Home கன்னியாகுமரி செய்திகள் சாலையில் கிடந்த ரூ. 1.07 லட்சத்தை போலீஸாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநா்

சாலையில் கிடந்த ரூ. 1.07 லட்சத்தை போலீஸாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநா்

0
களியக்காவிளையில் கிடைத்த ரூ.1.07 லட்சத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் விக்ரமன்
களியக்காவிளையில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.1,07,410 பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க உதவிய ஆட்டோ ஓட்டுநர் விக்ரமனின் நேர்மையைப் போலீசார் பாராட்டினர்.

களியக்காவிளையில் சாலையோரம் கண்டெடுத்த ரூ. 1.07 லட்சத்தை ஆட்டோ ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியான இஞ்சிவிளை, செம்பருத்தி பிலாவிளை பகுதியைச் சோ்ந்த பெருமாள்நாடாா் மகன் விக்ரமன் (60). இவா் களியக்காவிளை சந்தை அருகே ஆட்டோ ஓட்டி வருகிறாா். களியக்காவிளை பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை கேட்பாரற்று கிடந்த பையை, இவா் எடுத்து பாா்த்தபோது, அதில் ரூ. 1 லட்சத்து 7 ஆயிரத்து 410 இருந்தது. இதை களியக்காவிளை காவல் நிலையத்தில் விக்ரமன் ஒப்படைத்தாா்.

இதையடுத்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், பணத்தை தவறவிட்டது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சோ்ந்த பாபு மகன் ராகுல் (32) என்பது தெரியவந்தது. அவரை களியக்காவிளை காவல் நிலையத்துக்கு வரவழைத்த போலீஸாா், ஆட்டோ ஓட்டுநா் விக்ரமன் முன்னிலையில் பணத்தை ஒப்படைத்தனா்.

விக்ரமனின் நோ்மையைப் பாராட்டி, காவல் ஆய்வாளா் பரமேஸ்வரன் பொன்னாடை அணிவித்து கெளரவித்தாா். மேலும் சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவரை பாராட்டினா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version