட்​டுப் பாது​காப்​பை​யும் மத்​திய அரசு திறம்பட கையாண்​டது. குறைந்த சேதங்​களு​டன் ஆபரேஷன் சிந்​தூர் மிக​வும் துல்​லிய​மாக நடத்​தப்​பட்​டது. பல பாது​காப்பு அமைப்​பு​களை இணைத்து செயல்​பட்ட இந்த முறை எதிர்​கால நடவடிக்​கைகளுக்​கு ஒரு முன்​மா​திரி​யாக அமை​யும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

எக்ஸ் தளத்தில் படங்கள் மாற்றம்

ஆபரேஷன் சிந்தூர் முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆகியோர் எக்ஸ் தளத்தில் தங்களது சுயவிவர படத்தை ஆபரேஷன் சிந்தூர் லோகோவுடன் வெளியிட்டனர்.

இதுகுறித்து பிரதமர் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், ‘‘ஓர் ஆண்டுக்கு முன்பு இதே தினத்தில் நமது ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு துல்லிய தாக்குதல் நடத்தி ஈடுயிணையற்ற வீரத்தை வெளிப்படுத்தியது. பஹல்காமில் அப்பாவிகளைக் கொன்ற வர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்தனர். அவர்களின் வீரத்தை நாடு போற்றுகிறது’’ என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், அமித் ஷா, ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ உட்பட பலர் சமூக ஊடகத்தில் சுயவிவரப் படங்களை ஆபரேஷன் சிந்தூர் படங்களுடன் மாற்றினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version