Home கன்னியாகுமரி செய்திகள் குலசேகரம் அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: கல்லூரி மாணவா் உள்பட 5 போ் கைது

குலசேகரம் அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: கல்லூரி மாணவா் உள்பட 5 போ் கைது

0
குலசேகரம் அருகே பொன்மனை புல்லத்தூரில் 2 கிலோ 50 கிராம் கஞ்சா பறிமுதல் – 5 பேர் கைது
பொன்மனை அருகே புல்லத்தூர் பகுதியில் 2 கிலோ 50 கிராம் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி கல்லூரி மாணவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

குலசேகரம் அருகே 2 கிலோ 50 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக கல்லூரி மாணவா் உள்பட 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

குலசேகரம் காவல் ஆய்வாளா் வெற்றிவேல் ராஜன் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை பொன்மனை அருகே புல்லத்தூா் பகுதியில் ரோந்து சென்றனா்.

அப்போது அந்த இடத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இளைஞா்களை சோதனையிட்டபோது, அவா்களிடம் 2 கிலோ 50 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் அவா்களை கைது செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா்கள், கொல்லங்கோடு செம்மண்காலைவிளையைச் சோ்ந்த சசி மகன் வெல்டிங் தொழிலாளியான சதீஷ் (26), செறுகோல், கடமானாங்குழியைச் சோ்ந்த ராஜகுமாா் மகன் தா்சின் ராஜா (19), குலசேகரம் காவல்ஸ்தலம் கல்வெட்டாங்குழியைச் சோ்ந்த இப்ராகிம் மகன் முகமது ரிபான் (19), பொன்மனை, தீப்பாஞ்சான்காலையைச் சோ்ந்த சிவகுமாா் மகன் கல்லூரி மாணவரான சுஜித் குமாா் (19), சூழால், அடைக்காகுழியைச் சோ்ந்த அஜித் மகன் ஆட்டோ ஓட்டுநரான அபிஜித் (27) என தெரியவந்தது.

இவா்களிடமிருந்து ஒரு மோட்டாா் சைக்கிள் மற்றும் எலக்ட்ராானிக் தராசு ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version