4 பேர் உயிரிழந்த நிலையில் நவி மும்பையில் தர்பூசணி விலை கடும் வீழ்ச்சி

0
23

தெற்கு மும்​பையைச் சேர்ந்த அப்​துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்​ரின் (35), மகள்​கள் ஆயிஷா (16) மற்​றும் ஜைனப் (13) ஆகியோர் கடந்த சனிக்கிழமை இரவு வீட்​டில் நடந்த உறவினர்​கள் சந்திப்புக்​குப் பிறகு தர்பூசணி பழம் சாப்​பிட்​டனர். அதன் பிறகு அனை​வருக்​கும் கடுமை​யான வாந்தி மற்​றும் வயிற்றுப்​போக்கு ஏற்​பட்​டது. சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்​களி​லேயே 4 பேரும் உயி​ரிழந்​தனர்.

உயி​ரிழந்​தவர்களின் பிரேதப் பரிசோதனைக்​குப் பிறகு வெளி​யான பூர்​வாங்க அறிக்​கை​யில், உணவு நச்சு காரணமாக அவர்​களின் மரணம் நிகழ்ந்​திருக்​கலாம் என கூறப்​பட்​டுள்​ளது.

இந்த சூழ்​நிலை​யில், கோடை காலத்​தில் தர்​பூசணி அதிக அளவில் விற்​பனை​யாகும் பழமாக இருந்த​போ​தி​லும், ஆசி​யா​வின் மிகப்​பெரிய மொத்த விவசாய சந்​தைகளில் ஒன்​றான நவி மும்பை வேளாண் உற்​பத்தி சந்​தை​யில் (ஏபிஎம்​சி) தற்​போது அதன் தேவை திடீரென சரிந்​துள்​ளது.

ஒரு கிலோ தர்​பூசணி ரூ.5 முதல் ரூ.7 வரை மட்டுமே விற்கப்​படு​வ​தால், விவ​சா​யிகள் பெரும் நஷ்டத்​தைச் சந்திப்​ப​தாகத் தெரிவிக்​கின்​றனர். பொது​வாக, இதன் மொத்த விற்​பனை விலை ரூ.10 முதல் ரூ.35 ஆகவும், சில்லறை விற்​பனை விலை ரூ.30 முதல் ரூ.100 வரை​யிலும் இருக்​கும்.

ஆனால், தர்​பூசணி சாப்​பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயி​ரிழந்​த​தால் அதை வாங்கு​வதை பொது​மக்​கள்​ தவிர்ப்​ப​தாகக்​ கூறப்படுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here