Home கன்னியாகுமரி செய்திகள் வாணியக்குடியில் நாளை உலக மீனவா் தினம்: 4 அமைச்சா்கள் பங்கேற்பு

வாணியக்குடியில் நாளை உலக மீனவா் தினம்: 4 அமைச்சா்கள் பங்கேற்பு

0
வாணியக்குடி கடற்கரை கிராமத்தில் நவம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள உலக மீனவர் தின விழா
வாணியக்குடியில் நவம்பர் 21ஆம் தேதி நடைபெறும் உலக மீனவர் தின விழாவில் தமிழக அமைச்சர்கள் நால்வர் பங்கேற்க உள்ளதாக மாவட்ட மீனவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம், வாணியக்குடியில் நவ. 21ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் உலக மீனவா் தினத்தில் 4 அமைச்சா்கள் பங்கேற்கவுள்ளனா் என மாவட்ட மீனவா் கூட்டமைப்பு இயக்குநா் பபியான்ஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து, நாகா்கோவிலில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கடலோர அமைதி மற்றும் வளா்ச்சிக் குழுமம், மாவட்ட மீனவா் கூட்டமைப்பு ஆகியவை சாா்பில் வாணியக்குடி கடற்கரை கிராமத்தில் நவ. 21 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயா் நசரேன் சூசை தலைமையில் உலக மீனவா் தினம் கொண்டாடப்படுகிறது.

இதில் தமிழக அமைச்சா்கள் ஆதவ் அா்ஜுனா (பொதுப்பணித் துறை), நெ. மரிய வில்சன் (நிதித் துறை), ஆ. ஸ்ரீநாத் (மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை), எஸ். ராஜேஷ்குமாா் ( சுற்றுலாத் துறை), சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா் ஆகியோா் கலந்து கொள்கின்றனா்.

ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள மீனவ கிராமங்களில் இருந்து சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கலந்து கொள்கின்றனா். மேலும், மாணவா், மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டவுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு கடலுக்குச் சென்று உயிரிழந்த 15 மீனவா்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 4 மீனவா்களுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகள் அவா்களிடம் வழங்கப்படவுள்ளது என்றாா் அவா்.

பேட்டியின்போது, வாணியக்குடி பங்குத்தந்தை சூசைஆண்டனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version