
நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலைய யார்டில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 11ஆம் தேதி திருவனந்தபுரத்திலிருந்து வந்த பயணிகள் ரயில், பராமரிப்புக்காக யார்டில் நிறுத்தப்பட்டிருந்தது. இன்று கோட்டயம் செல்லும் ரயிலில் மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டியை இணைக்க ஊழியர்கள் சென்றபோது கடும் துர்நாற்றம் வீசியுள்ளது.
பெட்டிக்குள் சோதனையிட்டதில் இருக்கைக்கு அடியில் பெண் சடலம் கிடந்தது.
தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பெண் உயிரிழந்து 5 நாட்களுக்கு மேலாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் யார், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
பிரேதப் பரிசோதனை முடிவுக்குப் பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும்.