
குளச்சலில் கோயில் நிகழ்ச்சிக்குச் சென்றபோது மாயமான 14 வயது சிறுமியை போலீசார் ராமநாதபுரத்தில் மீட்டனர். சிறுமியை அழைத்துச் சென்ற உறவினரான இசக்கியப்பனை போலீசார் கைது செய்தனர்.
தனிபடையினர் 4 நாட்களாக தீவிரமாக சிறுமியை தேடி வந்தனர் அப்போது
குளச்சல் அண்ணாசிலை சந்திப்பு பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில், இசக்கியப்பன் தனது மனைவியுடன் சிறுமியை அழைத்துச் சென்றது துப்பு துலங்கியது.
இவர்களை தனிப்படையினர் ராமநாதபுரத்தில் வைத்து மீட்டதாக தெரிகிறது.பின்னர் தனிப்படையினர் பிடித்து குளச்சல் காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் கனகராஜன் அவர்களிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து இசக்கியப்பனை போலீசார் கைது செய்தனர். பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இசக்கியப்பனின் மனைவி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.