Home கன்னியாகுமரி செய்திகள் கிள்ளியூர்: மணல் திட்டம் எதிர்ப்பு; காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கிள்ளியூர்: மணல் திட்டம் எதிர்ப்பு; காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

0

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் கதிர்  இயக்க கனிமங்களை அகழ்வு செய்யும் திட்டத்தை கைவிட கேட்டு, காங்கிரஸ் கட்சி சார்பில் கருங்கல் அருகே உதயமார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

மிடாலம் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜஸ்டின் தலைமை வகித்தார். வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். ராஜேஷ் குமார் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.   

இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆஸ்கர் பிரடி, கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜ், பாலப் பள்ளம் பேரூராட்சி தலைவர் டென்னிஸ் உட்பட தொண்டர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version