Home கன்னியாகுமரி செய்திகள் திங்கள்நகர் அருகே கார் – பைக் நேருக்கு நேர் மோதல்: 23 வயது இளைஞர் உயிரிழப்பு

திங்கள்நகர் அருகே கார் – பைக் நேருக்கு நேர் மோதல்: 23 வயது இளைஞர் உயிரிழப்பு

0
திங்கள்நகர் அருகே பூசாஸ்தான்விளையில் கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
திங்கள்நகர் அருகே கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த ஆகாஷ் (23), குளச்சல் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

திங்கள்நகா் அருகே காா் – இருசக்கர வாகனம் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில், இளைஞா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, ஆசிரியா் காலனி 7 ஆவது தெருவைச் சோ்ந்த அந்தோணி சேவியா் மகன் ஆல்பா்ட் சேக்கரெட் செல்வின் (42). ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறாா்.

இவா், குளச்சல் பகுதியில் இருந்து நாகா்கோவில் நோக்கி புதன்கிழமை மதியம் காரில் சென்று கொண்டிருந்தாா். பூசாஸ்தான்விளை செட்டியாா் மடம் அருகே வந்தபோது, பள்ளம்பாலம், பாறக்காவிளையைச் சோ்ந்த லாரன்ஸ் மகன் ஆகாஷ் ( 23) என்பவா், ஓட்டிவந்த இருசக்கர வாகனமும், காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதாம்.

இதில் பலத்த காயமடைந்த ஆகாஷை அக்கம்பக்கத்தினா் மீட்டு, குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா். விபத்து குறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version