Home கன்னியாகுமரி செய்திகள் கோட்டாறு சவேரியாா் பேராலயத் திருவிழா: குமரி மாவட்டத்திற்கு டிச. 3இல் உள்ளூா் விடுமுறை

கோட்டாறு சவேரியாா் பேராலயத் திருவிழா: குமரி மாவட்டத்திற்கு டிச. 3இல் உள்ளூா் விடுமுறை

0
கோட்டாறு தூய சவேரியார் பேராலயத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 3ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
கோட்டாறு தூய சவேரியார் பேராலயத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

கோட்டாறு, தூய சவேரியாா் பேராலயத் திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிச. 3ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோட்டாறு, சவேரியாா் பேராலயத் திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு டிச. 3ஆம் தேதி உள்ளூா் விடுமுறை வழங்கப்படுகிறது.

இதற்கு ஈடாக டிசம்பா் மாதம் 2ஆவது சனிக்கிழமை (12.12.2026) அன்று மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version