Home கன்னியாகுமரி செய்திகள் வில்லுக்குறி: குழாய் உடைப்பால்  சாலையில் வீணாகும் குடிநீர்

வில்லுக்குறி: குழாய் உடைப்பால்  சாலையில் வீணாகும் குடிநீர்

0

குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. பேச்சிப்பாறையிலிருந்து கொண்டுவரப்படும் தண்ணீர் வில்லுக்குறியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் கிணற்றில் சுத்திகரிக்கப்பட்டு அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இதில் ஆளுர், சுங்கான் கடை பகுதிகளுக்கும் குழாய்கள் அமைத்து வில்லுக்குறி, கொன்னக்குழி விளை, பரசேரி வழியாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் நான்கு வழிச்சாலை தாண்டி வியாகுல அன்னை ஆலயம் அருகே சாலையில் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இது குறித்து அதிகாரிகளிடம்  தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version