Home கன்னியாகுமரி செய்திகள் நித்திரவிளை: கடன் பிரச்சனை – பெண் தூக்கு போட்டு தற்கொலை

நித்திரவிளை: கடன் பிரச்சனை – பெண் தூக்கு போட்டு தற்கொலை

0

நித்திரவிளை அருகே உள்ள இரையுமன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் லாரன்ஸ் மனைவி மரிய சினேகம் ( 54).   இவர் மகளிர் சுய உதவி குழுக்களில் இருந்து கடன் வாங்கி இருந்தார். அந்த பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் லாரன்ஸ் வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். பின்னர் அவர் மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்தபோது மரிய சினேகம் வீட்டில் சமையலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

இது குறித்து நித்திரவிளை போலீசுக்குதகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மரிய சினேகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version